(Reading time: 19 - 38 minutes)

ல்லாருடைய கையும் வாயம் மட்டும் இயங்கிக்கொண்டிருக்க சந்தோஷத்தின் எந்த விதமான அடையாளாங்களும் இல்லை அங்கே. தனது கைப்பேசியை எடுத்தான் கெளதம். நம்பரை அழுத்துவது போல் ஒரு பாவனை....

'ஹலோ ப்ரியா... நான் அண்ணன் பேசறேன்...' ஒரு சேர நிமிர்ந்தனர் அனைவரும். எல்லார் முகத்திலும் சில நொடிகள் அப்படி ஒரு மலர்ச்சி.

'அது சரி' என்றான் கைப்பேசியை கீழே வைத்தபடியே 'கடைசியிலே உங்க எல்லாருக்கும் அவ தான் வேணும் இல்லையா?'

'அப்படி எல்லாம் இல்லைப்பா. நீ தான் எங்களுக்கு எல்லாம்..' என்றார் அவன் அம்மா.

'இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை' என்றவன் அருகில் இருந்த சௌம்யாவிடம் திரும்பி 'உங்க வீட்டிலிருந்து எல்லோரையும் வரச்சொல்லு. அப்பவாவது எல்லாரும் சந்தோஷமா ஆகறாங்களா பார்ப்போம்..' என்றான்

'நிஜமாவா.???' மலர்ந்தாள் அவள்.

'நிஜமாத்தான். பின்னே வேறே என்ன செய்ய??? இது கல்யாண வீடு மாதிரியா இருக்கு???. எல்லாரும் அழுது வடிஞ்சுகிட்டு...'  என்றான் குரலில் கொஞ்சம் சலிப்பை சேர்த்துக்கொண்டு.

'நிஜமாத்தானே??? அப்புறம் கோப பட மாட்டீங்களே?'

'அடியே... கூப்பிடுடி'  சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டான் கெளதம்.

ரவு உறக்கம் வராமால் கூடத்தில் இருட்டில் அலைந்துக்கொண்டிருந்த சௌம்யாவை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டான் கெளதம்.

குலுங்கி திரும்பினாள் அவள். 'யாரவது வரப்போறாங்க. ப்ளீஸ்..' அவனது முதல் ஸ்பரிசத்தில் சிலிர்த்த படியே மெல்லிய குரலில் சொன்னாள் அவள்

'எல்லாரும் தூங்கியாச்சு. யாரும் வரமாட்டாங்க' என்றவன் 'தேங்க்ஸ்டா...' என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

'எதுக்கு???'

'இவ்வளவு நாள் என்னை சப்போர்ட் பண்ணதுக்கு...'

'உங்களை சப்போர்ட் பண்ணாம வேறே யாரை பண்ணுவேனாம்???' அழகாக சிரித்தாள் அவள்.

'எல்லாரையும் கூப்பிட்டியா?'

'ம்... எல்லாரும் நேரா மண்டபத்துக்கு வரேன்ன்னு சொல்லிட்டாங்க..'

'ஒருத்தர் விடாம எல்லாரையும் கூப்பிட்டியா?'

'இப்போ என்ன வேணும் உங்களுக்கு? உங்க தங்கச்சியை மூணு தடவை கூப்பிட்டேன் போதுமா? உள்ளே இவ்வளவு பாசம் வெச்சிட்டு வெளியிலே எதுக்கு வெட்டி வீராப்பு??? போய் படுங்க..' சிரித்தபடியே அவனை விலக்கிவிட்டு ஓடி விட்டிருந்தாள் சௌம்யா.

ன்று மாலை திருமண வரவேற்பு கெளதம் குடும்பத்தினர் மண்டபத்தை அடைந்திருக்க சௌம்யா குடும்பத்தினர் அதற்கு முன்பே வந்து விட்டிருந்தனர். பளீர் சிரிப்புடனே அந்த வேனில் இருந்து இறங்கிய கௌதமை பார்த்தவுடனேயே சௌம்யா குடும்பத்தினரிடம் ஒரு வகை நிம்மதி பரவியது.

