(Reading time: 35 - 69 minutes)

"நீங்க ரொம்ப கரெக்ட்டா லோன கட்டிட்டீங்க, இனி ஃபர்த்தரா எவ்வளவு , எப்போ லோன் வேணும்னாலும் கேளுங்க, இந்த பேங்க் ரெடியா இருக்கும்."

"தேங்க்ஸ் மாம், இப்போதைக்கு கம்பெனியில ஓரளவுக்கு பைனான்ஷியல்  ப்ராப்லம் இல்லாம இருக்கோம், எனக்கு வேணும்ன்றப்போ  வந்து கேக்கறேன் மாம், அப்போ நான் வரேன், கொஞ்சம் காஷ் எடுக்கணும்"

"பாரதி அங்கதான் இருக்காங்க, கொடுங்க நான் எடுத்துட்டு வர சொல்றேன்"

"இல்ல மாம் நானே போய் எடுத்துக்கறேன்"

"ஓக்கேகே ...."

"லோ மேடம், ரொம்ப பிசியா?"

"ஓ நீங்களா! சாரி கொஞ்சம் பிஸியான டே அதான் உங்கள கவனிக்கல?"

"பரவாயில்லங்க, காஷ்ல இருக்கும்போது கூடுதல் கவனம் வேணும்... இந்தாங்க டோக்கன்"

அதை வாங்கி வைத்து விட்டு காஷை எண்ணி கொடுத்தாள், "அப்புறம் ஒரு ஹெல்ப் மிஸ்டர் வேந்தன்?"

"சொல்லுங்க மேடம், உங்களுக்கில்லாததா, அட் யுவர் சர்வீஸ் "

அவள் புன்னகைத்து விட்டு, "எனக்கு உடனே ஒரு வீடு வாடகைக்கு வேணுமே? கிடைக்குமா?"

"அவ்வளவுதான கிடைச்சிடுத்து... எப்போ குடி வர போறீங்க?"

"என்ன கிண்டல் பண்றீங்களா, என்னவோ கையில ரெடியா வச்சிருக்கா மாதிரி?"

"மேடம், கிண்டல் இல்ல மேடம் நிஜமாவே இருக்கு, என் வீட்டு மேல் அபார்ட்மெண்ட் காலியா இருக்கு மூணு பெட்ரூம் ரெண்டு பாத். "

"ஐயோ அவ்வளவு பெரிசால்லாம் வேண்டாம் ஜஸ்ட் ஒரு பெடரூம் போறும் , எனக்கும் என் அம்மாக்கும்தான்"

"சாரி மேடம் அதுக்காக அபார்ட்மெண்ட ஒடைச்சு ஒரு பெடரூமா மாத்த முடியாது"

"ஐயோ தாங்க முடியலடா சாமி, செம்ம கடி, எனி வே, எனக்கு ஒன் பெட்  போறும், நீங்க இருந்தா சொல்லுங்க"

"ஒன்னு செய்யுங்க, இந்த கவுண்டர் மூடினத்துக்கு அப்புறம் எனக்கு கால் பண்ணுங்க டீடைலா பேசலாம் சரியா?"

"சரி தேங்க்ஸ் "

அவன், அவளை பார்த்து புன்னகைத்து விட்டு நகர்ந்தான்

பிசுக்கு போனவுடன் அவனுக்கு இரண்டு மீட்டிங் இருந்தது...

"ஓ, அந்த பையனா? சரி கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லுங்க விஸ்வேஷ்"

"சரி சார்,"

மேலும் தன் மீட்டிங்கை முடித்து விட்டு, கால் செய்து " விஸ்வேஷ், அங்க வெயிட் பண்ணிட்டிருக்கற அந்த பையன் சரவணன், அவனை உள்ள வரச் சொல்லுங்க"

அந்த பையன் சரவணன் உள்ளே வந்தான்

"வாப்பா, உக்காரு"

"இல்ல சார்"

"சும்மா உக்காரு"

"அப்பறம், என்ன படிச்சிருக்க?"

"கம்ப்யூட்டர் சயன்ஸ் சார்"

"ம், சரி " என்று அவன் சர்ட்டிபிகேட் எல்லாம் பார்த்துவிட்டு "சரி, வெளியே உக்காரு, நான் அப்பாயிண்ட்மெண்ட் ரெடி பண்ணிட்டு கூப்படறேன்"

"சரி சார்....  சார், ரொம்ப தாங்க்ஸ் சார்"

"இந்த தேங்க்ஸ  உங்க அப்பாகிட்ட சொல்லுப்பா... சரி வெயிட் பண்ணு"

"ஒகே சார்"

"யோகேஷ வர சொல்லுங்க விஸ்வேஷ்"

யோகேஷ் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான் "ஹான் யோகேஷ், கீதாகிட்ட ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ண சொல்றிக்கேன் , அந்த பையனுக்கு ஏத்த வேலைய கொடுங்க... சம்பளம் டுவெண்ட்டி டூ தவுசன்... பார்த்து வேலைய கொடுங்க"

"சரி சார்... சார் அப்புறம் அந்த எஸ் எஸ் லேர்ந்து செல்வம் வந்திருக்கார் சார்"

"அவறெதுக்கு வந்துருக்கார்?"

"எந்தளவுக்கு அவங்க ப்ராஜக்ட் முடிஞ்சிருக்குன்னு கேட்டார் சார்"

"சரி அவரை உள்ள வர சொல்லுங்க"

'ஒகே சார்"

அவன் நாள் முழுதும் பிசி, இப்படித்தான் அவனுடைய வேலை ஒவ்வொருநாளும், சில நாட்கள் வார கடைசியிலும் அவன் வேலையில்  பிசியாக இருப்பான்

வீட்டுக்கு போனான், குழந்தைகள் அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் "அப்பா என்னப்பா, இவ்வளவு லேட், சீக்கிரம் வரேன்னுதானே சொல்லிட்டு போனீங்க"

"என்னடா ஆர்த்தி ஒரு பதினஞ்சு நிமிஷம்தான லேட், சாரி டா, கெளம்புங்கோ பீச்ச்சுக்கு போலாம்"

"போப்பா, இவ்வளவு லேட்டாயிடுத்து"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல அர்விந்த் ரெடியா? போலாமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.