(Reading time: 25 - 49 minutes)

ங்க பொண்ணை எனக்கு பிடிக்குமான்னு தெரியலையே..  போட்டோவை  கூட காட்டாம அல்லாட விடுறீங்க’, சுற்றிலும் கண்களை சுழல விட்டான்... ஆனால், அவள் கண்களில் அகப்படவில்லை...

சரவணனுக்கு மூன்று பெண்கள். இளவரசி தான் கடைக்குட்டி. பலகாரங்களை  இளவரசியின் தாயாரும், சகோதரிகளுமே  எடுத்து வந்து கொடுக்க, நொந்து போனான் இவன்.

ரஞ்சிதம், அவள் தாயாரை நோக்கி, “இளவரசியை எங்கே காணோம்?”, கேட்டார்  பிள்ளை மனதை புரிந்து கொண்டவராக.

“அவளாவே மாப்பிள்ளைக்கு ஏதோ ஸ்பெஷல்லா டீ போட்டு கொண்டு வர்றேன்னு சொன்னாளே!“, என்று அவள் சகோதரி சொன்ன சில நொடிகளிலே... கையில் டீ கோப்பையை தாங்கி வந்தாள் அந்த இளவரசி!!

“இவளா????!!!”, அவளைக் கண்டதும் அதிர்ந்தான் சின்னக் கண்ணன்....

இரண்டு வாரத்திற்கு முன்னால், அவன் பிஸியான வேலை நேரத்தில், ஒரு அறக்கட்டளை சம்பந்தமாக அவனைப் பார்க்க ஒரு பெண் ஒருத்தி காத்திருப்பதாக காரியதரிசி சொல்ல..

‘ஏதாவது டொனேஷனா இருக்கும்! செக் குடித்து அனுப்ப வேண்டியது தான்’, என்று எண்ணிக் கொண்டே உள்ளே வரச் சொல்ல அனுமதிக்க..

இவனை சந்திக்க வந்தவள் இளவரசி! அது அவனுக்கு தெரியாதே!

உள்ளே வந்தவளை நிமிர்ந்தும் பார்க்காமல், கணினியிலே கண்ணை வைத்த படி,

“கம் இன்”, என்று வாயசைக்க... கை அவளை உட்காருமாறு சைகை செய்தது... அவனின் வரவேற்கும்  விதத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு பயமும், தயக்கம் எட்டிப் பார்க்க,

“ஹாய்... ஐ எம் ரசி”, என்று சற்றே தயக்கத்துடன் ஆரம்பித்தவளை ஏறிட்டவன்,

“உங்களுக்கு மூன்று நிமிஷம் டைம்! சீக்கிரமா சொல்ல வந்ததை சொல்லிட்டு போங்க.. இல்லைன்னா ப்ராப்பரா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வாங்க”,

என்று முகத்தில் அடித்தாற் போல சொல்லி விட்டு கணினியில் மூழ்கினான். அவன் கடுமையான பேச்சில் முதலில் திகைத்தவள்.. பின் ஒரு வழியாக தன்னிலைக்கு வந்து தொண்டையை செருமிய படி,

தான் வந்திருக்கும் அறக்கட்டளையைப் பற்றி ஆரம்பிக்க, இவன் வேகமாக செக் புக்கை எடுக்க.. அதை பார்த்து திகைத்தவள்,

“உங்களுக்கு நேரம் கிடைக்கிறப்போ இந்த வெப்சைட்ல போய் பாருங்க. அதில் ட்ரெஸ்ட் ஓட அட்ரெஸ் இருக்கு. அவங்களை நேரில் பார்த்து உங்களுக்கு திருப்தியா இருந்தா மட்டும் ஹெல்ப் பண்ணுங்க போதும்!”, என்று அந்த முகவரியை கொடுத்தாள்.

அவள் சொன்ன விதம், அவனையும் அறியாமல் அவள் மீது ஒரு மரியாதை உருவாக்க..

“ஸ்யர்! வில் டு”, என்று உறுதியான குரலில் சொல்லிக் கொண்டே அதை வாங்கிக் கொண்டவனின் விழிகளை சந்தித்தவள்,

“மூணு நிமிஷமோ. முப்பது நிமிஷமோ பார்க்க வந்தவங்களுக்கு ஒரு டீ கூட கொடுக்க மாட்டீங்களா? உங்களுக்கும் இதே தான் நடக்க போகுது!”, என்று குறும்பு பொங்க சொல்லி விட்டு சென்று விட்டாள். அன்று அவள் சொன்னது இவனுக்கு விளங்கவில்லை..

ஆனால், இப்பொழுது உதாரணம் காட்டி அல்லவா விளக்கி விட்டாள்... சரியாக அரை மணி நேரம் தவிக்க விட்டு உணர்த்தி இருக்கிறாள். ஆனால், அவள் மீது கோபப்படவே தோன்றவில்லை அவனுக்கு! அவன் அம்மா சொன்ன,

“புத்திசாலி, சுட்டி “, என்ற அடைமொழிகள் அவன் மனதை ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

அன்று அவள் கொடுத்த அட்டையை வேலை மும்முரத்தில் சட்டை பாக்கெட்டில் வைக்க.. அதைத் தான் நேற்று ரஞ்சிதம் கொடுத்தார். அது ஒரு புற்று நோய் மறுவாழ்வு மையம். ராத்திரி நேரத்தில் அதை சொன்னால் அம்மாவுக்கு தந்தையின் நினைவு வந்து தூக்கம் கெடும் என்று எண்ணி தான் நண்பன் வீட்டிற்கு சென்றதாக மறைத்தான்.

‘நேத்து அந்த ட்ரஸ்ட் ரிசப்ஷனிஷ்ட்கிட்ட  என் பேரை சொன்னதும் நமுட்டு சிரிப்புடன் பார்த்தாளே! இவளுக்கு தெரிந்தவளாக தான் இருக்க வேண்டும். ஆக, அங்க நான் போய் வந்த பிறகு தான் இந்த பெண் பார்க்கும் படலமா!’, என்று எண்ணிக் கொண்டவன்....

அவளின் உள்ள அழகையும்.. அவளிடம் உள்ள அழகையும் ஒரு சேர வியந்தான். அன்று, ரசி என்று அவன் முன்னே வந்து நின்ற பொழுது ரிஷி போல இருந்தவன்.. இன்றோ.. அவளை ரசிப்பதே தவம் என்றிருக்க...

‘ஆபிஸ்லே டீ கொடுக்கலைன்னு இப்படி அல்லாட விட்டுட்டியே ரசி!!! ராட்சசியின் ஷார்ட் ஃபார்ம்!!! அழகான ராட்சசி’, உள்ளம் வித விதமாக அவளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தது.

அவன் மனதிற்குள் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தவள்.. நிலத்திலும் அடியெடுத்து வைத்து அவனை நெருங்கி... டீ கோப்பையை நீட்ட...

ஆர்வத்துடன் அவள் விழிகளை சந்திக்க.. அவள் விழிகளோ  டீ கோப்பை பார்க்குமாறு கட்டளையிட்டது அவனை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.