உளுந்திடலாம்!"
"வா!"
நாகராஜ் கை கொடுத்து எழுப்பி விட்டான். இருவரும் தடுமாறி நடந்தார்கள்.
"வீட்டுக்குள்ள எப்படி நொளையிறது நாகராஜ்?"
"வேலியில ஒரு ஓட்டயிருக்கு. நொளஞ்சிடலாம்!"
"ஒனக்கு எப்படித் தெரியும்?"
"நானும் குப்புசாமியும் போட்டு வச்சோம்!"
"ஏன்?"
நாகராஜ் பேசாமல் இருந்தான்.
"வீட்டில ஆளுங்க இல்ல?"
"ரொம்ப நாளா ஆள் இல்ல! சும்மாதான் கெடக்குது!"
"கார்டு!"
"அவன் முன்னால உக்காந்து தூங்கிக்கிட்டிருப்பான்! நாம பின்னால போலாம்!"
தடுமாறித் தடுமாறி வேலியோரம் வந்து வேலியை விலக்கி பங்களாவின் பின்னால் வந்தார்கள். புல்லும் பூண்டும் வளர்ந்து கிடந்தது. பணக்காரர்களால் பேராசையுடன் ஆடம்பரமாகக் கட்டப்பட்டு உபயோகிக்க ஆளில்லாமல் கவனிக்கப் படாமல் கைவிடப்பட்ட செல்வத்தின் பாழடைந்த சின்னம். சோம்பேறிக் காவல்காரனின் அரைகுறை கண்காணிப்பில்....