வாய் மதுவுக்கு ஊறியது. அவர்கள் தன்னைத் தூக்கியெறிந்த போது அந்த போத்தலையாவது கையோடு எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம். அருமையான விஸ்கி. ஏதோ ஒரு விமான நிலையத்தில் டியூட்டி ·பிரீயில் கிரெடிட் கார்ட் கொடுத்து வாங்கியது. எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டான்கள். என் விஸ்கியையும், என் பணத்தையும், என் கம்பெனியையும், என் வாழ்க்கையையும்....
இப்போது எங்கே போக வேண்டும்? ஆமாம், எதிரே பூங்காவுக்குள். ஏன் போக வேண்டும்? மறந்து விட்டது. ஆ, ஆமாம்! இருளுக்குள் போக வேண்டும். அங்கே போய்...? யோசிக்க வேண்டும். யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் முடிந்து விட்டது. அழ வேண்டும். அழுது முடிந்த பின் செத்துப் போக வடூ பார்க்க வேண்டும்.
பூங்காவைச் சுற்றி வேலி போட்டிருந்தார்கள். வேலியோரமாக அதன் வாசலைத் தேடி நடந்தான். நுழைந்தான். பூங்காவில் சிறுபிள்ளைகள் விளையாட ஊஞ்சல்கள் இருந்தன. ஏறி இறங்க ஏணிகள், சருக்குப் பலகைகள் இருந்தன. பெஞ்சுகள் இருந்தன. ஆங்காங்கே விளக்குகள் இருந்தன. அந்த வெளிச்சம் பிடிக்கவில்லை.
தூரத்து மூலையை நோக்கி நடந்தான். அங்கே சிமிந்தியால் உயரமான சுவர் போட்டு வைத்திருந்தார்கள். சுவருக்கு அந்தப் பக்கம் மூன்று பெரிய குப்பைத் தோம்புகள் இருந்தன. அன்றைய குப்பைகள் நிரம்பி வழிந்தன. கடூக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்குள் புழுக்கள் புகுந்த அழுகும் நாற்றம் இருந்தது.
இது நல்ல இடம். நானும் குப்பை. அழுகிய நாற்றம் வீசும் பொருள். சரியான இடம். இங்கே இருள் இருக்கிறது. நான் ஒளிந்து கொள்ளலாம்.
சிமிந்தியில் சரிந்து சாய்ந்தான். கால்கள் மடக்காமல் நீண்டிருந்தன. கோட்டு ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது. தலை சாய்ந்து கொண்டது. மயக்கம். ஒரு கையால் சிமிண்டுத் தரையில் முட்டுக் கொடுத்துக் கொண்டு சாய்ந்தான்.
கொஞ்ச நேரம் அப்படியே தூங்கினான். வாயிலிருந்து வடூந்த எச்சிலாலும் அவன் குறட்டைச்