(Reading time: 32 - 63 minutes)

ப்படியென்ன சார் முக்கியமான வேலை? சொல்லலாம்னா சொல்லுங்க. உங்க ஆர்வத்தைக் கண்டதால் கேட்டுவிட்டேன்.”

“அதில் ஒன்னும் ரகசியம் இல்லை சார். என் பொண்ணுக்கு இன்னிக்கு பட்டமளிப்பு விழா. அதுதான்.” சந்தோசமுடன் சொன்னார்.

எந்த கல்லூரி என்று விசாரித்தான்.

“அதற்கு நீங்க பர்மிசன் போட்டுட்டு போக வேண்டியதில்லை ராகவன் சார். நமக்கும் அழைப்பு வந்திருக்கு.”

“தெரியும் சார். உங்களை சிறப்பு விருந்தினரா அழைச்சிருக்காங்க.”

“அப்புறம் என்ன?”

“இல்லை சார்! நான் அஃபிசியலா வர விரும்பலை. என் பொண்ணோட தகப்பனா வந்து அவளது சந்தோசத்தில் பங்கெடுத்துக் கொள்ள ஆசைப்படறேன்.”

அவரை ஆச்சர்யம் விலகாமலே பார்த்தான்.

“உங்க பொண்ணு எந்த டிபார்ட்மென்ட்?”

“சிவில் சார். அப்ப நான் கிளம்பறேன் சார்.”

ராஜன்பாபுவும் நேரமாகிவிட்டதை உணர்ந்து கிளம்பினான். வெளியில் வந்த போது ராகவன் நடந்துகொண்டிருந்தது கண்டு வண்டியை அவரருகில் நிறுத்தினான்.

“என்ன சார் நடக்கறீங்க? வண்டி எடுத்துட்டு வரலியா?”

“இல்லை சார். விழா முடிந்து வரும்போது என் பையன், பொண்ணோட சேர்ந்து வெளியில் போற பிளான். அதான் கால் டாக்ஸி கூப்பிட்டுக்கலாம்னு.”

“நானும் அங்கேதானே போறேன். வண்டியில் ஏறுங்க. இல்லை. வேலையில் இல்லாத நேரத்தில் நான் அலுவலகக்காரை பயன்படுத்தமாட்டேன் என்று சொல்ல மாட்டீங்களே.”

அவனது தொனியில் சிரித்தவாறே ஏறி அமர்ந்தார்.

அமைதியில் ஆழ்ந்தவரை அவன் தொந்தரவு செய்யவில்லை.

ராகவனின் மனம் பின்னோக்கிப் பயணித்தது.

த்தனை வருடங்கள் கடந்து வந்த கடினமான பாதை இந்நேரம் நினைத்தாலும் நம்ப முடியவில்லை.

மனைவி இல்லாமல் அவர்கள் மூன்று பேருமாக வாழ ஆரம்பித்த போது அவள் சொன்னது எத்தனை உண்மை என்று புரிந்தது.

பணம் இருந்தால்தான் மதிப்பு என்றாள். சொந்தங்கள் கூட எங்கே பிள்ளைகளின் பொறுப்பை நம்மிடம் தள்ளிவிடுவானோ என்று ஒதுங்கின.

“பிள்ளைங்களுக்காக நீ இன்னொரு கல்யாணம் பண்ணலாம் ராகவா? ஆனா எதை நம்பி உனக்கு பெண் கேட்கறது? உனக்கு என்ன வருமானம் இருக்கு? இதில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளின் பொறுப்பும் சுமையாய் இருக்கையில்.”

என்னவோ அவன் தனக்கு மறுமணம் செய்துவைங்கள் என்று கெஞ்சுகிறமாதிரி அவர்கள் அவனை சமாதானப்படுத்தினர்.

அவன் எதற்கும் பதில் சொல்லவில்லை. எதுவும் அவனைப் பாதிக்கவில்லை. என்ன படவேண்டுமோ அதை ஏற்கனவே பட்டுவிட்டான். அவனோடு சேர்ந்து குழந்தைகளும் அல்லவா துடித்துப்போனார்கள்.

ஒரு புன்னகையுடன் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டான்.

அவன் எழுதிய தேர்வில் தேர்வாகி வேலை கிடைத்த போது சொந்த பந்தங்கள் புருவம் தூக்கி பார்க்க ஆரம்பித்தது.

அதுவும் படிப்படியாக தனது கல்வித்தகுதியை அதிகப்படுத்திக்கொண்டு உயர் பதவிகளுக்கு அவன் சென்றபோது அவனது விஸ்வரூப வெற்றியை அன்னாந்து பார்த்தது.

அதன் பிறகு சொந்தங்கள் தேடி வர ஆரம்பித்தன. அவனுடைய வயதைக் கூட பொருட்படுத்தாமல் தங்கள் இளவயது மகளைக் கூட இரண்டாம் தாரமாக கொடுக்க சில பெற்றோர் முன்வந்தனர்.

எப்படி கஷ்டப்பட்டபோது அவர்களோடு ஒட்டி உறவாடாமல் இருந்தானோ அதே போல் இப்போது தன்னைத் தேடி வந்த உறவுகளையும் அவன் வெட்டிவிடவில்லை. அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துகொடுத்துவிட்டு தானும் பிள்ளைகளுமாய் தனியே நின்றான்.

ஆனால் எக்காரணம் கொண்டும் நீதிக்குப் புறம்பான உதவிகள் எதையும் செய்ய அவன் மறுத்துவிட்டான்.

நேர்மை காரணமாக ஆங்காங்கு பணியில் பந்தாடப்பட்டபோது பிள்ளைகளின் படிப்பை நினைத்துதான் கவலை கொண்டான்.

ஆதிரை சொந்த ஊரிலேயே கல்லூரியில் சேர்ந்த பிறகு தானே தம்பியைப் பார்த்துக்கொள்வதாக வாக்குக் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றவும் செய்தாள்.

தனது படிப்போடு தம்பியின் படிப்பையும் கவனித்துக்கொண்டாள். இதோ படிப்பை முடித்து ஒரு கம்பெனியில் வேலையிலும் சேர்ந்துவிட்டாள். அந்த கட்டுமானக் கம்பெனி நகரிலேயே பிரபலமானது.

அவர்கள் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டை இத்தனை வருட சம்பாத்தியம் கொண்டு வாங்கியிருந்தார் ராகவன்.

அவளது முதல் வேலையே அந்த வீட்டை புதுப்பித்ததுதான். தாங்கள் பிறந்து வளர்ந்த வீடாதலால் அவளுக்கு முற்றிலும் மாற்ற மனம் வரவில்லை.

ல்லூரி வந்துவிட்டது.

கல்லூரி நிர்வாகத்தினர் வந்து வரவேற்றனர்.

அவர் விழா மேடைக்கு வரவில்லை என்று மறுத்துவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.