(Reading time: 27 - 53 minutes)

ப்படி கூட வெச்சுக்கலாம்” சிரித்துகொண்டே சொன்னாள் சுகௌரி.

“சுகா ப்ளீஸ்…” இருவரும் சுகௌரியை பார்த்தார்கள்.

மீண்டும் வெய்டரே முகுந்தனுக்கு உதவிக்கு வந்தார்.

அமைதியை கலைக்க சுகௌரியே “சரி, சரி மொறைக்காத, சாப்பிடு டா. சாப்பிடுங்க வாசுகி.”

மாட்டிக்கொண்டு அப்பாவியாய் விழிக்கும் அவனை கேலி செய்தாள் சுகௌரி.

அனைவரும் காஃபியை குடித்தவாறே தங்களது ஸ்னாக்ஸை கொறிக்க ஆரம்பித்தனர். நம்ம ஹீரோ முகுந்தனுக்கு இன்னும் சற்று அவகாசம் கிடைத்தது. வாசுகியின் பொறுமை அவனுக்கு வரமாக அமைந்தது. அவன் சொன்னது போல சுகௌரி இருப்பதால் அங்கு இருந்தாளோ என்னவோ?

“ஜெயந்த் உங்கள பத்தி அப்பப்போ பேசுவான்.”

தலையை நிமிர்த்தி கண்களை பார்த்து பேசியே பழகிய போதும் இன்று ஏதோ வாசுகியை தடுத்தது. பல நாட்கள் கழித்து ஜெயந்த்தை பற்றி பேசியதா, இல்லை மேனர்ஸ் தெரிந்த ஒருவன் தன்னுடைய உணர்வுகளை மதித்து பொறுமையாக பேசுவதா என்று அவளுக்கு விளங்கவில்லை. சற்றே நாணம் தோன்றியது.

‘நம்ம எப்பவோ கல்யாணம் பத்தி பேசினோம். ஒருவேலை இப்போ சம்மதிக்க போறாரோ?’ ஜெயந்த்தை கடைசியாக ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் முன்பு சந்தித்தது நினைவில் தோன்றியது. ‘ஆனா முகுந்தன் ஏன் வரனும்?’ யோசித்தாள் வாசுகி.

“சுகி…”

அவள் நிகழ்காலத்திற்கு வந்தாள்.

“சாரி.. என்ன சொன்னீங்க?”

“நான் எதும் இன்னும் சொல்லல. அது வந்து… கீர்த்தனா அக்கா கல்யாணத்துல தான் உங்கள மொதமொதல்ல பாத்தேன். அப்போ எதும் தெரியாது.” பேசிவிட்டு ஒரு சிறு இடைவெளி விடவும், வாசுகிக்கு வியர்க்க ஆரம்பித்தது.

“மறுபடி உங்கள பத்தி பேசினப்போ தான் தெரிஞ்சுது, ரெண்டாவது நாள் கூட ஃபோட்டோஸ் எடுத்துட்டு இருந்தீங்களே, அதுதான் நினைவுக்கு வந்துது. அப்புறமா ஜெய் பர்த்டேக்கு கால் பன்னிருந்தீங்களே, ஞாபகம் இருக்கா?” இப்போது தயக்கங்கள் எல்லாம் நீங்கி இயல்பாக பேச ஆரம்பித்தான். அவன் கண்களில் மாற்றத்தை உணர ஆரம்பித்தாள் வாசுகி. அவன் கண்களில் ஒரு ஈர்ப்பு சக்தியையும் உணர்ந்தாள். அந்த மாற்றம் இவள் முகத்தில் தெரியாதிருக்க கவனத்தை திருப்பினாள். அதே சமயம் அவன் கடைசியாக கூறிய விஷயம் பொய் என்பது உரைத்தது.

