(Reading time: 35 - 69 minutes)

வள் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து விட்டாள் 'ஆன்டி... ஆன்டி..." என்று அவளை உலுக்கினாள் ஆர்த்தி

"என்ன ஆச்சு ஆன்டி?"

"ஒண்ணுமில்லடா " என்று வாய் கூறினாலும் அந்த குழந்தைகள் அம்மா இல்லாத குழந்தைகளா, ஏன் வேந்தன் சொல்லவேயில்லை 'என்று நினைத்துக் கொண்டாள் அவள்

அவள் அம்மாவும் இதையே அன்று இரவு படுக்கப் போகுமுன் கூறியது, உடனே வேந்தனை கேட்கணும்போல இருந்தது அவளுக்கு

ருவாரம் பொருத்து, அன்று அவள் கேட்டாள், அவன் முழிப்பது, எவ்வளவு அழுத்தக்காரன் பதிலே சொல்லாமல் நழுவப் பார்க்கிறான், விடக் கூடாது இவனை' என்று மனதில் நினைத்துக் கொண்டாள்

அவனுக்கோ முகிலின் நினைவு வந்தது.

"என்ன வேந்தன் நான் கேக்கறேனில்ல, பதிலையே காணோம்"

'எனக்கு கல்யாணமே ஆகல பாரதி, அப்பத்தான என் ஒயிப கூட்டிட்டு வரமுடியும்"

'என்ன சொல்றீங்க வேந்தன்?" என்று அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தாள்

"ஆமாம்" என்றான் கூலாக

"அப்போ குழந்தைகள்? அனாதை பசங்களா?"

'ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க பாரதி, அவங்க என் என் ....."

"முகிலோடு, சந்திரிகா வீட்டுக்கு போய் அவள் அம்மாவிடம் பேசி கல்யாணத்தை முடிவு செய்தேன் . ஒரு மாதத்தில் கல்யாணம் முடிந்தது. ஒரே வருடத்தில் இந்த குழந்தைகள் ட்வின்ஸ் பிறந்தார்கள், நானும் முகிலும் சந்தோஷத்தின் உச்சிக்கே போனோம்... இரண்டு வருடம் ரொம்ப சந்தோஷமாக கழிந்தது, இரண்டு வருடம் கழித்து ஒரு நாள், சந்திரிகா ரொம்ப தொந்தரவு செய்தாள், ரொம்ப போர் அடிக்குது என்ன சினிமாக்கு கூட்டிண்டு போன்னு.. அவன் மாட்டேன்னுத்தான் சொன்னான் .  நான்தான் பாவம்டா அவ, ரெண்டு குழந்தைகளோடு வீட்டலியே அடைஞ்சு இருக்கா கூட்டிண்டு போ, நான் குழந்தைகளை ஆயாம்மாவோடு பார்த்துக்கறேன்னு சொன்னேன்  அவனை தொந்தரவு பண்ணேன், என் பேச்சுக்கு எப்பவுமே மறு பேச்சு பேசாதவன் உடனே அவளைக் கூட்டிக் கொண்டு மாயாஜால் போனான் , போகும் போதே வழியில் ஆக்சிடெண்டில் ரெண்டு பேருமே .... “என்று குலுக்கினான் ..." அவனை எப்படி தேற்றுவது என்று அவளுக்கு புரியவில்லை. அவளுடைய கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.

அவனே தொடர்ந்தான் "அவர்கள் இருவருக்கும் நானே இந்த கையால் எல்லாம் செய்து முடித்தேன், இந்த குழந்தைகளை என் குழந்தைகளாக்கிக் கொண்டேன்.... சந்திரிகாவின் அம்மாவோ வயதானவர், ஒரே மாசத்தில அவருடைய ஒரே பெண்ணோட இறுதி முடிவை நினைச்சு நினைச்சு அவரும்  மாரடைப்பில் போய் விட்டார்.  இவர்கள் என் குழந்தைகள் பாரதி... என் குழந்தைகள்."

