(Reading time: 32 - 64 minutes)

ன்மேல எனக்கென்ன கோபம்.. குன்னூர்ல கொஞ்சம் வேலையிருந்துச்சு அதான் அவசரமா போக வேண்டியதாப் போச்சு..”

“அப்போ ஏன் என்கிட்ட பேசல.. இந்த முடிவை நான் எப்படி எடுத்துப்பேனோன்னு தானே என்கிட்ட நீங்க பேசல.. “

“அப்படியில்ல… நீ கேட்டும் அதை செய்ய முடியலையேன்னு தான், உன்கிட்ட பேச தயக்கமா இருந்துச்சு.. மத்தப்படி வேற எந்த காரணமும் இல்ல..”

“உங்க கல்யாணம் நடக்கலன்னதும் அதிர்ச்சி தான்… ஆனா அதை தொடர்ந்து நீங்க குன்னூர் கிளம்பி போனதும், என்கிட்ட பேசாம இருக்கறதையும் நினைச்சு, எனக்கு ரொம்ப குற்ற உண்ர்வா இருக்கு… உங்க மேல உரிமை எடுத்துக்கிட்டு உங்களை கஷ்டப்படுத்தறனோன்னு தோனுது..”

“நீ உரிமை எடுத்துக்கனும்ன்னு தான் நான் எதிர்பார்க்கிறேன்..” என்றதும் அவள் மௌனத்தை பதிலாய் கொடுத்தாள்.. அதைப் புரிந்துக் கொண்டவனாக,

“சரி தீபாவளி நல்வாழ்த்துக்கள்… அதை சொல்ல தான் உனக்கு போன் செஞ்சேன்..”

“ம்ம் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.. தீபாவளிக்காவது ஊருக்கு வந்திருக்காலாமில்ல..”

“கொஞ்சம் வேலையிருக்கு கங்கா.. சீக்கிரமாவே ஊருக்கு வந்துடுவேன்..”

“என்மேல கோபம் இல்லல்ல..”

“உன்மேல எனக்கு கோபமே வராது.. அப்புறம் வாணி அக்கா, இளங்கோ, யமுனால்லாம் எப்படி இருக்காங்க..??”

“ம்ம் நல்லா இருக்காங்க.. அதான் வாணிம்மாக்கிட்டயும் இளங்கோக்கிட்டயும் அடிக்கடி பேசறீங்களே.. அப்புறம் என்ன??”

“இல்ல ஒருமுறை தான் ரெண்டுப்பேர்க் கிட்டேயும் பேசினேன்.. உன்கிட்ட பேசாம இருந்தது கஷ்டமா தான் இருந்துச்சு.. சாரி..”

“பரவாயில்ல.. வேலையெல்லாம் சீக்கிரமா முடிச்சிட்டு, சென்னைக்கு வரப் பாருங்க..”

“ம்ம் கண்டிப்பா.. சரி ஊருக்கு வந்ததும் பார்ப்போம்.. அப்போ போனை வைக்கட்டுமா??”

“ம்ம்..”

“ஓகே டேக் கேர், பை..” என்றவன் அழைப்பை துண்டித்தான்.

அவனிடம் இப்படியெல்லாம் பேசியதை நினைத்து அவளுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.. இத்தனை நாட்கள் அவள் மனதில் இருந்த குற்ற உணர்வும், இன்று அவனைப் பற்றிய நினைப்புமே, இப்படியெல்லாம் அவள் பேசினாள்… ஆனால் ஏன் இப்படி பேசினோம் என்று மறுநாளே அதற்காக நொந்துக் கொள்ளவும் போவதை அவளே அறியாள்.

குளித்து முடித்ததும் தன் அன்னைக்கு சிறிது நேரம் உதவி செய்த நர்மதா, பின் புடவைக் கட்டலாம் என்று தன் அறைக்குச் செல்ல, அங்கே செல்வா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.. என்னத்தான் அவன் உறங்கிக் கொண்டிருந்தாலும், இங்கு எப்படி புடவைக் கட்டுவது என்று யோசித்தாள்.. இன்னொரு அறையில் அவள் தம்பி உறங்கிக் கொண்டிருந்தான்.. இதுவே அவள் புகுந்த வீடாக இருந்தால், குளியலறையோடு உள்ள உடை மாற்றும் அறையில் புடவை உடுத்திக் கொள்வாள்… ஆனால் இங்கு அறையில் வந்து தான் மாற்ற வேண்டும், குளித்ததும் செல்வா உறங்கிக் கொண்டிருக்கவே தான், நைட்டியோடு தன் அன்னைக்கு உதவ சென்றுவிட்டாள்… ஆனால் இப்போதும் அவன்  உறங்கிக் கொண்டிருந்தான்.. அவன் உறக்கத்தை கலைக்கவும் விரும்பவில்லை..

