(Reading time: 35 - 69 minutes)

வளை ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தான் வேந்தன், அவள் தலை குனிந்திருந்தாலும் அவள் முகம் வெட்கத்தில் சிவந்திருந்ததை அறிந்தான்.

"பாரதி தாங்க்ஸ், ஆனா உங்கள அம்மான்னு என் குழந்தைகள் கூப்பிடலாம் ஆனா ஊர் உலகம் என்ன நினைக்கும், நாம கல்யாணம் பண்ணிக்காம  அவங்க உங்கள அம்மான்னு கூப்டா நல்லாயிருக்காது பாரதி"

அவள் மனதுக்குள் ' மக்கு மக்கு இத விட ஓப்பனா நான் எப்படி சொல்றது?'

அவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள்...."என்ன, மக்கு உனக்கு இன்னும் புரியலையான்னு நினைக்கறீங்களா?"

'ஐயோ மனசுல இருக்கறத படிக்கறானே'

"உங்க மனசுல இருக்கறது உங்க முகத்துல நல்லா தெரியறது பாரதி.... உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை, எனக்கு இனிமே குழந்தைகள் வேண்டாம், என் குழந்தைகள் ஆர்த்தியும் அர்விந்தும்தான், இதுக்கு முழு சம்மதம் வேணும், நீங்க நினைக்கற மாதிரி உங்க அம்மா இனி என் அம்மாவும் இதுலயும் எந்த சந்தேகமும் வேணாம்... நான் சொன்னதுக்கு நீங்க சரின்னா நாம முதல்ல பசங்க கிட்ட பேசலாம், அவங்க சம்மதிச்ச உடனே உங்க அம்மாகிட்ட பேசலாம் என்ன சொல்றீங்க?"

"எனக்கு முழு சம்மதம் வேந்தன், குழந்தைகள் கிட்ட பேசி சம்மதம் வாங்கினதுக்கு அப்புறம் அம்மாகிட்ட சொல்லலாம் ."

ன்னப்பா விஷயம், நாம எங்கேயாவது போறோமா? “ என்று கேட்டு கொண்டே வந்தனர் ஆர்த்தியும் அர்விந்தும்

“ம்…. இன்னிக்கு நான் சீக்கிரம் வந்துட்டேனே, எல்லாருமா பீச்சுக்கு போலாமா?”

வேந்தன் தன் குழந்தைகளிடம் கூறினான், பாரதி அவனை பார்க்கையில், இரண்டு கண்களையும் சிமிட்டி, புன்னைகைத்தான்

"ஹை ஜாலி அப்பா பீச்சுக்கு போலாம்பா... ஆன்டி நீங்களும் வரீங்களா, ஜாலியா இருக்கும்?"

அவனை பார்த்தாள் பாரதி, அவன் வா என்பது போல் தலையை ஆட்டவும் "கண்டிப்பா வரேன்.. உங்களுக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே?" என்று அவள் ஆர்த்தியையும், அரவிந்தையும் பார்த்து கேட்கவும்

"என்ன ஆன்டி தொந்தரவுன்னா உங்களையும் வரீங்களான்னு கேட்டிருப்போமா? எங்க அம்மா எங்க கூட வரா மாதிரி இருக்கும் ஆன்டி ப்ளீஸ் வாங்களேன்"

"சரிடா போலாம், நான் போய் என் ட்ரெஸ்ஸை சேஞ்ஜ் பண்ணிண்டு வரேன் என்ன?" என்று பொதுவாக கூறினாலும் அவன் தலை அசைக்கவும் அவள் மாடிக்கு சென்றாள். குழந்தைகளும் டிரஸ் சேஞ்ஜ் செய்ய சென்றார்கள்

அவன் தன் மேனிக்கு யோசிக்க ஆரம்பித்தான், எப்படி ஒரு நிமிடத்தில் எல்லாம் மாறிவிட்டது? எப்படி இவ்வளவு ஈசியாக ரெண்டு பேரும் ஒரே நிமிஷத்துல கல்யாணத்துக்கு ஒத்துண்டுட்டோம், ஆர்த்தி எப்படி அம்மாவை பார்த்ததுகூட கிடையாது எப்படி அவள் ஏங்கறாள், இது  எப்படி எனக்கு தெரியாம போச்சு இவ்வளவு நாளா? நான் என்னவோ குழந்தைகள் என்னையே நினைச்சுண்டு இருக்குன்னு நினைச்சுண்டிருக்கேன் ஆனா அம்மா அம்மான்றா? ஒரு வேளை பாரதி சொல்ற மாதிரி பெண் குழந்தைகளுக்கு அம்மாதான் முக்கியமோ? அப்படித்தான் இருக்கணும்... அப்படியிருந்தா நான் எடுக்கற டெசிஷன் சரியாத்தான் இருக்கும் '

"அப்பா, நான் ரெடி கெளம்பலாமா?"

"இரு அர்விந்த், இன்னும் ரெண்டு லேடீஸ் வரலையே?"

"லேடீஸ் ? ஓ, நம்ம வீட்டு லேடியையும் சேர்த்து சொல்றீங்களாப்பா?"

"ஏய், என்ன பார்த்தா பெரிய பொம்பள மாதிரியா தெரியுது? என்ன லேடிங்கற?"

"ஐயோ அம்மா நான் வரல இந்த விளையாட்டுக்கு, சொன்னது அப்பா" என்று விரலை வேந்தனை நோக்கி காண்பித்தான் அர்விந்த்

வேந்தன் புன்னகைத்தான் " என்னே உன் திருவிளையாடல்? காண்பிச்சு கொடுத்துட்டியா எட்டப்பா?"

"நான் காண்பிச்சு கொடுக்கலேன்னா, என் தலையை கொட்டப்பா கொட்டப்பான்னு, கொட்டிடுவாப்பா ...."என்று அழுகிற மாதிரி பாசாங்கு செய்தான் அர்விந்த்

இந்த அமர்களத்தை வாசலில் நுழையப்போன பாரதி நின்று ரசித்துக் கொண்டிருந்தாள்

“”என்ன நடக்கறது இங்க, என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?”

“வந்துட்டீங்களா பாரதி, டைம் ஆயிடுத்து போலாம்” என்று வேந்தன் கூறி வேகமாக வாசல் பக்கம் நடந்தான்.

'என்ன ஆச்சு இவனுக்கு, ஏன் இந்த மாதிரி நடந்துக்கறான்?என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே அவன் வேகத்துக்கு குழந்தைகள் போவதை பார்த்துக் கொண்டு அவளும் வேகமாக நடந்து அவர்கள் பின்னாடியே போனாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.