(Reading time: 27 - 53 minutes)

ட உண்மையா தான் சொல்றேன். அப்புறம் அந்த பொண்ணு, அவ பேரு சுகௌரி, அவனோட ஃப்ரெண்ட், இன்ட்ரோ கொடுத்துட்டு காஃபி ஷாப் கூட்டிட்டு போனா. உனக்கு ஜெயந்த் ஞாபகம் இருக்கு தான? அவரோட ப்ரெண்ட்ஸ் தான் இவங்க ரெண்டு பேரும். அரை மணி நேரம் பேசிட்டு வந்தேன். நெக்ஸ்ட் சாடர்டே சுகௌரி மீட் பண்றேனு கூட சொல்லிருக்கா.”

அனிதாவின் முகத்தில் கவலை அப்பட்டமாக தெரிந்தது.

“வாசு, உனக்கு என்ன டீ ஆச்சு? ஆர் யு ஓ.கே? நீ சொல்ற எதுமே சரியா தெரியல?”

“அனி, உங்கிட்ட பொய் சொல்லுவேனா டீ. நெஜம்மா தான் சொல்றேன்.”

“யாருடி அவன்? சரி காஃபி ஷாப்ல என்ன நடந்தது?”

“என்ன பாக்க தான் வந்தானாம். எதுக்குனு இன்னமும் தெரில. சென்னைல இருந்து வந்திருக்கான். சொந்த கதை எல்லாம் பேசிட்டு கெளம்பி வந்துட்டேன். அதான் ஹேப்பி. சுகௌரி கிட்ட டீட்டெயில்ஸ் கேட்டுக்கலாம்னு இருக்கேன்.”

“எப்பவுமே தெளிவா இருப்பியே டீ. இன்னிக்கு என்ன வந்துது? கடவுள் தான் காப்பாத்தனும்.” அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள் அனிதா.

“அவன் என்ன முன்னாடியே பாத்திருக்கானாம்.கீர்த்தனா அக்கா பத்தி சொல்லிருக்கேன்ல அனி, அவங்க கல்யாணத்துல. ஆனா மறுபடி எங்கேயோ பாத்திருக்கேன்.”

“ஆஃபீஸ் வொர்க்கா வந்திருக்காங்களா?” டீ கப்பை வாங்கிக்கொண்டே கேட்டாள் அனிதா.

“சுகௌரி இங்க தான் வொர்க் பன்றா.”

“சரி, அவங்க கிட்ட மொதல்ல விசாரி. உன் போக்கு எனக்கு பயமா இருக்கு. இல்லைனா ஜெயந்த் ஆர் கீர்த்தனா அக்கா கிட்ட கேளு.”

“அவங்க நம்பர் இல்லடி.” நகங்களை கடித்தவாறு கூறினாள்.

“உனக்கென்ன பைத்தியமா வாசு…” என ஆரம்பித்து அவளது முட்டாள்தனத்தை திட்டித் தீர்த்தாள் அனிதா.

காதல் வந்து முகுந்தனை வாட்டுவது நியாயம் எனலாம். பாவம் வாசுகி, ஏன் காதல் அவளைச் சேரும் முன்னே வாட்டுகிறது? அந்த பூங்கொத்து வாயிலாய் அவள் இறுப்பிடம் நுழைந்து விட்டதோ? அந்த பொல்லாத காதல் அவளுள் புகுந்தால் தானே முகுந்தனுக்கு வெற்றி!

டேய் முகுந்த், நைட் சென்னைக்கு டிக்கெட் புக் பன்னவா?” எரிச்சலுடன் கேட்டாள் சுகௌரி.

உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து சடாரென எழுந்தான் முகுந்தன், “ஏன் சுகா கோவப்படுற? நியாயமா பாத்தா நான் தான் கோவப்படனும்.” பொறுமையாகவே பேசினான்.

“நல்ல்லா கோவப்படுவீங்க சார். நீ பன்னின மாதிரி எங்கிட்ட எவனாச்சும் பன்னிருந்தான், அவன உண்டில்லைனு பண்ணிருப்பேன். சொதப்பல் கிங் டா நீ!”

“அப்படி இருந்தும் அவ எதும் செய்யலைல. கண்டிப்பா என் கனவு நெஜமாகும் பாரேன்.”

“அங்க எதும் பேசாம எல்லா வியாக்கானமும் எங்கிட்ட பேசு. இனி சென்னைக்கு கெளம்பாம சாருக்கு என்ன ப்ளானாக்கும்?”

“நீதான் சொல்லனும். இன்னிக்கு நீ இருந்ததால தான் எல்லாம் நல்லா நடந்ததுனு நெனைக்கிறேன். என்ன பன்னலாம் சுகா?”

“ஐஸ் வெச்சது போதும். காஃபி ஷாப் எக்ஸ்பென்ஸயும் உன் டிக்கெட்கு ஆகிற செலவையும் கோயில் உண்டியல்ல போட்டதா நெனச்சுக்கிறேன். நீ கெளம்பு சாமி.” இரு கைகளையும் கூப்பி வணங்கினாள்.

சிரிப்பு வந்தது முகுந்தனுக்கு. சிரித்தால் காரியம் கெட்டுவிடும் என நினைத்து அமைதியாக இருந்தான். நம்ம ஹீரோவ பத்தி இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அமைதியான கார்ப்பரேட் அர்ஜுனனே தான்.

“நாளைக்கு ஒரு நாள் எப்படியாச்சும் ஓட்டிடறேன். சாட்டர்டே அவள மீட் பன்ன ஏதாச்சும் செய் சுகா.”

“உன்னை எவ்ளோ வருஷமா எனக்கு தெரியும் முகுந்த்! பேசியே காரியத்த முடிக்கறவன் தான நீ. இல்லைனா எப்டி இவ்ளோ சீக்கிரம் ப்ராஜெக்ட் மேனஜர் ஆவ. சரி சொல்லு, உன் திறமைக்கு இந்நேரம் ஆன்ஸைட் சான்ஸ் கூட கெடச்சிருக்கனுமே.”

“அதெல்லாம் இப்போ எதுக்கு சுகா. நம்ம இப்போ பேச வேண்டிய விஷயத்த பேசுவோமே.”

இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தாள். உள்ளே புயல் அடிப்பது போல தோன்றினாலும் ஆரம்பம் முதற்கொண்டே அமைதியாக இருந்தான் முகுந்தன்.

“சரி டா. நாளைக்கு எதாச்சும் பன்னலாம்.”

“ரொம்ப தேங்க்ஸ் டீ.” மகிழ்ச்சியில் கிட்டத்தட்ட துள்ளினான். அவள் ஏதோ முடிவு செய்து விட்டாள் என அவனுக்கு தெரியும். இருந்தும் அமைதியாக இருந்தான்.

அவன் தோழி சமைத்த சுமார் சமையலை சுமாராக பாராட்டிவிட்டு அவளை ஆனந்தப்படுத்தினான். வேறென்ன, அவன் காரியம் நன்றாக நடக்க வேண்டுமே. இதுவே வேறு சமயமாக இருந்திருந்தால் அடித்துக்கொள்ளாத குறைதான்.

ன் படுக்கையில் படுத்தவாறே யோசித்தாள் வாசுகி. இரவு உணவு உண்ணும் வரை அனிதா எதும் பேசவில்லை. தோழியை திட்டியது அவளுக்கே வலித்தது போலும். அமைதியாக உணவு உண்டுவிட்டு அவரவர் வேலையை செய்துவிட்டு அவரவர் அறைக்கு சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.