ஊட்டுக்கே போய்ட்டோம். வெளிய நின்னு சத்தம் போட்டேன் பாருங்க! "வாடி வெளியே"ன்னன்! கதவ இறுக்கிப் பூட்டிக்கிட்டாங்க. "உன் புள்ள எனக்குப் பொறந்த புள்ளைன்னா இப்பவே எங்கிட்ட குட்றி"ன்னன்"
"புள்ள வேற இருக்கா!"
"ஒரு பொண்ணுங்க! பத்து வயசாச்சி"
"குப்புசாமி யாரு?"
"என் கூட்டாளி. சிமிந்தி வேல செய்வான்!"
"அப்புறம்!"
"எல்லாம் வென வச்சிட்டாங்க! அவ கதவ தொறக்கவே இல்ல! அவன் அண்ணங்காரன்க வந்து அடிச்சானுங்க! அப்புறம் வந்திட்டோம்!"
"பொம்பிளங்கள நம்பக் கூடாது நாகராஜ்!"
"ஆமாங்க!"
"ஒன் பொண்டாட்டி இனி வருவான்னு நெனைக்கிறியா? திருந்துவான்னு நெனைக்கிறியா? வரமாட்டா நாகராஜ்! ஒன் பொண்ணயும் குடுக்க மாட்டா!"
சிறிது நேரம் குடித்தார்கள். நாகராஜ் தன் போக்கெட்டிலிருந்து கார் சாவியை எடுத்துக் கையில் நெருடிப் பார்த்தான்.
"என்ன வெல இருக்கும் உங்க காடி?"
"ஒன்ற லட்சம் வெள்ளி. அதுமேல கடன் ஒரு லட்சம் வெள்ளி!"