(Reading time: 25 - 50 minutes)

ப்போது கண்ணாடியில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த இவளது பார்வையை சந்திக்கிறது அவனது பார்வை……

அச்சோ…….!!!! அவசர அவசரமாய் அவனிடமிருந்து பார்வையை பிரித்தெடுத்தாள் இவள்….

“ஏன்டி கேட்டேன்ல க்ரீனா பிங்கானு….இவ்ளவு நேரமா யோசிப்பா ஒருத்தி….?” தீபா வேறு இடையிட….

‘எனக்கு எடுக்க தெரியாதுன்னு தெரிஞ்சுதான வந்த….’ என இவள் இயல்பின் படி எகிறாமல்…. ஏனோ எதையாவது செலக்ட் செய்து  அமைதியை மீண்டும் நிலை நாட்ட தோன்றியது இவளுக்கு….

சற்று படபடப்பாய் இருக்கிறது.... ‘இவ அவனப் பார்த்துட்டு இருந்தத அவன் எதுவும் தப்பா நினச்சுடுவானோ….?’

தீபா சொன்ன அந்த பிங்க் அண்ட் க்ரீனை இவள் உன்னிப்பாய் பார்த்தாள் இப்போது…..

“ஹேய்  இந்த க்ரீன் உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்……” அவன் சத்தம்தான்…..

‘இப்பொழுது சட்டென ஏறியது இவளது சுயம்….அவ்ளவு திமிராமா….? எதோ குழந்தைய இவ பார்த்தா……இவனப் பார்த்து மயங்கிப் போய் நின்ன மாதிரி…..இவ ட்ரெஸ்ஸ செலெக்ட் செய்ய அவன் யாராம்….?’

“சே இந்த க்ரீன் நல்லாவே இல்ல……அந்த பிங்க் ஓகே….” விறைப்பாய் சொல்லியபடி சரித்ரா கண்ணாடியில் அவனைப் பார்க்க….அவனோ அவனது அக்காவின் கையில் இருந்தவைகளில் ஒரு பச்சை நிறப் புடவையை சுட்டிப் பேசிக் கொண்டிருந்தான்……

இப்போது இவள் பதிலில் இவள் புறமாய் ஒரு பார்வை வேறு வீசினான்…

‘சே….பல்ப்பா…’

“நாம மெட்டீரியல்ஸ் பார்க்கலாம்…..”அவசரமாய் தீபாவின் கை பற்றி இழுத்தபடி நடந்துவிட்டாள் இவள்….

பின்பு அலைந்து திரிந்து ஷாப்பிங்க் முடித்து கடையைவிட்டு வெளியேறவென அதன் முன் பகுதி நுழை வாயிலுக்கு இவர்கள் வர, இப்போது அவனும் அவனது அக்காவும் கூட அங்கேதான் நின்றிருந்தனர்….

பர்சேஸ் செய்தவகைளை டெலிவரி வாங்குமிடத்தில் அவர்கள்…..  அவன் இடுப்போடு இரு புறமும் கால் போட்டு, அவன் கழுத்தை தன் பிஞ்சு கைகளால் சுற்றி,  அவன் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு கையில் தாங்கிய படி…..அடுத்த கையில் அவன் அந்த பேக்குகளை வாங்குவதைப் பார்க்க இவளுக்கு நன்றாக தோன்றியது…. 

எ கம்ப்ளீட் குடும்ப மனிதன் ஹெய்….மனதுக்குள் கமென்ட் செய்து கொண்டாள்.

இதுதாங்க நம்ம சரித்ராவின் ஹிந்தி…...சொல்றத சொல்லிட்டு ஒரு ஹேய் சொல்லி முடிச்சா அது ஹிந்திதான?

கடை வாசலில் இருந்த பட்டர் கார்ன் ஆளுக்கு ஒரு கப் இவளும் தீபாவும் வாங்கி சாப்பிடும் போது அவன் அக்காவுடன் இவர்களை தாண்டிப் போனான்…..

சாப்பிட்டு முடித்தபின்…இப்போது இவள் தீபாவுடன் தன் ஸ்கூட்டியை எடுக்க பார்க்கிங் போக….அங்கு இவள் ஸ்கூட்டியில் அந்த டெக்‌ஸ்டைல் ஷோரூம் கவர்…. இவளுக்கும் முந்தி தீபாதான் அதை எடுத்து திறந்தாள்….

“என்னடி இது யாரோ மறந்து வச்சுட்டு போய்ட்டாங்களோ…?” என்றபடி….

‘ரித்து இந்த ப்ளூ உனக்கு ரொம்ப க்யூட்டா இருக்கும் ….நம்ம ரெண்டு பேருக்கும் பிடிச்ச கலர்---- பிபிஎஸ்’ என  எழுதப்பட்ட கடிதத்தோடு இவளைப் பார்த்து சிரித்தது  இவளது பேவரிட்  ப்ளூ நிறத்தில் சல்வார் ஒன்று…..

இதுக்கு என்ன அர்த்தம்…?? யார் அந்த ரித்து….??? ஆனா அது என்ன பிபிஎஸ்….? அந்த ஜீவாவோட வேலையா இது? அவனுக்குதானே இவ பிபிஎஸ்னு பேர் வச்சா….ஆனா அவனுக்கு அப்டி பேர் வச்சுறுகிறத  இப்பவரை இவ யார்ட்டயும் மூச்சுவிடக் கூட இல்லையே..… இதுல இது இவளுக்கு பிடிச்ச ப்ளூ வேற….

டேய் என்னாங்கடா நடக்குது இங்க…?

சுற்று முற்றும் எங்கு தேடியும் யாரையும் காணவில்லை…. வேற வழியில்லாமல் அந்த ப்ளூ சல்வார் இவள் வீடு வந்து சேர்ந்தது….

ரண்டு நாளில் தீபா கிளம்பிப் போக…..இவள் இன்று மாலை இவளது நாய் டாமருடன் வாக்கிங் வந்திருந்தாள்…. டாமர் ஒரு கன்னுகுட்டி அளவில் இருக்கும் ராட் வீலர் குலம்….

கை  டாமர் கயிறை பிடித்திருந்தாலும் சரித்ரா மனம் முழுவதும் எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது… இதில் சட்டென இவள் பிடியை உருவிக் கொண்டு ஓடுகிறது திருவாளர் டாமர்….

“ஹேய் டாமர்….நில்லு…ஸ்டாப்….ஸ்டாப்னு சொல்றேன்ல…” இவள் அதை துரத்திக் கொண்டு ஓட…அப்போதுதான் தெரிகிறது  எதிரில் சற்று தொலைவில் அவன் ….அந்த பிபிஎஸ் @ ஜீவா…..அவனது கார் வின்டோவை இறக்கிவிட்டு இவளை பார்த்தபடி காரில் அமர்ந்திருந்தான்……...…

.இந்த டாமர் ஓடிப் போய் ….இவள் கொஞ்சமும் எதிர்பாரா வண்ணம்….அந்த கார் வின்டோ வழியே உள்ளே ஏறி…..அவன்  தோள் வரை கால் போட்டு…… விட்டா அவன் முகத்தை நக்கி வச்சுடும் போல…..கடிச்சா கண்டிப்பா ஒரு கிலோக்கு உடம்புல விழும் ஓட்டை…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.