(Reading time: 35 - 69 minutes)

பீச்சுக்கு போகும் வழியில் ஆர்த்தி, அர்விந்த் வழியெல்லாம் சண்டை போட்டுக் கொண்டு வந்தது இவர்களுக்கு ஒரு விருந்தாக இருந்தது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டும் அவர்களின் பேச்சில் ரகசியமாக புன்னகைத்துக் கொண்டு பீச்சுக்கு போய் சேர்ந்தார்கள்.

அங்கு போனவுடன் கொஞ்ச நேரம் குழந்தைகளுடன் ஓடி ஆடினான் வேந்தன், அவளையும் இழுத்து வந்தாள் ஆர்த்தி, பாரதிக்கு இது புதிது ஆனால் அந்த குழந்தைக்கு அம்மாவாக இருக்க வேண்டுமென்று அவர்களோடு சேர்ந்து விளையாடினாள் ... எல்லாம் விளையாடி முடிந்ததும், வேந்தன் சென்று ஐஸ்க்ரீம் வாங்கிவந்தான் அதை சாப்பிட்டு கொண்டே, பேசிக் கொண்டிருந்தார்கள் "ஆர்த்தி அர்விந்த், நம்ம கூட பாரதி ஆன்டி வந்து விளையாடியது உங்களுக்கு ஜாலியா இருந்ததா?" வேந்தன் ஆரம்பித்தான்

"ஆமாம்பா, பாரதி ஆன்டி இன்னிக்கு பீச்சுக்கு வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது....நான் கூட்டவுடனே ஆன்டி விளையாட வந்தாங்க பாத்தீங்களாப்பா? தாங்க்ஸ் ஆன்டி "

"என்னத்துக்குடா தாங்க்ஸ்லாம்?" என்று ஆர்த்தியை அனைத்துக் கொண்டாள்

"ம்ம்.. சரி, நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒன்னு சொல்லுங்க, நீங்க ரெண்டு பேரும் அம்மாவை மிஸ் பண்றீங்களா?"

ஆர்த்தியும், அர்விந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், "ஏம்பா திடீர்னு இந்த மாதிரி கேக்கறீங்க?" அர்விந்த் கேட்டான்

"இல்லப்பா, உங்களுக்கும் வயசாயிண்டே இருக்கு , இப்போ பெரிய பசங்களாயிட்டீங்க... சோ உங்களோட தேவை என்னன்னு இந்த அப்பாக்கு தெரியறதுக்குத்தான் கேட்டேன்"

"எங்களுக்கு சின்ன வயசுலேர்ந்தே அம்மா இல்லேன்னு ஒரு குறை இருக்குதுப்பா, ஆனா, நீங்கதான் அந்த எண்ணமே இல்லாம எங்களுக்கு எல்லாம் செய்யறீங்களே, ஆனா, எங்க பிரெண்ட்ஸ் எல்லார்க்கும் அம்மா, அப்பான்னு ரெண்டு பேருமே எல்லா ஸ்கூல் பங்க்ஷனுக்கும் வராங்க, அப்பறம் அவங்க எல்லாம் எங்க அம்மா இத செய்வா, இத சொல்வாங்கன்னு சொல்லும்போது எங்களுக்கும் அம்மா இல்லையேன்னு இருக்கும், ஆனா அத எப்படி உங்க கிட்ட சொல்றதுன்னு எங்களுக்கு தெரியாது, ஏன்னா, நீங்க வந்ததும் எந்த குறையும் இல்லாம எல்லாம் செய்வீங்க, அத சொல்ல மறந்துடுவோம்... ஆனா இப்பல்லாம் நான் அம்மாவை ரொம்ப மிஸ் பன்றேம்ப்பா "

"ஏம்மா ஆர்த்தி?"

"தெரியலப்பா?"

"வேந்தனும், பாரதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...."சரி, பாரதியை உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கா?"