"நீங்க ஒரு கல்யாணம் பண்ணியிருக்கலாமே வேந்தன்?"

"எனக்கு இஷ்டமில்ல பாரதி, என் குழந்தைகள  தன் குழந்தைகளாய் நினைக்கும் மனப்பக்குவம் யாருக்கு இருக்கும் ? என் குழந்தைகளுக்கு அம்மா வேணும்னு நினைச்சு கல்யாணம் பண்ணிண்டு என் குழந்தைகளையும் என்னையும் பிரிச்சுட்டா? அதனாலதான் நான் கல்யாணத்த பத்தியே நினைக்கல பாரதி"

"இல்ல வேந்தன், ஆர்த்திக்கு ஒரு அம்மா வேணும் .... அர்விந்த்துக்கு, அம்மா இல்லாம அப்பா மட்டும் போறும் ஆனா ஒரு பொண்ணு அப்படி இருக்க முடியாது....புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கறேன்"

"ஹ்ம்ம் புரியுது பாரதி... எவ்வளவோ அப்பாக்கள் பசங்கள... பொண்ணு பசங்கள தனியா வளர்க்கிறது இல்லையா.. ஏன் என்னால அது முடியாது? என்னால என் பொண்ணு பையன் ரெண்டு பேரையும் நல்லாவே ஒரு குறை இல்லாம வளர்க்க முடியும்னு நம்பறேன்"

"ஆர்த்தி டீன் ஏஜ் வரும்போது ரொம்ப அம்மாவை தேடுவா வேந்தன் அத நினச்சு பாருங்க, ஒரு பொண்ணு தன் அம்மாகிட்ட பகிர்ந்துக்க நெறைய விஷயங்கள் இருக்கும் கத்துக்க நெறைய விஷயங்கள் இருக்கு, இதெல்லாம் கண்டிப்பா உங்ககிட்டயோ, இல்ல அவள் கூட பொறந்தவன் கிட்டயோ ஷேர் பண்ண முடியாது"

"சரி, என் குழந்தைகளுக்கு ஏத்த அம்மாக்கு நான் எங்க போவேன் பாரதி, எந்த பொண்ணு என் குழதைகளை தன் குழந்தைகளாய் நினைச்சுப்பா? எந்த பொண்ண கல்யாணம் பண்ணிண்டாலும், தனக்குன்னு குழந்தைகள் வேணும்னு எதிர்பார்ப்பாங்க, அதுக்கு இனி சாத்தியமில்லை... அப்படி நான் நினைச்சேன்னாகூட என் நன்பனுக்கு  நான் செய்யற துரோகம் "

"உங்களுக்கே தெரியும் எனக்கு கல்யாணத்துமேல ஒரு பெரிய விருப்பமில்லை... எனக்கு என் அம்மாதான் எல்லாமே, என் அம்மாவை விட்டு இன்னொருத்தரோட கல்யாணம்ன்ற பேரில் போக இஷ்டமில்லை... உங்களுக்கு  ஆர்த்தி அர்விந்த் எப்படியோ அப்படித்தான் எனக்கு என் அம்மா, இத்தனைக்கும் என் அம்மா ஃபிட் எனப்  டு பி அலோன், அப்ப கூட என்னால அவங்கள தனியா விட்டு போக முடியாது, வர போற புருஷன் எப்படியிருப்பார்னு தெரியாது, என் அம்மாவை மதிக்கலேன்னா? என்னோட பீலிங்ச புரிஞ்சுக்கலைன்னா? அதனாலதான் கல்யாணமே வேணாம்னு இருந்தேன்.... இப்போ, உங்களுக்கு ஆட்சேபமில்லன்னா ரெண்டு குழந்தைகளும் என்ன அம்மான்னு கூப்பிடலாம் எனக்கு அதுல முழு சம்மதம்…..   சம்மதம்  மட்டுமில்ல விருப்பமும்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.