எல்லார் முகத்திலும் நிறையவே மலர்ச்சி. ஒரு திருமணத்தினால் ஏற்பட்ட காயங்கள் இன்னொரு திருமணத்தினால் சரி ஆகிவிட்ட நிம்மதி; மணமக்கள் இருவருக்கும் சேர்த்தே ஆரத்தி எடுக்கப்பட அவன் பார்வை சுழன்றுக்கொண்டே இருந்தது. பிரியா கண்ணில் படவில்லை.

இவனுடன் பேசலாமா வேண்டாமா என தயக்கத்துடனே கார்த்திக்கின் அருகில் சென்று அவன் தோள் அணைத்து  கேட்டான் கெளதம். 'ப்ரியா வரலையா?'

'ம்ஹூம்...' அவன் முகத்தை பார்த்தபடியே இடம் வலமாக தலை அசைத்தான் கார்த்திக்

'ஏன்?...'

'தெரியலையே...வர மனசில்லைன்னு சொல்றா' என்றான் கார்த்திக். அவன் ஏதோ சொல்ல வருவதும், தயங்கி நிறுத்துக்கொள்வதும் புரிந்தது கௌதமுக்கு. அவன் சொன்னால் தான் புரியுமா என்ன?

'திமிர் பிடித்த ராட்சசி...' பொங்கியது கௌதமுக்கு. அவள் வந்தால் என்ன வராவிட்டால் எனக்கென்ன???

நேரம் மதியம் மூன்று. 'அவள் வந்தால் என்ன வராவிட்டால் எனக்கென்ன???' மறுபடியும் அதையே சொல்லிகொண்டான் கெளதம்.

நேரம் மதியம் நான்கு. 'ஏன் வரவில்லையாம் அவள்? நான் அழைத்தால் தான் வருவாளோ. நான் அழைக்க மாட்டேன். அவள் வந்தால் என்ன வராவிட்டால் எனக்கென்ன???' என்றபடியே தனது கைப்பேசியை திறந்து இணையத்தில் மனதை புதைக்க முயன்றான் கெளதம்.

நேரம் மாலை ஐந்து...  சௌம்யா வீட்டு வாசலில் சென்று நின்று விட்டிருந்தது கௌதமின் கார். என்ன செய்வதாம் மனம் கேட்க மறுக்கிறதே.???

பட்டு புடவை நகை சகிதமாக தயாராக அமர்ந்திருந்தாள் ப்ரியா.

'குறைஞ்ச பட்சம் உனக்கு எவ்வளவு கிலோ திமிர் இருக்கும்? என்றான் அவள் முன்னால் சென்று நின்று.. கொஞ்சம் வியப்புடனே எழுந்தாள் ப்ரியா.

அவன் கைப்பேசியில் தான் அழைப்பான் என்று எதிர் பார்த்திருந்தாள் அவள். இதோ நேரிலேயே வந்து நிற்கிறானே??? அவள் கண்களில் கூட கொஞ்சம் நீர் கட்டிகொண்டது.

எதை நினைத்துக்கொண்டாளோ 'சாரிண்ணா.... நான் உங்களை எல்லாம் ரொம்ப கஷ்ட படுத்தி இருக்கேன். ரொம்ப ரொம்ப சாரி... ' என்றாள் கண்ணீர் வழிய

'மூஞ்சிய பாரு..... எவனுக்கு வேணும் உன் சாரி.. குரங்கு... போ.... போய் காரிலே ஏறித்தொலை... '  என்றான் முகத்தில் பொய் கோபத்தை பொருத்திக்கொண்டு

அந்த 'குரங்கு'விலேயே பழைய அண்ணன் திரும்பி வந்து விட்டதை, அவன் தன்னை மன்னித்து விட்டதை உணர முடிந்தது அவளால்.

'நீ திட்டு... என்னை என்ன வேணும்னாலும் திட்டு... நான் வாங்கிக்கறேன்... ஏன்னா நீ என்  செல்ல அண்ணா' என்று அவன் கன்னத்தை கிள்ளி சொல்லிவிட்டு காரை நோக்கி ஓடும் தங்கையை புன்னகையுடன் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் கெளதம்.

This is entry #24 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.