(Reading time: 22 - 44 minutes)

ர்மதா பெட்டியில் துணிமணிகளை அடுக்கிக் கொண்டிருந்த போது, கோமதி அவளை தேடி அங்கு வந்தார்.

“என்னம்மா எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டியா?? உங்க அப்பா, அம்மாக்கு எடுத்த புது ட்ரஸ்ல்லாம் எடுத்துக்கிட்ட இல்ல..??”

“எடுத்து வச்சிக்கிட்டேன் அத்தை… ஆனா இதெல்லாம் பார்த்திட்டு அம்மா, அப்பா என்ன நினைப்பாங்களோ..?? அவங்க எடுத்து வந்ததுக்கு பதிலுக்கி செய்றோம்னு நினைச்சுப்பாங்களோன்னு இருக்கு அத்தை..”

“நீ யாரோவா?? அவங்க பொண்ணு தானே, அவங்களுக்கு இதெல்லாம் வாங்கிட்டுப் போக உனக்கு உரிமையில்லையா?? அவங்கக்கிட்ட பேச வேண்டிய முறையில பேசி, இதெல்லாம் அவங்களுக்கு கொடுக்கனும்… நீயே இப்படி யோசிச்சா, அவங்க பின்ன சங்கடமா நினைக்க மாட்டாங்களா?? செல்வா கூட வரான் இல்ல, அவன் உன்னோட அப்பா, அம்மாக்கிட்ட பேசற முறையில பேசி இதெல்லாம் கொடுப்பான்… முதல்ல நீ இந்த தயக்கத்தெல்லாம் விடு..”

“சரிங்க அத்தை..”

“அப்போ செல்வா வந்ததும் உடனே கிளம்புங்க.. அங்க போய் நைட்டு சாப்பிடுங்க, உன்னோட அம்மா, அப்பா சந்தோஷப்படுவாங்க..”

“சரி அத்தை… நீங்க பத்திரமா இருங்க.. விஜி அம்மாவ பத்திரமா பார்த்துகோங்க.. அப்புறம் அத்தை ஒன்னு கேக்கனும், நம்ம வீட்ல கேதார கௌரி நோன்பு எடுப்போமா?? அப்படி இருந்தா, அன்னைக்கு நான் இங்க இருக்கனுமில்ல, அதான் அம்மா கேக்க சொன்னாங்க..”

“அந்த வழக்கம் நம்ம குடும்பத்துல இருக்கும்மா.. உன்னோட மாமா இருந்தவரைக்கும் நான் விரதம் இருந்தேன்… அப்புறம் என்னோட தம்பி இருந்த வரை விஜியும் இருந்தா, இப்போ அதெல்லாம் அப்படியே நின்னுப் போச்சு..”

“அத்தை முன்னாடியே சொல்லியிருந்தா, நான் இந்த வருஷம் நோன்புக்கு விரதம் இருந்திருப்பேனே.. என்ன அத்தை இருக்கட்டுமா??”

“நானும் அதைப்பத்தி யோசிச்சேன்ம்மா.. இந்த வருஷம் போகட்டும், அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்னு நினைச்சேன்… அதுமட்டுமில்ல அடுத்த வருஷத்துக்குள்ள ராஜாக்கும் ஒரு நல்லது நடந்தா, என்னோட ரெண்டு மருமகள்களும் கேதார கௌரி நோன்பு விரதம் இருந்து உன்னை வழிபடுவாங்கன்னு அந்த கேதார அம்மன்கிட்ட வேண்டுதல் வச்சிருக்கேன்… பார்ப்போம் ஏதாவது நடக்குதான்னு..”

“உங்க கவலை எனக்கு புரியுது அத்தை… துஷ்யந்த் மாமா கல்யாணத்தைப் பார்க்க நீங்க தவிக்கிறது புரியுது… நீங்க வேணும்னா பாருங்க.. உங்க வேண்டுதல் படியே , உங்க ரெண்டு மருமகள்களும் அடுத்த வருஷம் விரதம் இருப்போம்..”

“உன்னோட இந்த வார்த்தை பலிக்கனும்மா.. அது போதும் எனக்கு..” என்று கோமதி நெகிழ்ச்சியாய் கூறினார்.

தே நேரம் எங்கேயோ வெளியில் கிளம்ப தாயாரனப்படி கங்கா வாணியின் அருகில் வர, அவர் எங்கே செல்கிறாய் என்ற கேள்வியை பார்வையில் வைத்தப்படி அவளை பார்த்தார்..

“வாணிம்மா.. இந்த வருஷம் கேதார கௌரி நோன்புக்காக எப்போ கோவிலுக்கு வரனும்னு, கோவில்ல விவரம் கேட்டுக்கிட்டு வரேன்..” என்று கங்கா கூற, அதில் அவருக்கு உடன்பாடு இல்லையென்றாலும், அதை வெளிக்காட்டாது சரி என்று தலையசைத்தார்..

எப்போதும் அவளுக்கு முன் கோவிலுக்கு சென்று விவரத்தை கேட்க சொல்லி வாணிம்மாவே அவளை கோவிலுக்கு அனுப்பி வைப்பார், இன்று அவருக்கு என்னானது என்று சிந்தனையோடு கங்கா கோவிலுக்குச் சென்றாள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் தோழமைகளே.. அனைவரும் சிறப்பா, மகிழ்ச்சியா தீபாவளியை கொண்டாடிட்டு வாங்க.. நம்ம மூன்று ஜோடிகளும் எப்படி தீபாவளி கொண்டாடினார்கள் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.. அதற்கு அடுத்த அத்தியாயத்தில் இருந்து கதையை வேகப்படுத்துவோம்..

துஷ்யந்த் ஜாதகத்தை பார்த்து ஜோசியர் என்ன சொன்னார்?? சாரு துஷ்யந்திற்கு என்ன செய்தாள்?? கோமதியம்மா கங்காவை ஏற்றுக் கொள்ளாததன் காரணம் என்ன?? துஷ்யந்தும் கங்காவும் கணவன் மனைவியா? இல்லை இல்லையா?? துஷ்யந்த் எப்போது குன்னூரிலிருந்து வருவான்?? அதன்பின் அவன் கங்காவிடம் எப்படி நடந்துக் கொள்வான்??

அக்கா தங்கை இருவரும் எப்போது இணைவார்கள்?? யமுனா இளங்கோவிடம் காதலை சொல்வாளா?? செல்வா செய்யப் போகும் அந்த பெரிய சொதப்பல் என்ன? அதன் பாதிப்பு யாருக்கு?? இதையெல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கப் போகிறோம், அதன் பிறகு தான் கங்கா, துஷ்யந்தின் ப்ளாஸ்பேக்.. அதுவரை பொறுமையாக இந்த தொடரை படித்து உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள் தோழமைகளே.. நன்றி.

 

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 23

Episode # 25

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.