(Reading time: 35 - 69 minutes)

'போலாம்பா"

"சரி நீ வரியா இல்லையா ஆர்த்தி, நாங்க ஐஸ்க்ரீம் சாப்பிடப்போறோம், வந்தா வா, என்ன அர்விந்த் நீ ரெடியா ஐஸ்க்ரீம் சாப்பிட?"

"நான் ரெடிப்பா"

"அவன் சாப்பிட என்ன கொடுத்தாலும்,  எல்லாத்துக்கும் ரெடியாயிருப்பான்"

"சரி அப்பா நாங்க போறோம், உனக்குத்தான் வேணாமே, வாடா நாம போலாம்" அவர்கள் இருவரும் கிளம்பினார்கள், "சுவர்ணம்மா, நாங்க போயிட்டு வரோம், சாப்பாடு ரெடியாயிடுத்து இல்லையா, ஆர்த்திக்கு போட்ருங்க, நானும் அர்விந்தும் வந்து சாப்டுக்கறோம்"

அவர்கள் கிளம்பி காரில் ஏறப் போகும் நேரம் ஓடி வந்தாள், அவனுடைய செல்ல பெண் ஆர்த்தி

"அப்பா, நில்லுப்பா...அதெப்படி நா இல்லாம ரெண்டு பேரும் போவீங்க?"

"நான் கூப்ட்டேம்மா நீ தான் என்னெவோ பிகு பண்ணிண்ட"

கார் கதவை திறந்து கொண்டு உட்கார்தாள்  

இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஐஸ்க்ரீம், பட்டாணி சுண்டல், வேர்க்கடலை என்று எல்லாம் சாப்பிட்டார்கள், அது மட்டுமில்லை ஓடி ஆடி விளையாடினார்கள், இந்த மாதிரி ஒவ்வொருநாளும் இரவு அவர்களை கூட்டிக் கொண்டு வெளியே போய் விட்டு வருவான் வேந்தன்

"அப்பா, வர லீவுக்கு எங்கப்பா கூட்டிட்டு போக போற ?"

"தெரியலையே? இந்த லீவுக்கு எங்கயும் போக முடியாதுன்னு நினைக்கறேன் ?"

"இல்லப்பா கண்டிப்பா போகணும்பா'

"ஆமாம்பா, எங்கயாவது போலாம்பா?" அரவிந்தும் கூட ஒத்து ஊதினான்  

"ஸோ, ரெண்டு பேரும் இந்த விஷயத்துல ஒண்ணா சேர்ந்துட்டீங்களா? ம்ம்? சரி எங்க போலாம்?"

"தெரியலப்பா, அதான் ஒன்ன கேக்கறோம்?"

"ஹ்ம்ம் சரி நான் யோசிச்சு சொல்றேன், ஆனா ரெண்டு பேரும், நல்லா படிச்சு க்ளஸ்ல பார்ஸ்ட் வரணும்"

"அப்பா, எப்படிப்பா ரெண்டு பேரும் பார்ஸ்ட் ரேங்க் வாங்குவோம், ஒருத்தர்தான் வாங்க முடியும் அதனால, அரவிந்த் நீ நல்லா படிச்சு நீ பார்ஸ்ட் வாங்கு போறும்" என்றாள் ஆர்த்தி

"அதான, அரவிந்த் நீ பார்ஸ்ட் ரேங்க் வாங்கு, நம்ம ரெண்டு பேர் மட்டும் எங்கயாவது ஊருக்கு போயிட்டு வரலாம்"

"ஐயோ, என்ன எப்படி வுட்டுட்டு போவீங்களாம்?"

"ஏன் மாட்டோமாம், ஒன்ன சுவர்ணம்மாகிட்ட உட்டு போவோம், என்ன அரவிந்த் சொல்ற?"

"ஆமாம்பா, நீயும் நானும் மட்டும் போலாம்பா, இவ வந்தா லொட லொடன்னு பேசிட்டே வருவா"

"இல்லேன்னா ஒன்ன மாதிரி உம்முனு, உம்மணா மூஞ்சி மாதிரி வரணுமா இல்லப்பா?"

வேந்தனுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டான்

"பார்ப்ப, என்ன உம்மணா மூஞ்சின்றா?"

"நீயே அவளுக்கு பதில் கொடு அரவிந்த், இதுக்கெல்லாம் அப்பாவ கூப்பிட கூடாது"

இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டனர். இது அடிக்கடி நடப்பது தான், அதை இவன் எப்போதும் ரசிப்பதுதான்… சின்ன வயதில் சின்னச் சின்னச் சண்டைகள் ஒரு ரசனை. அவனும்,  முகிலும் ஒன்றாவே வளர்ந்திருந்தாலும்,  என்ன சொன்னாலும் முகில் அவனை எதிர்த்து எதுவுமே பேசமாட்டான். சண்டையும் போடமாட்டான்.

இவர்கள் சண்டை யை பார்க்கும் போது வேந்தன் கண்கள் எப்போதுமே பணித்துவிடும்.

வீடு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் சண்டை முடிந்து நண்பர்கள் ஆகிவிட்டனர்.

“ சரி ரெண்டு பேரும் போய் குளிச்சுட்டு வாங்க... அப்புறம் அப்பா போய் குளிக்கறேன்."

"ஓகேப்பா... "என்றாள் ஆர்த்தி உள்ளே போய் கொண்டே

"அப்பா நீ போய் குளிப்பா நான் அப்புறம் குளிக்கறேன்" அரவிந்த் ரொம்ப பெரிய மனுஷன்மாதிரி கூறினான்

"இல்லடா நீ போய் குளிச்சுட்டு வா, நான் வெயிட் பண்றேன், நீயும் ஆர்த்தியும் சாப்பிடுங்கோ நான் வந்து ஜாயின் பண்ணிக்கறேன்"

"இல்லப்பா நாம ஒன்னாவே சாப்பிடலாம்"

"சரி குய்க்க்கா வா பாக்கலாம்"

"சரிப்பா, இதோ ஓடி வந்துடறேன்"

அவர்கள் சென்றவுடன் 'எவ்வளவு கொடுத்து வச்சிருக்கேன் நான் இந்த மாதிரி அழகான, ஸ்மார்ட்டான ரெண்டு குழந்தைகள கொடுத்த கடவுளுக்கு கோடி நன்றி சொன்னாலும் போறாது' என்று சந்தோஷப் பட்டுக்கொண்டான் வேந்தன்

அவர்கள் வந்தவுடன் தானும் குளித்து வந்து அவர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தான் வேந்தன், இரவு சில அக்கவுண்ட்ஸ் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.