"ஐயோ!" என்றான் நாகராஜ். பாஸ்கரன் அழுதான். குடித்தான். அழுதான்.
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. லேசு லேசாக மேகங்கள் கொண்ட வானம். இடைவெளியில் சில நட்சத்திரங்கள். பிளந்த தேங்காய் மட்டை போல மேகங்களுக்கிடையில் ஓரம் பிரிந்த நிலாக் கீற்று. நேரமும் வானமும் நிலாக்கீற்றும் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை.
"நாகராஜ். இந்த ஒலகத்தில இருந்து பிரயோஜனம் இல்ல! இனி யாரும் என்ன மதிக்க மாட்டாங்க!"
"என்னயுந்தாங்க, மதிக்கிறதில்ல! புள்ள கூட மதிக்கிறதில்ல!"
"காறித் துப்புவாங்க நாகராஜ்!"
"இப்பவே துப்புறாங்க!"
"அப்ப ஏன் உயிரோட இருக்கணும்?"
"பிரயோஜனம் இல்ல!"
"நாகராஜ், எங்கூட வா! செத்துப் போகலாம்!"
"சரிங்க!"
"எப்படி?"
நாகராஜ் யோசித்தான். "உங்களுக்கு நீச்சல் தெரியுமா?"
"தெரியாது!"
"தோ அந்த பங்களாவுக்குப் பின்னால ஒரு நீச்சக்குளம் இருக்குங்க! அதில போயி