இப்போது ஆர்த்தி, அரவிந்தின் முறையானது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

"அப்பா எதுக்காக இத கேட்டீங்க, நீங்களே சொல்லுங்கப்பா?" அர்விந்த்,

"ஹ்ம்ம்.... சரி நேரே விஷயத்துக்கு வரேன்... நானும், பாரதியும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம், இதுல கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் ஒத்துண்டாத்தான், இதுவும் உங்களுக்கு அம்மாவும் இனி தேவை, முக்கியம்னு தான் நாங்க ரெண்டு பேரும் பேசினோம், ஆனா உங்க ரெண்டு பேருக்கும் பாரதி அம்மாவா வரது பிடிச்சிருந்தா மட்டும்தான் இந்த கல்யாணம், இன் பாக்ட் இந்த கல்யாணமே உங்களுக்காகத்தான்... அர்விந்த், ஆர்த்தி பெரிய பொன்னாயிண்டு வரா, அவளுக்கு அம்மா தேவைடா.... திடீர்னு அப்பா கல்யாணம்னு சொல்றாரேன்னு யோசிக்காத நீ, ஆர்த்தி, நீ ஏற்கனவே பாரதிகிட்ட 'உங்கள நான் அம்மான்னு கூப்பிடலாமான்னு'  கேட்ருக்கே, உனக்காகத்தான் நாங்க பேசி, உங்க கிட்ட இத பத்தி பேசி முடிவெடுக்கலாம்னு ....."

"ஆமாம்பா, ஏதாவது தப்பா சொன்னேன்னாப்பா?" என்று தலை குனிந்தாள்  

"இல்லம்மா, தப்பு எதுவும் இல்ல? உங்களுக்கு அம்மாவும் அப்பாவுமா, இத்தனை வருஷம் இருக்கேன்னு நான் நினைச்சுண்டிருந்தேன், அப்பா, அம்மாவோட இடத்தை நிரப்ப முடியாதுன்னு இப்பத்தான் புரிஞ்சுக்கிட்டேன்...அதனால நாங்க இத பத்தி பேசினோம், உங்களுக்கு சம்மதம்னா, பாரதி உங்க அம்மாவா நம்ம வீட்டுக்கு வருவா,அது மட்டுமில்ல  உங்க பாட்டியும் நம்மளோட இருப்பாங்க?"  அவன் கூறிவிட்டு பாரதியை பார்த்தான்.. அவளும் அவனை பார்த்து கண்ணாலேயே அவன் பேசியது சரியே என்று ஜாடை காண்பித்தாள்

ஆர்த்தி பாரதியின்  கையை கட்டி  கொண்டு  “அப்பா எனக்கு அம்மா வேணும்பா, இந்த அம்மாதான் வேணும்" என்று அவள் சொல்லும்போதே, பாரதி கண்ணில் கண்ணீருடன் அவளை அனைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள், வேந்தனுக்கு  அவர்களின் அன்னோன்னியம்

பார்த்து ஆச்சர்யம்,

எனக்கும்பா, அம்மாவை பிடிச்சிருக்குப்பா, எங்களுக்கு இந்த அம்மாவை ரொம்ப பிடிச்சிருக்குப்பா" என்று அரவிந்தும் கூறுகையில் அவனால் நம்பவே  முடியவில்லை, அம்மாவுக்காக இந்த குழந்தைகள் ஏங்கியிருக்கிறார்களா? ஐயோ இத்தனை நாள் தெரியாம போயிடுத்தே?' என்று மண வருத்தப் பட்டான் வேந்தன்

"என்னப்பா யோசிக்கறீங்க?" அர்விந்த் கேட்டான்

"இல்லப்பா, நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு நாள், அம்மாவுக்காக எவ்வளவு ஏங்கி இருக்கீங்கன்னு தெரியுது, இது எனக்கு எப்படி தெரியாம போச்சுன்னு யோசிக்கறேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.