(Reading time: 21 - 41 minutes)

ன்னைக்கு காலைல கூட நா பெறாத மக்களுக்கு சொன்னேனே; எப்படியாவது உங்கள காப்பாத்திடுவேன்னு சொன்னேனே… இப்ப எந்த முகத்தை வச்சுக்கிட்டு அதுகள நா பாப்பே? ம்ஹீம்… என்னால அதுகளோட சாவ பாக்க முடியாது.  அம்புட்டு தகிரிய எம்மனசுலயில்ல; அதுக்கான தெம்பு என் உடம்புல இல்ல.. ஒத்த மகனுக்கு கொல்லி வச்சப்போ கூட இம்புட்டு வலிக்கல; நா பெறாத மக்க சாவ, சத்தியமா கண்ணால நா பாக்கமாட்டேண்டி மாரி! அதுக்கு முன்னால நா போயி சேந்துருவேண்டி’

ஒரு முடிவுக்கு வந்தவராக சாமிகண்ணு பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்தார்.  மதியம் இரண்டு மணி அளவில் அரசியூர் வந்து சேர்ந்தார். மதிய நேரத்தில் அரசியூர் மக்களின் நடமாட்டம் குறைவாக இருப்பதை தனக்கு சாதகமாக்கி கொண்டவர் வீட்டுக்கு போகாமல் அதே சமயம் யார் கண்ணிலும் படாமல் வயலுக்கு சென்றார்.  .

தண்ணீரில்லாமல் குத்துயிருமாய் கொலையிருமாய் வாடியிருந்த பயிர்களைப் பார்த்தவரின் மனதில் வார்த்தைகளால் விளக்க முடியாத வலி பிறந்தது.

“உங்களை இப்படி பாக்கமாட்டேன்னு காலைல இருந்த நம்பிக்க செத்து போச்சு.  ஆனா உங்களுக்கு நாங்கொடுத்த வாக்கு சாகாது.  என் உசுரு போகுமுன்ன உங்க உசுர போக விடமாட்டே” கிணற்று தண்ணீரை பாய்ச்ச பொருத்தப்பட்டிருந்த மோட்டார் இருந்த ரூமை நோக்கி ஆவேசமாக நடந்தார்.

நெற்பயிருக்காக வாங்கி வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்துகளில் ஒன்றை கையிலெடுத்தார். 

“எம்பிள்ளங்களை காப்பாத்த வாங்கினே உன்னை… நேரத்த பாத்தியா? உன்னோட யோகந்தா என் வாக்க காப்பாத்த போற நீ” விரக்தி புன்னகையை உதிர்த்தார்.

திடீரென மனைவியின் முகம் அகத்திலெழுந்தது.  “மொத முறையா உங்கிட்ட சொல்லாம போறே முருகாயி… என்னை மன்னிச்சிடுத்தா!” குரல் கம்ம கண்களின் அருவி பெருகியது.

அந்த பூச்சிகொல்லிப் புட்டியை வாயருகே கொண்டு சென்றவரின் கவனத்தை ஈர்த்தது அந்த சத்தம்.

“எனக்குந்தா எத்தன பேராச! தண்ணீயில்லாம வரண்டு கெடக்குற நெலத்துல தண்ணீ ஓடுற சலசலப்பு கேக்குது.  என்னத்த சொல்ல… சாகப்போறதால சித்த கலங்கிருச்சு சாமிகண்ணு….உனக்கு சித்த கலங்கிருச்சு” புலம்பியவர் இதழில் மறுபடியும் ஓர் விரக்தி புன்னைகை எட்டிப் பார்த்தது.

கை வேலை செய்ய புட்டி வாயருகே சென்ற நொடி மறுபடியும் அதே சலசலப்பு இன்னும் உரக்க கேட்டது.

பயிரைக் காத்துவிடும் பேராசையினால் தனக்கு கேட்ட சத்தம் உண்மையாகி விடாதா என்ற ஏக்கத்தோடு அவசரமாக அந்த அறையிலிருந்து வெளியே பார்த்தார்.

ஆம் சாமிகண்ணுவிற்கு கேட்ட தண்ணீரின் சலசலப்பு கற்பனையல்ல.  டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்டிருந்த தண்ணீர் பயிர் நிலத்தினில் பாய்ச்சப் பட்டிருந்தது.

மகிழ்ச்சியில் அகமும் முகமும் மலர ‘எப்படி சாத்தியம்?!’ என்ற ஆச்சரியமும் கேள்வியும் அவரை அவசரமாக நிலத்தை நோக்கி விரட்டின.

சிறு குழந்தையாக துள்ளியவர் கால்வாயில் வழிந்தோடிய தெளிந்த நீரை கைகளில் அள்ளி முகத்தில் அப்பி கொண்டார்.  மேலும் நீரை அள்ளி வானை நோக்கி இறைத்து விளையாடினார்.

இப்படியே சிறிது நேரம் கழிய தன்னிலைக்கு வந்தவராக டேங்கர் லாரியினிடம் வந்தார். 

“யாருப்பா நீ? சாமி மாறி வந்து போகயிருந்த எத்தனையோ உசுர காப்பாத்திட்ட! நால்லயிருக்கனு நீ ராசா மாறி”

“எனக்கு காசு கொடுத்தாங்க நா தண்ணீய ஓட்டியாந்த… அங்க இருக்காரே அவரதா நீங்க வாழ்த்தனு பெரியவரே” அவன் கை காட்டிய திசையில் ஒரு பெரிய வேப்பமரமிருந்தது.  அதன் நிழலில் யாரோ நின்றிருந்தார்.

“ரொம்ப நன்றி தம்பி! நாம்போயி அவர பாக்குறே” வேப்பமரத்தை நோக்கி நடந்தார்.

சாமிகண்ணுவிற்கு முதுகு காட்டி காரில் சாய்ந்தபடி நின்றிருந்தவரிடம், “நீங்க யாரோ? எவரோ? உங்க குடும்பமு நீங்களு நூறு வருச நல்லாயிருக்கனு.  இந்த உதவிக்கு நா என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல" குரல் கம்மினார்.

சட்டென திரும்பி சாமிகண்ணுவை தன்னோடு அணைத்து கொண்டார் அங்கு நின்றிருந்தவர்.

“என்னோட சாமி நீ இருக்கும்போது உன்னோட ராமுக்கு என்னடா கொற வர போகுது?! நானு எங்குடும்பமு நூறு வருசத்துக்கு மேலயு நல்லாயிருப்போ”

சாமிகண்ணுவின் கண்களில் கண்ணீரும் முகத்தில் வேதனையும் மகிழ்ச்சியும் கலந்த கலவை உணர்வை கண்டவர்

“என்னடா சாமி! சின்ன புள்ள மாறி அழுதுக்கிட்டு” சாமியின் கண்ணீரை துடைத்தார் ராமு.

சாமிகண்ணுவை இயல்பாக்க அவரின் தோள் மீது கைபோட்டு தன்னோடு அணைத்தபடி நடந்தார் ராமு.

“நாம பள்ளிகூட போகும்போது மூனா வகுப்புல படிச்சோமே… அந்த மூக்கு கண்ணாடி வாத்தியார் கூட என்னை அடிச்சுட்டே இருப்பாறே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.