(Reading time: 25 - 49 minutes)

ன்று அவள் சொன்ன பொழுது... இழப்பை கடந்து வந்த தனக்கு கூட தோன்றவில்லை இந்த எண்ணம்! எவ்வளவு உயர்ந்த எண்ணம்! எனக்கு கிடைத்தது பெண் அல்ல.. பொக்கிஷம்! நெகிழ்ந்தான் இவன்!!

“ஒரு வேளை அங்க போகாம இருந்திருந்தேனா....”, அந்த பொக்கிஷத்தை இழந்திருப்பேனே.. பயப்பந்து உருவாக.. மனதில் உள்ளதை அப்படியே அவளிடம்  கேட்டான்..

“UK ல இருந்து அக்கா பேமிலி அதிரடி விசிட். அதான் அதிரடியா பொண்ணு பார்க்கிற ப்ளான்! மத்த படி, நீங்களா அந்த ட்ரெஸ்ட்க்கு போகாம இருந்திருந்தா, மிசஸ் இளவரசி கண்ணன், ரஞ்சி மிஸ் ஸ்டைல் ஸ்பெஷல் டச்... அதான் குட்டு வைத்து கூட்டிகிட்டு போயிருப்பா”, என்று சொல்லி சிரிக்க..

‘அப்போ எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே அவளுக்கு என்னை பிடித்திருக்கிறது’, என்றெண்ணியவன் நெஞ்சம் குழந்தையாய் துள்ளி குதித்தது...

அவளோ தொடர்ந்தாள்...

“ஆனா சின்னா, நீங்க அந்த டிரேஸ்ட்க்கு போயி.. அங்க உள்ளவங்ககிட்ட மோட்டிவேடிங்கா பேசுனீங்கன்னு தெரிஞ்சப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா.....”,

என்று உணர்ச்சி வசப்பட்டு பேச ஆரம்பித்தவள்..... அப்படியே நிறுத்திக் கொள்ள... அவள் பேச்சில் உண்டான உண்டான மயக்கத்தில்...

“எப்படி இருந்தது? அப்படியே இறுக்கி அணைச்சு.....“, என்று அவள் ஆரம்பித்ததை முடிக்க சொல்லி இவன் தூண்ட...

“...போங்க சின்னா”, வெட்கத்தில் குழைந்த இளவரசியின் குரல் இன்னும் மனதில் அழியா தடமாய்..

இனிக்க இனிக்க பேசிய அவள் பேச்சுக்கள்... இன்று ஏனோ மனதை கூறு போட்டுக் கொண்டிருந்தது.

மாற்று பாதையில் வந்து அந்த ‘மல்ட்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்’, வாகன நிறுத்துமிடத்தில் தனது பைக்கை நிறுத்தியவன் உள்ளம் குமுறியது...

‘என்கிட்ட அத்தனை டயலாக் பேசிட்டு!!!! இன்னைக்கு..!’, ஒரு வித எரிச்சலும் ஆற்றாமையும் அவனை சூழ்ந்து கொள்ள, ஏமாற்றத்தை பொறுக்க முடியவில்லை அவனால்!

இவன் எண்ண ஓட்டம் இப்படி இருக்க, பைக்கை அவன் பார்க்கிங் லாட்டில்  நிறுத்தவும் இறங்கிக் கொண்ட ரஞ்சிதம்,

“கண்ணா, எனக்கு பயமா இருக்குடா! ராஜன் ஸார் கலகலப்பான மனுஷன். இப்படி ICU ல அவரை நினைச்சு கூட பார்க்க முடியலை”,

உடன் வேலை பார்க்கும் ஆசிரியர் விபத்தில் சிக்கியிருக்க அவரை பார்க்க தான் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

வண்டியை விட்டு இறங்கி்யவன்,  தாய் பதற்றத்தைக் கண்டதும் அவன் தேற்ற நினைக்கும் பொழுது, சற்று தூரம் தள்ளி வந்து நின்ற பைக்கில் இருந்து இறங்கினாள் இளவரசி!!!

பைக்கில் இருந்து வேகமாக இறங்கி நகர சென்றவளை தடுத்தது துப்பட்டா.... அதன் முனை வண்டியில் சிக்கியிருக்க... உடன் வந்தவன் அதை எடுத்து விட

இவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.. அந்த சமயம் ஓடி போய் அவனை நாலு அரை கொடுத்து விட வேண்டும் என்ற வெறி அவனுள் உண்டாகிய சமயம்,

“கண்ணா, அது நம்ம இளவரசி மாதிரி இல்ல?”, என்ற அன்னையின் கேள்வியில் திகைத்து போனான்...

‘யார் பார்க்கக் கூடாது என்று மாற்று பாதையில் வந்தானோ... அவர் கண்ணிலே பட்டு விட்டாளே’, என்று திகைத்தவனுக்கு மூளை வேலை செய்ய மறுக்க..

கையில் வைத்திருந்த அவன் அலுவலக கோப்பு கை நழுவியது.... அதை குனிந்து திரட்டுவதற்குள் அந்த இருவரும் மருத்துவமனைக்குள் நுழைந்திருந்தனர். 

அலுவலக கோப்பை கையில் எடுத்துக் கொண்டு நிமிர்ந்தவன், அவர்கள் சென்று விட்டதை உறுதி செய்து கொண்டவனாய், “என்னம்மா சொன்னீங்க”, தெரியாதது போல அன்னையிடம் கேட்டான்.  

“ஒன்னும் இல்லைடா.. தூரத்தில் நம்ம இளவரசியை மாதிரி தெரிஞ்சது... இந்த டிம் வெளிச்சத்தில் முகம் சரியா தெரியலை!”, என்றவர்,

“இளவரசி எதுக்கு இந்த நேரத்தில் இங்க வரப்போற!!!”,

அதுவும் இன்னொருத்தன் வண்டியில் என்று மனதில் தோன்றியதை அவர் சொல்லவில்லை.

அவன் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தாலும், ரஞ்சிதம் அவளை அடையாளம் காணவில்லை என்று நிம்மதியாக உணர்ந்தான்.

ராஜனுக்கு அறுவை சிகிச்சை நடந்ததால், சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ரஞ்சிதம் தான் அங்கே இருந்த அவர் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார்.

கண்ணன் மனமெல்லாம் ரசியே நிறைந்திருந்தாள். அவள் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வலியாய் இறங்கிக் கொண்டிருந்தது.

இதோ உயிருக்கு போராடும் அந்த ராஜன் ஸாரின்  நிலையை விட மிக மோசமான நிலையில் நான்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.