(Reading time: 35 - 69 minutes)

ப்போதுமே ஆர்த்தி பாதி ராத்திரியில் எழுந்து வந்து அவன் பக்கத்தில், அவனை கட்டிக்க கொண்டு படுத்துக்க கொள்வாள். அரவிந்தோ விடிகாலையில் எழுந்து வந்து இன்னொரு பக்கம் படுத்துக்க கொள்வான் இருவரும் அவனை கட்டிக் கொண்டு படுப்பார்கள், ஒவ்வொருநாளும் சந்தோஷத்தில் அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழியும் , விடி காலை ஐந்தரை மணிக்கு எழுந்து அரை மணி நேரம் யோகா செய்வான் பிறகு குழந்தைகளையும் எழுப்பி, அவர்களை கவனிப்பது முதல் ஸ்கூலுக்கு அனுப்பி வைத்து தான் கிளம்பி போவது வரை ஒவ்வொன்றும் இவனே கவனிப்பான், இல்லையென்றால் இவனால் முடியாது, குழந்தைகளும்  வருத்தப் படுவார்கள்

கொஞ்ச நேரத்தில் வாசல் பெல் சத்தம் கேட்டது, கதவு திறந்தது...

"யார் நீங்க?" ஆரத்தித்தான் கதவை திறந்து கேட்டது

"நான்..... இங்க வேந்தன்னு?"

"ஓ, அப்பாவ பார்க்கணுமா? உள்ள வாங்க"

"மேடம் பேர் என்ன?"

'உங்க பேர் என்ன சொல்லுங்க முதல்ல?"

அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "என் பேரா மேடம், என் பேர் பாரதி "

"ஓ, நைஸ் நேம்! என் பேர் ஆர்த்தி"

"ஓ! தேங்க்ஸ்.. வெரி நைஸ் நேம் ஆர்த்தி"

"தேங்க்ஸ் ஆன்டி, உள்ள வாங்க ஆன்டி... இவங்க யாரு?"

"யார் வந்துருக்கா ஆர்த்தி? இவ பாட்டு பேசிட்டே இருப்பா... ' என்று வெளியே தானே பேசிக் கொண்டே வந்தான் வேந்தன்

"கொஞ்சம்" என்று தலையை, தன் ஆள் காட்டி விரலால் சுழற்றி காண்பித்தாள் ஆர்த்தி

'பக்!' என்று சிரித்து விட்டு, அதை அடக்கிக் கொண்டாள் பாரதி

வெளியே வந்த வேந்தன் பாரதியை பார்த்த பின் "ஐயோ மறந்துட்டேன்... வாங்க, வாங்க... உள்ள வாங்க, ஹேய் வாயாடி, உள்ள வந்து யார் வந்திருக்காங்கன்னு சொல்ல மாட்டியா? வாசல்லேயேவா நிக்க வச்சு பேசறது?"

"வாங்க, வாங்கம்மா"

அவர்கள் உள்ளே வந்தார்கள்.."உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கா, அழகா பேசறா வேந்தன்"

"ம்ம், ஆமா.. நல்லா பேசுவா"

"உக்காருங்க, நான் டிபன் காபி ரெடி பண்ணியிருக்கேன் வாங்க சாப்பிடலாம்"

"இல்ல நாங்க சாப்ட்டுட்டுத்தான் வந்தோம்.. நீங்க சாப்பிடுங்க"

"சும்மா இருங்க, உங்கள யார் சாப்பிட்டு வர சொன்னா, இங்க கொஞ்சமா சாப்பிட்டுத்தான் ஆகனும்"

"இல்ல வேந்தன் காப்பி குடுங்க, நாங்க சாப்பிடறோம், டிபன் வேணாம்"

"சரி கொஞ்சம் இருங்க நான் காப்பி கொண்டு வரேன்"

'சரி" என்று உட்கார்ந்தார்கள் பாரதியும் அவள் அம்மாவும்

சிறிது நேரத்தில் காப்பியுடன் வந்தான் வேந்தன் , அவர்கள் வாங்கி குடித்தவுடன், "காப்பி சூப்பர், உங்க ஒயிப் கிட்ட சொல்லணும்"

"என் ஒயிப் இல்ல நான் தான் காப்பி போட்டேன் என்கிட்டயே சொல்லுங்க "

"ரியல்லி? நீங்களா போட்டீங்க? சூப்பர் காப்பீங்க"

"ஆமாம் தம்பி, ரொம்ப நல்லாயிருக்கு'

"தேங்க்ஸ்மா, சரி இருங்க மேல போய் வீட்டை போய் பார்க்கலாம்"

என்று சாவியை எடுத்துக்கொண்டு வந்தான்

"ஹேய் செல்லங்களா, சாப்பிட்டு ரெடியா இருங்க வான் வந்துடும்.. நான் ஆண்டியோட மேல போய் வீட்டை காட்டிட்டு வந்துடறேன், அதுக்குள்ளே சாப்பிட்டு ரெடியா இருங்க ஆர்த்தி, அர்விந்த் "

"சரிப்பா" என்று கோரசாக  கூறினார்கள்

எல்லோரும் சிரித்துக் கொண்டே மாடிக்கு போனார்கள், வீட்டை திறந்து "உள்ள வாங்க பாரதி, வாங்கம்மா" என்று கூறியபடியே உள்ளே போனான் வேந்தன்

'வீட்டை சுத்தி பாருங்க" என்றான்

பிளாட் தான், ஆனால் மிக பெரியதாய் இருந்தது..."ரொம்ப பெரிசு, நீட்டா இருக்கு " என்று கூறிக் கொண்டே வீட்டை சுத்தி பார்த்தார்கள்

"ரொம்ப நன்னாயிருக்கு வேந்தன், ஆனா ரொம்ப பெரிசு நாங்க ரெண்டு பேர் தான் எங்களுக்கு இது ரொம்ப பெரிசு, அது மட்டுமில்ல எங்களால ரொம்ப வாடகை கொடுக்க முடியாது"

"நீங்க கொடுக்க வேணாம் பாரதி, உங்கள யார் கேட்டா? உங்களுக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு குடுங்க, இந்த பிளாட் என் பிரெண்டோடது, நான் சும்மாத்தான் பூட்டி வச்சுருக்கேன், நீங்க யூஸ் பண்ணீங்கன்னா சந்தோஷம்தான் பாரதி, கவல படாம குடியேறுங்க, நீங்க என்னம்மா சொல்றீங்க? "

"நல்லாஇருக்கு பாரதி , தம்பிகிட்ட சரின்னு சொல்லு, அவர்தான் நீ என்ன வாடக குடுக்கறியோ குடுன்றாரு இல்ல?"

"என்னம்மா பேசற, இவ்வளவு பெரிய பிளாட்டுக்கு வாடகை எவ்வளவு இருக்கும் தெரியுமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.