(Reading time: 25 - 49 minutes)

ன் மனசை கன்வின்ஸ் செய்ய என் ஹேன்ட்பேக்கை நடுவில் வைச்சிட்டு அவர் பைக்கில் ஏறினேன்! என் மூச்சு காத்து கூட உங்களைத் தவிர வேறு யாரையும் நெருங்கக் கூடாது நினைக்க தோணுது சின்னா.. இப்பெல்லாம்..”,

என்றவளின் கரங்கள் அவனை இறுக்கி பிடிக்க...

பளார் என்று அரை வாங்கிய உணர்வு அவனுக்கு..

‘என் மேல் எத்தனை ஆசையும், நம்பிக்கையும் வைத்திருக்கிறாள்! இவளை கேவலமாக நினைத்து விட்டேனே!!!’ 

குற்ற உணர்வு அவனை நெஞ்சை கிழிக்க... 

சட்டென்று ப்ரேக்கிட்டு சாலையோரமாக பைக்கை நிறுத்த... அவனை இறுக பற்றியிருந்தவள் இன்னும் அவனை விடாது.. கண்ணாடியிலே அவன் முகத்தை பார்க்க...

அவளை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை இவனால்..

“உன்னை இன்னொருத்தனோட பார்த்தப்போ.... ஸாரிடா... என் பொக்கிஷத்தை சந்தேகப் பட்டுட்டேன்!!”, என்று மனது வருந்தி சொல்ல..

அவன் மனக் குன்றலை பார்த்தவள் வண்டியிலிருந்து இறங்கி அவன் முன் வந்து,

“என்ன ஆச்சு சின்னா? ஏன் சந்தேகம் அது இதுன்னு பெரிய வார்த்தை பேசுறீங்க?”, என்று விசாரிக்க,

மனதை மறைக்காமல் தன் எண்ண ஓட்டங்களை சொன்னான் இவன். அதை பொறுமையாக கேட்டவள்,

“கைக்குள்ள இருக்கிற பொக்கிஷம் களவு போயிடுச்சுன்னு நினைக்கிறது சந்தேகம்... கைக்குள்ள இருக்கிற பொக்கிஷம் களவு போயிடக் கூடாதுன்னு பயப்படுறது பொசசிவ்னஸ்... உங்களுக்கு  வந்தது சந்தேகம் இல்லை.. பொசசிவ்னஸ்!”

“நீங்க உங்கம்மாகிட்ட என்னை விட்டு கொடுக்க கூடாதுன்னு என்ன பாடு பட்டு இருக்கீங்க.. இதிலே தெரியலையா.. உங்களால என்னை வெறுக்கவோ.. சந்தேகப்படவோ முடியாதுன்னு!!!”,

“உண்மையான அன்புக்கு ஆக்கவும், காக்கவும் தான் தெரியும்! அழிக்க மட்டும் தெரியவே தெரியாது!”, என்று இவள் விளக்க..

தன்னவளிடம் மனம் விட்டு பேசியதும்.... அவள் கொடுத்த ஆறுதலும் இவன்  மனதை இறகு போல லேசாக்கியது.

“உனக்கு என் மேல கோபமே இல்லையா?”, என்று கேட்க..

புன்னகையுடன் மறுப்பாக தலையசைத்தவளின்  தாடையை பற்றி அவள் விழி நோக்கி,

“என் பொக்கிஷத்தை கைக்குள்ளே வச்சுக்கணும் போல இருக்கு!”, என்று ஏக்கத்துடன் சொன்னவன் பார்வையாலே அவளை பருக...

இவ்வளவு நேரம் இயல்பாக பேசியவள், இவனின் இந்த விழுங்கும் பார்வையில் திணறி தான் போனாள்!!! முகம் நாணத்தில் சிவக்க. பார்வையை தாழ்த்தி,

“பத்திரமா விடுவீங்கன்னு நம்பி தான் ரஞ்சி மிஸ் அனுப்பி வைச்சாங்க”, என்று மெல்லிய குரலில் நினைவுறுத்திய படி.. வண்டியில் ஏறப் போனவளின் கரம் பற்றி நிறுத்தியவன்...

“அப்போ என்னை உன் கைக்குள்ளே வைச்சுக்கிறியா? ”, என்று அவள் காதருகில் கிசுகிசுத்த படியே, தனது பாக்கெட்டில் இருந்த பிரேஸ்லெட்டை பற்றிய கரத்தில் அணிவித்தான்.

சின்னா என்று அவன் பெயர் பொறித்திருப்பதை கண்கள் மிளிர பார்த்தவளிடம்,

“உனக்கு நம்ம பேரை விட.. இந்த பேர் தானே பிடிக்கும்!!”, என்று கேட்க.. சட்டென்று நிமிர்ந்து இவன் விழி கலந்தவளின் கண்கள் பளபளத்தன.

“இன்னைக்கு ஸ்பெஷல் டேன்னு நீ அம்மாகிட்ட சொல்றதுக்கு முன்னாடியே தெரியும் ரசி!”, என்று அவன் சொன்ன  பொழுது...

ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து விட்ட உணர்வு இருவரிடமும்.   

அவளை வீட்டில் விட்டுட்டு தன் வீட்டிற்கு திரும்பிய பொழுது... ரஞ்சிதம் வீட்டிற்கு வந்து விட்டிருந்தார். பசியோடு வந்தவனுக்கு இரவு உணவை எடுத்து வைத்த அன்னையின் முகத்தையே உற்று நோக்கினான். அவர் முகத்தில் சோர்வு அப்பட்டமாக தெரிந்தது.

‘கடவுளே, இளவரசியை தப்பா நினைச்சு வருத்த படுறாங்களோ!!’, அவனுக்குள் இருந்த பயத்தை மறைத்து,

“என்னம்மா டல்லா இருக்கீங்க”, இவன் கேட்க...

“உங்கப்பாவை நினைச்சு தான்.. கடைசி காலத்தில் நிறைய கஷ்டபட்டுட்டார்... அந்த நேரம் எல்லாம் எனக்கு துணைக்கு நின்றது சரவணன் சார் தான்! ஆஸ்பத்திரிக்கும் வீட்டிற்குமா அல்லாடின சமயம் உதவிக்கு இருந்தது அவர் தான். சில சமயம் நடுராத்திரியில் ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்ப வேண்டியிருக்கும்!  அங்கேயே தங்கினா எக்ஸ்ட்ரா சார்ஜ் வரும்! அப்பாவுக்கு ட்ரீட்மெண்ட்க்கே காசு இல்லாத சமயம் அது.”

“ஆட்டோல போக வேண்டாம்மா.. தங்கச்சி மாதிரி தானேம்மா நீ எனக்கு! வா நானே விட்டுடுறேன்னு” சொல்வார் சரவணன் அண்ணா. எனக்கும் வேற வழியில்லாம.. ஹேன்ட் பேக்கை நடுவில் வைச்சிட்டு போவேன். இன்னைக்கு இளவரசியும் அப்படி தான்டா அந்த தம்பி பைக்கில் இருந்து இறங்கின்னா..

அதை பார்த்தப்போ என்னையே பார்க்கிறது போல இருந்தது.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.