(Reading time: 25 - 50 minutes)

ய் டாமர்….. “ அலறாத குறையாக அலறிக் கொண்டு இப்போ இவள் ஓட…. அதற்குள் டாமர் காரின் பின் சீட்டுக்குப் போயிருந்தது……..இவள் கார் அருகில் நின்று இப்போது எத்தனையாய் கூப்பிட்டாலும், அதட்டினாலும அது  அசைவதாய் இல்லை…

அந்த பிபிஎஸ்ஸை  முடிந்த மட்டும் முறைத்தாள்…..ஆனாலும் இதில் அவன் தப்பு என்ன என இவளுக்கே புரியவில்லை…..

“கதவ திறங்க…” .இவள் முறைப்பும் கர்ஜிப்புமாய் கடுகடுக்க… அவன் இவள் முகத்தை பார்த்தபடியே காரின் இவள் பக்க கதவை திறந்து விட்டான்…..

இப்போது அதன் வழியாய் உள்ளே குனிந்து…..இவள் டாமரின் கயிறை பற்றி “வா டாமர்….இப்ப வரப் போறியா இல்லையா” என்ற உறுமலுடன்  இழுக்க…..

அந்த அன்பு கன்னுகுட்டி பதிலுக்கு இவள் செய்ததையே…. அதாங்க இழுக்கிறதை……. அக்கா அக்கா நானும் உன்ன மாதிரியே…… என்றபடி தானும் ஈக்வலண்ட்டாய் இழுக்க …… பேலன்ஸ் மிஸ்ஸாகி காருக்குள் போய்  எப்படியோ எதிலயோ இடித்தபடி விழுந்தாள்…..

ஹேய் என அந்த பிபிஎஸ் பதறுவது இவளுக்கு கேட்கிறது…. கூடவே சில கிங்…கிங்….கிஸ்கா….. என எதேதோ சின்ன சின்ன சத்தங்களும்…

இதோடு சேர்ந்து காருக்குள் முக்கால்வாசி உள்ளுக்குள்ளும் கால் மட்டுமாய் கொஞ்சம் வெளியிலுமாய் விழுந்திருந்த இவளை…..எதோ ஒன்று பத்திரமாய் மொத்தமாய் உள் பகுதிக்குள் பார்சல் செய்யும் நிகழ்வு….

ஹேய்….என இவள் அலறி புரண்டு எழுந்து சமநிலைப்படும் போது…..லைட் க்ரீம் கலரில் இருந்த காரின் இன்டீரியர் முழுவதும் ஒரு ப்ளாக் நிறத்திற்கு மாறி….. டாமரை  ஒரு வள்ளுடன் படுத்து பம்ம செய்து…

எங்கோ பறந்து கொண்டிருக்கிறதா…..????கரைந்து கொண்டிருக்கிறதா…..????இது என்னது கார் தானா….???? இவன் மனுஷன் தானா….???? ஐயோ நான் கூட …. மிரண்டு போனாள் சரித்ரா…

“ஹேய்..…கூல் டவ்ண்….ஒன்னுமில்லமா….ரிலாக்‌ஸ்…..பை மிஸ்டேக் நீ எதையோ ப்ரஸ் செய்துட்ட….ஃப்யூ மினிட்ஸ்ல சரியாகிடும்…அதுவரைக்கும் கண்ண மட்டும் மூடிக்கோ…” ஆறுதல் சொல்றானாம் அவன்…..

‘ஹான்ன்….இவன் பக்கத்துல உட்காந்து கண்ண வேற மூடனுமா?’ முழு கண்ணளவிலும் முறைத்தாள்……

“இன்னொரு டைம் இப்டி நீ போன்னீங்க…..…..” இவள் கொதிப்பாய் தொடங்க….

