(Reading time: 27 - 53 minutes)

ட்சத்திரங்களை பார்த்தவாறே ஏதோ யோசிக்க முயற்சித்தாள். அன்று நடந்ததையெல்லாம் ஒருமுறை மீண்டும் நினைத்து பார்த்தாள். அவன் கண்களில் அவள் தன்னையே தொலைப்பது போல உணர்ந்தாள். அவன் புன்னகைத்தானா என யோசித்தாள். அவனுக்கு சிரிக்க தெரியுமா என நினைத்தாள். முகுந்தன் அல்லாது புதியவன் வேறொருவன் வந்து பேசியிருந்தாள் அமைதியாக காஃபி குடித்துக்கொண்டிருப்பேனா என சிலமுறை யோசித்தாள். அப்படி என்ன ஈர்த்தது? அவனின் அளவான பேச்சு என உணர்ந்தாள். அவனுடைய மென்மையும் உண்மையும் தான் என மனம் சொல்ல மெலிதாக புன்னகைத்தாள். மனம் சந்தோஷமாக இருக்க புத்தி விடுமா? அவன் பொய் சொன்ன தருணத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.

‘ஜெயந்த் பிறந்தநாளன்று அவரோடு இருந்ததாக கூறினானே? ஆனால் ஜெயந்த் தனது தாத்தா இறந்து விட்டதால் அவசரமாக வேலைக்கு விடுப்பு கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்றதாக கூறினாரே.’ நிலவொளியில் அந்த பூங்கொத்து அழகாக தோன்றியது. பூக்கள் வாடாது இருக்க ப்ரேர்னா தான் அவற்றை பூச்சாவடியில் இட்டாள். பூவிலிருந்து நிலவை பார்க்க வீழ்  நட்சத்திரம் ஒன்றைக் கண்டாள். புன்னகைத்தாள்; அப்படியே ‘கடவுளே எனக்கு எது நல்லதோ அது நல்லபடியா நடக்கனும்’ என வேண்டிக்கொண்டாள். இது மட்டுமல்ல, பௌர்ணமி நிலவிற்கு கூட மாதாமாதம் தன் காதலுக்கு தூது செல்ல செல்லக் கட்டளை இடுவாள். காதலன் எங்கே என நிலா கேட்காதது தான் குறை. இவை யாவும் கல்லூரியில் கற்றுக்கொண்ட மூடநம்பிக்கைகள்.

(நான் இவ்வாறு சொன்னேன் என வாசுகியிடம் சொல்லிவிடாதீர்கள். அவளுடைய வேறு முகத்தை பார்க்க நேரிடும். அதை முகுந்தனுக்காக சேமித்து வைப்போம்.)

கனவுகளோடு தூங்கிப் போனாள்.

ன்னலோரும் படுத்திருந்த முகுந்தன் வீழ்  நட்சத்திரத்தைக் கண்டான். ‘வாசுகியை எனதாக்கிவிடு’ என நினைத்து அன்றைய நிகழ்வுகளை யோசிக்க ஆரம்பித்தான். அவள் எப்படி அத்தனை அழகாக இருக்கிறாள் என யோசித்தான். அவள் கண்கள், நேருக்கு நேர் சந்திக்கும் அந்தக் கண்கள், ‘இனிமேல் வாழ்க்கைல பொய்யே பேசக்கூடாது’, முடிவெடுத்தான். கீர்த்தனா அக்காவின் சீமந்தத்தின் போது வைத்த கண் வாங்காமல் பார்த்த போதிலும் அன்று பார்த்த அவளின் கண்களின் அழகு அவனை ஏதோ செய்தது. பொய் பேசினால் மாட்டிக்கொள்வோம் என்ற பயம் எனக் கூறலாம். ஜெயந்தனின் அலைபேசியில் இருந்து திருடிய அவளது புகைப்படத்தை எடுத்து  முதல்முறையாக அந்த கண்களை உற்று நோக்கினான். பார்த்துக்கொண்டே உறங்கிப் போனான்.

 வெள்ளிக்கிழமை அழகாக விடிந்தது. சமைத்துக் கொண்டிருந்த வாசுகியிடம் அனிதா, “என்ன வாசு சுகௌரி கிட்ட பேசிட்டியா?” என்றாள்.

“அதை அப்படியே விட்டுடலாம்னு இருக்கேன் அனி”

“நான் இதை எதிர்பார்க்கல வாசு. யு ஆர் க்ரேட். நீ எப்பவும் போல தெளிவா பேசறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்டி.. ஹேவ் அ குட் டே. நான் கெளம்பறேன்.”

“நான் உனக்கும் சேர்த்து தான் டிஃபன் ரெடி பன்றேன். 5 மினிட்ஸ் வெய்ட் பன்னு.”

அனிதாவிற்கு வேண்டி அப்படி சொன்னாலும் அவள் மனம் அலைபாயும் வேகத்திற்கு இது தான் நல்ல முடிவு என முடிவு செய்தாள். இருவரும் உணவு உண்டுவிட்டு கிளம்பினர். அவளுடைய நாள் மிகவும் சோகமாக நகர்ந்தது. வெள்ளி தோறும் சிவன் கோயிலுக்கு போகும் வழக்கம் ஒன்றால் தான் இன்று அவளுக்கு ஆறுதல் கிடைத்தது. மன நிம்மதியுடன் வீடு சென்றாள்.

முகுந்தனுக்கும் சுகௌரிக்கும் கூட அப்படித்தான். என்ன செய்வதென்று தெரியாது அங்கும் இங்கும் சுற்றி நாளைக் கடத்தினான். சுகௌரி வீடு வந்ததும் ஆர்வமாக அவளையே பார்த்திருந்தான் முகுந்தன். அவள் பேசட்டும் என காத்திருந்தான்.

“எதாச்சும் ஐடியா இருக்கா முகுந்த்?” யோசனையோடே பேசினாள்.

“இல்ல சுகா. நீ உன் ப்ளான சொல்லு.”

“மூவி போலாமா?”

“எனக்கு எதுனாலும் ஓ.கே. அப்புறம்.. கொஞ்ச நேரம் பேச டைம் கெடச்சா நல்லா இருக்கும்.”

“ம்ம்ம்… இப்போ படம் முக்கியம் இல்ல. நம்ம மீட் பன்னனும். அப்போ மூவிக்கு முன்னாடியே மீட் பன்ன ப்ளான் பன்றேன்.”

“ஓ.கே ஓ.கே”

“மறுபடி சொதப்பி வெக்காத. நாளைக்கு தான் கடைசி. என் ப்ரெண்ட்ஸ பாக்க சன்டே வெளிய போறேன். நீயும் ஊருக்கு கெளம்பற வேலைய பாரு.”

“ம்ம்ம்…”

வாசுகியுடன் அலைபேசியில் பேசினாள் சுகௌரி.

“ஹாய் வாசுகி, நான் சுகௌரி பேசறேன். என்னோட நம்பர் வாங்காமலே போய்டீங்க. சேவ் பன்னிக்கோங்க.”

நல விசாரிப்புகள் முடிந்து நாளை காலை 11 மணிக்கு ஒரு மாலில் சந்திப்பதாக முடிவு செய்தனர்.

வாசுகி வீட்டிலிருந்து கிளம்பி விட்டேன் எனக் கூறி 10 நிமிடங்களுக்கு பின்னர் சுகௌரி அலைபேசியில் அழைத்தாள்.

“வாசுகி நான் எதிர்பார்த்த டைம்ல டிக்கெட் கெடைக்கல… அடுத்த ஷோ தான் பாக்கனும்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.