(Reading time: 27 - 53 minutes)

“அதுக்கு அப்றம் உங்கள கீர்த்தனா அக்கா சீமந்தம் அப்போ பாக்க வந்தேன். நானா தான் வந்தேன். என்னோட அம்மா அப்பாவும் வந்திருந்தாங்க. எல்லாருக்கும் உங்கள இப்போ தெரியும். போன வாரம் உங்க வீட்டுள பேசிட்டோம். நான் தான் உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்.”

கிடைத்த அவகாசத்தில் சற்று அமைதி அடைந்திருந்தாள் வாசுகி.

“உங்க ஃபீளிங்க்ஸ சொல்லிட்டீங்க. என்னோட ஃபீளிங்க்ஸ நீங்க தெரிஞ்சுக்கனும்ல. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ஜெயந்த்த இவ்ளோ நாள் நெனச்சுட்டு இப்போ அந்த எடத்துல உங்கள வெச்சு பாக்க முடியாது முகுந்த். என்னோட இப்போதய சூழ்நிலைல உங்க சந்தோஷத்த கூட பாத்து பகிர்ந்துக்க முடியல. ஐ அம் ஸாரி… நான் கெளம்பனும்.”

“சுகி. கொஞ்சம் பொறுங்க.”

“ப்ளீஸ்… என்ன வாசுகினே கூப்பிடுங்க.” பேசி முடித்த பின், கடுமையாக பேசிவிட்டேனோ என நினைத்தாள்.

“நீங்க ஃபீல் பன்ற மாதிரி இது காதலே இல்ல.”

‘என்ன இது? அனிதா சொன்னது மாதிரியே சொல்றானே?’  யோசித்தாள் வாசுகி.

“அக்கா சொன்னாங்கனு தான ஓ.கே சொன்னீங்க. உங்களுக்கு ஜெயந்த் மேலே இருந்தது லவ்னு ப்ரூவ் பன்ன ஒரு நாலு விஷயம் சொல்லுங்க பாப்போம். அதும் போக, உங்களுக்கு ஜெயந்த்த பத்தி எதுமே தெரியாது. அது மாதிரி தான் ஜெயந்த்தும். அப்பறம் எப்படி? அவங்க சொன்னாங்கனு ஆர்வத்துல ஓ.கே சொல்லிட்டீங்க. அவ்ளோதான். எனக்கும் இதெல்லாம் தெரியும். நல்லா புரியும். ஒரு பொன்னு என் ப்ரெண்ட விரும்பரா. ஆனா அவ எனக்கு வேணும்னு நெனைக்கிற அளவுக்கு அசிங்கமானவன் இல்ல.”

“சே..சே… அப்படி எல்லாம் சொல்லாதீங்க. எனக்கு இப்போ எதும் சொல்ல முடியாது.”

“நானும் உங்கள அவசரப்படுத்தல. டைம் எடுத்துக்கோங்க. பொறுமையா பேசலாம்.”

“சரி, நான் கெளம்பனும்.”

சுகௌரி உடனே, “அப்போ மூவி? இருங்க போலாம். இருந்தா முகுந்த் மேலே லவ் வந்திருமோன்னு பயமா இருக்கா?” சிரித்துக்கொண்டே கேட்டாள்.

ரொம்ப நேரம் கழித்து இப்போது தான் பேசினாள் சுகௌரி. வீட்டுக்கு சென்ற பின் முகுந்தனிடம் விசாரனை நடத்த நினைத்து அமைதியாக இருந்தாள்.

“இல்ல சுகா. அதான் நெக்ஸ்ட் வீக்கென்ட் மீட் பன்றோம்ல.” புன்னகையோடு பதிலளித்தாள்.

மேலும் வற்ப்புறுத்த விரும்பாது அனைவரும் கிளம்பிச் சென்றனர்.

ழ்ந்த யோசனையில் இருந்தாள் வாசுகி.

“ஹேய் வாசு, என்ன யோசனை?” கேட்டவாரே உள்ளே வந்தாள் அனிதா. நடந்த அனைத்தையும் அனிதாவிடம் கூறினாள்.

இரு நிமிடங்கள் அமைதியாக இருந்தனர் இருவரும்.

“நீ சொல்றத பாத்தா முகுந்த் நல்லவன் மாதிரி தான் தெரியறான். அவனோட அப்ரோச் அத விட நல்லா இருக்கு. எதுக்கு யோசிக்கற?”

“இல்ல அனி, ஜெயந்த் பத்தி தான் யோசனையா இருக்கு.”

“இத்தனை நாளா இல்லாம இப்போ என்ன புதுசா? நான் அன்னிக்கே என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா?”

“இருக்கு”

“அப்புறமும் நீ இப்படி பேசினா என்ன அர்த்தம்?”

மீண்டும் மௌணம்.

“நான் சொல்ற மாதிரி செய்றியா?” ஆர்வமாக கேட்ட அனிதாவை கேள்வியாக பார்த்தாள் வாசுகி.

“கீர்த்தனா அக்கா கிட்ட பேசு. அது தான் பெஸ்ட். சுகௌரிக்கே விஷயம் எதும் தெரியாது போல.”

“ம்ம்ம்…”

யோசித்து யோசித்து பல மணி நேரங்கள் கழித்து கீர்த்தனாவிடம் அலைபேசியில் பேச முடிவு செய்தாள்.

அந்நேரம் முகுந்தன் எல்லாவற்றையும் கூறியிருந்தான். வாசுகியின் அலைப்பை எதிர்பார்த்திருந்தாள் கீர்த்தனா.

நல விசாரிப்புகள் முடிந்து அன்று நடந்த அனைத்தையும் கூறினாள் வாசுகி.

“நல்ல விஷயம் தானே வாசுகி. ஏன் இவ்ளோ வருத்தப்பட்டு பேசுற? முகுந்தன் பத்தி எனக்கு நல்லா தெரியும். உங்க பொருத்தம் சூப்பரா இருக்கும். நம்ம வீட்டுல பேசற அளவுக்கு தைரியமான்னு தெரில, கண்டிப்பா உன் மேல இருக்கற லவ் தான் அவன பேச வெச்சிருக்கு. ஐ அம் சோ ஹேப்பி ஃபார் யூ.” பேசியவாறு சிரித்தாள்.

“நல்லா சிரிங்க. எனக்கு என்னவோ உங்க மேல தான் டௌட்டா இருக்கு. எல்லாரும் சேர்ந்து ப்ளான் பன்னினீங்களா என்ன?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.