(Reading time: 18 - 35 minutes)
சிறுகதை - திரும்புதல் - ரெ.கார்த்திகேசு
சிறுகதை - திரும்புதல் - ரெ.கார்த்திகேசு

ஓட்டுநரும் சூட் போட்டுக் கொள்வதும் சில்க் டை கட்டுவதும் அவனைப் பெரிய மனிதனாக ஆக்குவதாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான். சுடர் தன் கலாச்சார வேர்களுக்கு ஏங்கினாலும் அவன் நலனே தன் நலன் என இருப்பதும் தன் கலாச்சார வேர்களின் ஒரு பகுதிதான் என அமைதி பெற்றாள்.

   

ஆனால் இதன் மொத்த விலையாக இரண்டு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்திருப்பதென்பது எளிதில் சமரசப் படுத்திக் கொள்ளும் விஷயமாக இருக்கவில்லை.

   

*** *** ***

   

"விளையாட்றியா சுடர்?" என்று கேட்டான் அருண். அவன் கேள்வியில் கோபம் கொப்புளித்திருந்தது.

   

அப்பாவின் வீட்டில் அவர்கள் கழித்த இரவு வேறு மாதிரி இருந்தது. அங்கே கார்களின் தொடர்ந்த இரைச்சல்கள் இல்லை. கவிழ்ந்திருக்கும் மோனத்தை மெல்ல வருடும் தென்னை ஓலைகளின் சலசலப்புக்களும் ஆட்டுக்குட்டிகளின் அரைத்தூக்கத்துக் கனைப்புகளுமே இருந்தன. அப்பா எல்லா அறைகளுக்கும் ஜன்னலில் கொசு வலைகள் அடித்து வைத்திருந்தார். ஆகவே உள்ளே கொசுத் தொல்லைகள் இல்லை. ஃபேன் போட்டிருந்தார். ஜன்னலில் கொஞ்சமாகக் காற்று வந்தது.

   

ஜெய் களைத்துத் தூங்கி விட்டிருந்தான். அவனுக்கு எப்போதும் பெரிய படுக்கையில் தனியாகப் படுத்துத்தான் பழக்கம். ஆனால் இந்த வீட்டில் அப்பாவுடனும் அம்மாவுடனும் ஒரு சிறிய படுக்கையில் உடம்புச் சூட்டைப் பகிர்ந்து கொண்டு படுப்பது அவனுக்குப் பிடித்தமாக இருந்தது. ஆடுகள் பற்றிப் பல கேள்விகள் கேட்டுவிட்டு அயர்ந்து போய் அருணின் மீது ஒரு காலைத் தூக்கிப் போட்டவாறு அவன் தூங்கிப் போனான்.

   

அப்போதுதான் சுடர் அந்த விஷயத்தை ஆரம்பித்தாள்.

   

"அருண், நான் ஒண்ணு கேக்கிறேன்!"

   

அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். அவள் இத்தனை தயக்கத்துடன் எதனையும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.