(Reading time: 35 - 69 minutes)

"ப்பா கோபமாப்பா?, வேற யாராயாணா கூட்டிட்டு வந்து இவங்க உன் அம்மாவா வரப்போறாங்கன்னு நீங்க சொல்லியிருந்தா யோசிச்சிருப்போம் , ஆனா பாரதி அம்மாவை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா அதான் உடனே பதில் சொல்லிட்டோம்? உங்களுக்கும் அம்மாவை பிடிச்சிருக்கில்ல?"

"உங்கம்மாவை எனக்கு பிடிக்காமையா? ரொம்ப பிடிச்சிருக்கு" என்று பாரதியை பார்த்துக் கொண்டே கூறினான், அந்த பார்வையில் அவளுக்கு முகம் சிவந்தது

“ உங்களுக்கும்மா?” என்றுஆர்த்தி கேட்கவும், அவளும் அவனைப் பார்த்துக்கொண்டே

“உங்கப்பாவை, யாருக்குத்தான் பிடிக்காம போகுமாம்? எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு”

‘ ஹே….’ என்று ஆர்த்தியும், அர்விந்தும் சந்தோஷமாக கத்தினார்கள்

“ சரி...சரி…. இப்ப நாம பாட்டிகிட்ட பேசனும், அவங்க சம்மதம் வேணுமில்ல?”

“சரி… அப்ப கெளம்பலாம் வாங்க”

“அப்பா, அவ இப்ப கெளம்பிடுவா! நீங்கதான் சாப்படறதுக்கு  எல்லாம் ஏற்கனவே வாங்கி கொடுத்துட்டீங்களே…”

“ஓ…..” என்றான் வேந்தன்

“ஏய், நீ அடங்க மாட்டியா? எப்பவும் என்ன வம்புக்கிழுக்கறதே பொழப்பா போச்சு.”  என்று கோபத்தோடு ஆர்த்தி கூறிய விதம் எல்லோருக்கும் சிரிப்பு வந்தது, வேந்தன் அடக்கிக் கொண்டான், அதை பார்த்த பாரதியும் அடக்கிக் கொண்டாள்

அவர்களுடைய சண்டை கொஞ்ச நேரம் தொடர்ந்தது. …..

வர்கள் கல்யாணமும், நண்பர்கள் முன்னிலையில் நடந்தேறியது.

அவர்கள் பதினெட்டு வயதாகும் போது, வேந்தன் அவர்களை உட்கார வைத்து

“ உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் பேசணும்... இப்போ நீங்க பெரிய பசங்க நா சொல்ற விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கற திறமை உங்களுக்கு இருக்கு, ரொம்ப எமோஷனாகக் கூடாது.. இத நான் இப்போ சொல்றதுக்கு காரணம், நாளைக்கு , எங்ககிட்ட ஏன் சொல்லலைன்னு கேட்க்க கூடாது அதுக்காகத்தான்"

"என்னப்பா ரொம்ப சீரியஸான மேட்டராப்பா? யு சவுண்ட் சீரியஸ்?"

அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது...."அப்பா இஸ் எவரிதிங் ஓகே? பிஸினஸ்ல லாஸா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லடா.... திஸ் இஸ் அபௌட் யு டூ..... உங்களோட அப்பா, ஐ மீன் ரியல் அப்பா நான் இல்ல..."

"நாங்க அனாதையாப்பா?" ஆர்த்தி

"ஏய்.... அப்படிலாம் சொல்லாத.....நீங்க என் பசங்கதான், ஆனா உங்கப்பா அம்மா பேர் முகில், சந்திரிகா, "அவன் கண்களில் கண்ணீர் இன்னும் வழிந்துக் கொண்டிருந்தது

"நீங்க என் முகிலோட குழந்தைகள், என்னோட குழந்தைகள்டா"

"இப்போது அவர்கள் கண்களிலும் கண்ணீர் . " அப்பா ப்ளீஸ் அழாத ப்ளீஸ், அவங்களுக்கு என்ன ஆச்சு, அவங்க எங்கப்பா?" என்று அர்விந்த் கேட்க

"அவங்க ரெண்டு பேரும் உயிரோடு இல்லப்பா, என் முகில் என்னையும், உங்களையும் விட்டு போயிட்டாண்டா, என்ன விட்டு போயிட்டாண்டா" என்று குலுங்கி குலுங்கி அழுதான் வேந்தன்

"அப்பா ப்ளீஸ் அழாதப்பா...உன்னால சொல்ல முடியலேன்னா பரவாயில்லப்பா, இன்னொரு நாள் இத பத்தி பேசிக்கலாம் "

அவன் தன்னை சரி படுத்திக்க கொண்டு "இல்ல இப்ப ஆரம்பிச்சுட்டேன், பேசிடலாம்..... முகில் என்னோட பிரென்ட், நாங்க ரெண்டு பேரும் கூட பிறந்தவங்க போல, ஒன்னாவே வளர்ந்தோம், முகிலோட பேரன்ட்ஸ்  அவனோட சின்ன வயசுலயே இறந்துட்டாங்க அதனால நான் எங்க அம்மாகிட்ட சொல்லி எங்களோடையே அவனை இருக்க சொல்லி என்னோடையே வளர்ந்தான் ரெண்டு பேரும் ஒரே மேஜர் காலேஜ்ல, ஒரே கம்பெனில வேல, அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து ஆரம்பிச்ச பிசினெஸ் தான் இது. இணை பிரியாத நண்பர்கள் ஒரு பேச்சுக்கு சொல்லுவாங்க, உண்மையில நாங்க அப்படித்தான், இணை பிரியாம வளர்ந்தோம், அவனோட கல்யாணம் வரைக்கும், அப்புறமும் இந்த மாதிரி மாடி, கீழத்தான் இருந்தோம்." என்று நடந்தது மொத்தம் சொல்லி முடித்தான்

அவர்களுக்கும் நம்ப முடியவில்லை ஆனாலும் அவர்கள் தங்களை சமாதானப் படுத்திக் கொண்டனர். வேந்தன் வேதனையை பார்த்து அவர்கள் தங்கள் துயரத்தை வெளியே காண்பிக்காமல் எதுவுமே பாதிக்காதது போல் இருந்துவிட்டார்கள்

வேந்தனுக்குத்தான் கஷ்டமாக இருந்தது….

தனிமையில்......

"என்ன அர்விந்த் அப்பா என்னென்னவோ சொல்றாரு?"

"ஹ்ம்ம்...ஆனா நமக்கு எப்பவும் நம்ம அப்பா இவர்தான், நம்ம பெத்தவங்கள நாம பார்த்ததில்ல, நம்மள கண்ணுக்கு கண்ணா பார்த்துண்டது நம்ம அப்பாதான், நமக்கு எல்லாம் நம்ம அப்பாதான்.. புரிஞ்சுதா ஆர்த்தி?"

"புரிஞ்சுது, ஆனா, அப்பா எப்படிடா, ஒரு நட்புக்காக தன் வாழ்க்கையையே விட்டு கொடுத்திருக்கார்? நமக்காக கல்யாணம் பண்ணிண்டிருக்காரு, அம்மா என்னோடத்தானே படுத்துக்கறாங்க? அவங்க ரெண்டு பேரும் நமக்காகவே தங்க வாழ்க்கையை தியாகம் பண்ணிண்டிருக்காங்கல்ல"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.