மேலும் சில நேரம் பேசினார்கள். அவரவர் குடும்பம் பற்றியும் பள்ளி, கல்லூரி வாழ்க்கை பற்றியும் பேசினர். கடைசி வரை அவன் எதற்கு வந்தான் என்று அவளுக்கு தெரியவே இல்லை. காஃபி ஷாப்பின் மியூசிக் சிஸ்டத்தில் ஜெனிஃபர் லோபஸ் ‘குட் திஸ் பி லவ்’ என்று பாடிக்கொண்டிருந்தது கூட வாசுகிக்கு உணர்த்த முடியவில்லை. 

அனைவரும் கிளம்பினர். அழகிய நினைவுகளை பற்றி பேசிய மகிழ்ச்சியில் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள் வாசுகி.

‘ஐய்யய்யோ! சுகௌரி நம்பர் வாங்க மறந்துட்டேனே’ கொஞ்ச தூரம் சென்ற பிறகே ஞாபகம் வந்தது. ஜெயந்த்திடம் வாங்கிக் கொள்ள முடிவு செய்து நடந்தாள்.

ஹேய் வாசு, ஏன் இன்னிக்கு லேட்? உனக்கும் டீ போடவா?” டீ போட்டுக் கொண்டிருந்த தோழி அனிதா கேட்டாள். “அப்புறம், அதென்ன பொக்கே? யு ஆர் லுக்கிங்க் ஹேப்பி டூ டுடே. என்ன விஷேசம்?”

“நெறைய இருக்கு அனிதா. இரு வரேன்.” சொல்லிக்கொண்டே அவள் அறைக்கு சென்றாள்.

பால்கணி ஓரம் டீயோடு காத்திருந்தாள் அனிதா. “சீக்கிரம் வா. பொறுமய சோதிக்காத வாசு.”

“யூ கேன் வெய்ட் ஹனி” தனது டீ கப்பை பிடுங்கிக் கொண்டு அவளுடைய இடத்தில் போய் அமர்ந்தாள். “இன்னிக்கு, எப்பவும் போல ஆஃபீஸ்ல இருந்து திரும்பி வந்தேனா, பஸ் ஸ்டாப்க்கு பக்கத்துல ஒரு பையன் கைல பொக்கே வெச்சிட்டு ஒரு பொண்ணு கிட்ட எதோ கெஞ்சிட்டு இருந்தான்.”

“ஸ்டோரி இடிக்குதே. பொக்கே வெச்சிருக்கிற பையன்னு சொல்ற. எனக்கு தெரிஞ்சு எந்த பையனும் இல்லயே. ஆனா பொக்கே இங்க எப்படி வந்துது?”

“கொஞ்சம் பொறுமை அனி ஹனி.” கண் சிமிட்டிக் கொண்டே தனது டீயை ருசி பார்த்தாள் வாசுகி.

“நான் பாட்டுக்கு வந்துட்டேன். திடீர்னு அந்த பையன் சுகினு சத்தமா கூப்பிட்டானா, நானும் திரும்பி பார்த்தேன். என்ன அப்படி கூப்பிடனும்னு அவனுக்கு எப்படி தோனுச்சுனு தெரியல. அடுத்த நிமிஷம் என் பக்கத்துல வந்து அந்த பொக்கேவ எங்கிட்ட கொடுத்தான்.”

“சுகியா? என்ன கூட அப்டி கூப்பிட விடமாட்டியே! நல்லா கதை சொல்றே டீ. அதெப்படி, இன்னொரு பொண்ணு இருந்தானு சொன்ன? அவ எங்க போனா? அதெல்லாம் கூட இருக்கட்டும். யாரோ ஒரு பையன் கொடுத்தானாம். நீயும் அத வாங்கிட்ட. சரி சொல்லு. இன்னும் என்ன எல்லாம் இருக்கோ.”

ஏதோ பேச வாயெடுத்தாள் வாசுகி.

அதை தடுக்கும் விதத்தில் அனிதா “ஹேய்.. இரு இரு… இன்ஃபில எதும் ஸ்டோரி காம்படீஷன் இருக்கா? ப்ரேர்னா வரட்டும். அவள கேட்கறேன். யு கண்டின்யூ.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.