(Reading time: 35 - 69 minutes)

"த பாருங்க பாரதி, இது சும்மா பூட்டித்தான் இருக்கு, அதனாலதான் சொன்னேன் எவ்வளவு குடுக்கறீங்களோ குடுங்கன்னு, உங்களுக்கும் அவசரம்னு சொன்னீங்க, அப்புறம் உங்க இஷ்டம், நா இதுக்கு மேல என்ன சொல்றது.. இனி நீங்க தான் முடிவெடுக்கணும்"

"சரி அட்வான்ஸ் எவ்வளவுன்னு சொல்லுங்க?"

"ஒரு ரூபாய்"

"ஒரு ரூபாய்க்கு வால்யூவே இல்ல மிஸ்டர் வேந்தன்"

"இருக்கே, இப்போ நான் வாங்கறேனே அட்வான்சா, அட்வான்ஸனா முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட வாங்குவாங்க, எங்க வாடகை கொடுக்காம போயிடுவாங்களோன்னு பயந்து... இங்க நீங்க வாடகையே குடுக்கலேன்னாலும் பரவாயில்ல, வீட்டை யாராவது பராமரிச்சா போதும் அவ்வளவுதான்"

"சரி, நாங்க இந்த வீக்கெண்டு மூவ் பண்ணிடறோம்"

"தட்ஸ் குட்... ரொம்ப சாமான் இருக்கா மூவ் பண்றதுக்கு ?"

"ரொம்ப ஒண்ணுமில்ல, கிச்சன் ஐட்டம்ஸ் இருக்கு, டீவீ , ரெண்டு மூணு ஸ்டூல் ரெண்டு சேர்"

"இந்த ஐட்டம்லாம்?" என்று அங்கே இருந்த சாமான்களை காண்பித்தாள் பாரதி

"நீங்க யூஸ் பண்ணுங்க, இங்க எல்லாமே இருக்கு, எல்லாம் என் பிரெண்டோடதுதான் உங்களுக்கு வேணாம்னா உங்க கிட்ட இருக்கறதெல்லாம் யாருக்காவது குடுத்துடுங்க இல்லேன்னா இங்கயே ஒரு ரூம்ல போட்டு வைங்க"

"சரி வேந்தன்"

"சரி மேடம், நான் வரேன் உங்களுக்கு ஹெல்ப்புக்கு, என்னிக்குன்னு சொல்லுங்க, எப்ப பால் காச்ச போறீங்க?"

'நான், நாளைக்கு சொல்றேனே"

"சரி" என்று எல்லோரும் கிளம்பி கீழே வந்தனர்

“குழந்தைகள் வான் வந்துவிட்டது, கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

'என்னப்பா, இவ்வளவு நேரம் வான் வந்துடுத்து பார்"

இரண்டு பேர் கன்னத்திலும் முத்தம் கொடுத்துவிட்டு..."கொஞ்சம் இவங்கள ஏத்தி விட்டு வரேன், நீங்க உள்ள இருங்க"

"சரி போயிட்டு வாங்க....பை அர்விந்த், பை ஆர்த்தி !"

"பை ஆன்டி... பய் பாட்டி"

"பய் டா செல்லம் " என்றார் பாரதியின் அம்மா

வேந்தன் குழந்தைகளை வேனில் ஏற்றிவிட்டு உள்ளே வந்தான்

"சாரி பாரதி மேடம், நான் வீட்ல இருக்கும்போது கண்டிப்பா அவங்கள வான்ல ஏற்றிவிடாம இருந்ததில்ல...'

"ஐயோ, குழந்தைகள கவனிக்கறதுதான் முக்கியம், எவ்வளவு  சமர்த்தான குழந்தைகள்..அம்மா இல்லாம சமர்த்தா ரெடியாய் போயிடறாங்களே"

"எல்லாம் பழக்கம்தான் “

"சரி வேந்தன் சார் கிளம்பறோம், எனக்கு பேங்க்குக்கு டைம் ஆயிடுத்து "

"எனக்கும் டைம் ஆயிடுத்து, எப்பவேண்ணா போன் பண்ணி சொல்லுங்க, நீங்க நாளைக்கே குடி வந்தாலும் எனக்கு ஒண்ணுமில்ல... எல்லாமென்னவோ ரெடியாத்தான் இருக்கு "

"சரி, ரொம்ப தேங்க்ஸ் வேந்தன் சார்"

"எவ்வளவு தேங்க்ஸ்.. எதுக்கு வேஸ்ட் பண்றீங்க.. நம்ம பிரெண்ட்ஸ்ங்க, எதுக்கு இந்த பார்மாலிடீஸ் எல்லாம்?"

"சரி நான் போயிட்டுவரேன்பா தம்பி" என்றார் பாரதியின் அம்மா

"வாங்கம்மா, சீக்கிரமே இங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கறேன், எங்களுக்கும் யாருமே இல்ல, நீங்க வந்தீங்கன்னா எங்களுக்கு சந்தோஷமாயிருக்கும், குழந்தைகளுக்கும் ஒரு பாட்டி கிடைப்பாங்க "

"கண்டிப்பா, சீக்கிரமே வந்துடுவோம் வேந்தன் தம்பி.. எனக்கும் குழந்தைகள ரொம்ப பிடிச்சிடுத்து"

அவன் ஒரு வசீகரமான புன்னகையை வீசி அவர்களை அனுப்பி வைத்தான்

பாரதி மனசுக்குள் 'இவனுக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்குன்னு சொல்லவே யில்ல?” என்று நினைத்தாள்

"நல்ல குடும்பம் பாரதி, ரெண்டு குழந்தைகளும் அழகா இருக்கு, பொண்ணு ரொம்ப சுட்டி, ஏன் அந்த தம்பி அவர் மனைவியை பத்தி ஒண்ணுமே சொல்லல?"

"என்னம்மா இது அநாகரீகமா... அதெல்லாம் கேக்க கூடாது "

"நான் என்ன அந்த தம்பியயா கேட்டேன், உன்கிட்ட தான சொல்றேன்"

"இருக்கட்டும்மா, எதுவானாலும் அவங்க குடும்ப விஷயம்... அவர் என்னோட பிரென்ட் அவ்வளவுதாம்மா.. நல்ல மனுஷன்"

'ஆமாமா, குழந்தைகள எவ்வளவு நல்லா வளர்த்திருக்கார்"

'ஹ்ம்ம்.. அவருக்கு கல்யாணமாய் குழந்தைகள் இருக்கறதே எனக்கு தெரியாது, இப்பத்தான் தெரியும்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.