“ஓகே  சொல்லல….நீ..ங்க இப்ப கண்ண மட்டும் மூடிகோ…ங்க…” மரியாதைப் பன்மைக்கு மாறி இருந்த அவன் கண்களை மூடிக் கொண்டான்…

சுற்றிலும் பார்க்க இவளுக்குமே எதோ வயிற்றைப் பிரட்டுவது போல் தோன்ற….இப்போது இவளும் வேண்டா வெறுப்பாக க்ளோசிங் த ஐஸ்…..

சில நிமிடங்கள் கழித்து எல்லாம் இயல்பு போல் தோன்ற….இவள் கண்விழித்து அருகில் இவளது ஆசை ஊட்டியை தேட…..

ஐயஹோ!!! அது காணாமல் போயிருந்தது…..

நாம எங்க வந்து  இருக்கோம்….??? பதறியபடி சுற்றிலும் பார்வையை சுழற்றியவளின் கண்களில் கிடைக்கிறது தூரத்தில்  அந்த காட்சி….

ஒருவித காபி நிறத்தில் மேல் சட்டை பகுதி…. பாவாடை போன்ற பகுதியோ வழ வழ பள பள சந்தன நிறம்…. கால் சராய் ஒரு வித சிவப்பில் ஆரஞ்சு புள்ளிகளுடன்…. இப்படி ஜோதா அக்பர் மூவில வர்ற ஆம்பிளைங்க மாதிரி ஒரு ட்ரெஸ் போட்ட ஒரு ஆள்…..தலையில சந்தன நிற டர்பன்ல கொஞ்சம் முத்து அலங்காரம்…….கழுத்தில் இரண்டு சரமாய் ஓடிய முத்துமாலை….காதிலும் சிறு முத்துக்களால் கம்மல்…....

ஒரு பல்லக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்…….பல்லக்கு தூக்கிகள் பக்கத்தில் நின்றிருந்தனர் படு பவ்யமாக…

‘டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எங்கடா கொண்டு வந்துட்ட என்ன…???’  இவள் அலற ஆரம்பிக்க…….எங்க அலற முடியுதாம்…? அதுக்குள்ளதான் பக்கத்திலிருந்தவன் இவ வாய மூடிட்டானே….

“ப்ளீஸ் ப்ளீஸ் கத்தாதமா…தீங்க…அவங்க காதுல விழுந்தா கஷ்டம்……இப்போதைக்கு நாம இந்த டைம் மெஷினுக்குள்ள இருக்ற வரைக்கும் நாம இங்க இருக்றது அவங்களுக்கு தெரியாது….பேசுனா அவங்களுக்கு கேட்கும்…. நீ…ங்க விழுந்ததுல பை மிஸ்டேக் இந்த பீரியட் வர மிஷின் செட் ஆகிட்டு….. எக்‌சிக்யூட் ஆன பிறகு இடையில நிறுத்த முடியாது….ஆனா இப்போ இப்டியே திரும்பி நாம உன்…ங்க வீட்டுக்கு போய்டலாம்….”

எங்க போகவாம்…. அவன் இத்தனை விளக்கமா விளக்கிகிட்டு இருக்ற வரை இவ கைய கால வச்சுகிட்டு சும்மா இருக்கவாமா….? இவ கத்த ஆரம்பிக்கவும் இவள கழுத்தோட இழுத்து பிடிச்சு இன்னொரு கையால இவ வாய வேற மூடினானா……அப்பவே இவ ஐயோ அம்மா அப்பா காப்பாத்துங்க ரேஞ்சுல…..கையை காலை உதைக்க…..

எக்சிக்யூஷன் கம்ப்ளீட் ஆனதில் அதுவாக அன்லாக் ஆகி இருந்த கதவில் இவள் கை எதையோ தட்ட….விழுகிற இவளது கால் கொடுத்த உதைகளில் கதவு திறந்து வைக்க….

‘அச்சச்சோ அம்மா இந்த வளந்தவன நம்பி உள்ள வந்த  என்ன என்னலாமோ செஞ்சுபுட்டாங்களேயா சாமி…..இனி இத தாங்காது இந்த டாமி……நான் போறேன் இது என் பூமி…..!!!’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.