ஏனென்றால் அவன் இரவு வெகுநேரம் கழித்து தான் உறங்கவே செய்தான்.. அதுவும் எதனால், மல்லிகா பலகாரம் செய்ய இவன் கூட உதவி செய்ததால், காலையில் மகளிடம் அதை சொல்லி சொல்லி மல்லிகா பூரித்துப் போனார்.. தீபாவளி சீர்வரிசையை கொடுத்துவிட்டு வந்ததில் இருந்தே அவருக்கு அந்த சந்தேகம் இருந்தது… மாப்பிள்ளை இங்கு வந்து தங்க இந்த வீடு வசதியாக இருக்குமா என்று, அதை நர்மதாவிடமும் அடிக்கடி அலைபேசியில் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ள நினைத்தார்…

“அதெல்லாம் இருப்பார்ம்மா..” என்று நர்மதா தன் அன்னைக்கு சமாதானம் சொன்னாலும், அவளுக்கே உள்ளுக்குள் அந்த சந்தேகம் இருந்தது… பத்துக்கு பத்து ரூம் என்று அவளுடைய அறையை கேளி செய்தவனாயிற்றே.. இப்போது அடிப்படை வசதிகள் என்று சொல்லக் கூடிய, ஏ.சி, ப்ரிட்ஜ், வாஷின்மெஷின், எல்.ஈ.டி டிவி எல்லாம் அவளின் தந்தையும் அவ்வப்போது வாங்கி வைத்திருந்தார் தான், இருந்தாலும் அறையோடு கூடிய குளியலறை, பாத்டப், ஹீட்டர், ஷவர் இப்படிப்பட்ட வசதியெல்லாம் இங்கு இல்லை… இதில் எப்படி ரிஷப் வந்து இருப்பானோ..?? என்று சிந்தித்திருக்கிறாள்..

ஆனால் அந்த சிந்தனைக்கெல்லாம் அவசியமில்லை என்பது போல் அழகாக இவர்களோடு அந்த வீட்டில் அவனும் ஒன்றிப் போனான். இந்த இரண்டு நாட்களாக பகல் முழுவதும் அலுவலகத்தில் இருந்தாலும், மாலை சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவான்… அங்கிருந்தவரை தாமதமாக வருபவன், எப்படி இங்கு மட்டும் சீக்கிரமாக வருகிறான் என்ற சந்தேகம் மனதில் தோன்ற, அதை அவனிடம் நேரடியாகவே கேட்டாள்…

“நம்ம வீட்ல லேட்டா வர்றது வழக்கம்… அம்மா, அத்தைக்கு அது பெருசா தெரியாது.. ஆனா இங்க அத்தை, மாமா எனக்காக தூங்காம விழிச்சிருப்பாங்க… அதுமட்டுமில்ல, இது பெஸ்டிவல் டைம் இல்லையா..?? இந்த டைம் வொர்க்கர்ஸ்க்கு நிறைய வேலை கொடுக்க மாட்டோம்… பெஸ்டிவல்க்கான ஷாப்பிங், வீட்ல பலகாரம் செய்யும் வேலையெல்லாம் இருக்கும் இல்ல.. அதனால ஆஃபிஸும் சீக்கிரம் க்ளோஸ் ஆயிடும்..” என்று காரணம் சொன்னான்..

மாப்பிள்ளை என்ற பந்தா காட்டாமல் இயல்பாகவே பழகினான்.. அத்தை, மாமா என்று உரிமையோடு அழைத்தான்.. அனைவரோடும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிடுவான்… மல்லிகா பலகாரம் செய்யும் போது கூட அவனும் உதவினான்… மல்லிகாவோ கூச்சத்தோடு, “எதுக்கு மாப்பிள்ளை இதெல்லாம் நீங்க செஞ்சுக்கிட்டு, நானும் நர்மதாவும் தான் இருக்கோமில்ல..” என்பார்.

“நான் காலேஜ் படிக்கிறப்போ விஜி அத்தைக்கு ஹெல்ப் செய்வேன் அத்தை.. அப்புறம் வேலை, மேல் படிப்புக்கு வெளிநாடு போனதுன்னு அதெல்லாம் விட்டாச்சு… இருந்தாலும் எப்பயாச்சும் அத்தைக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணுவேன்… இப்போ அத்தைக்கு உடம்பு சரியில்லாதப்போ, மது தனியா கிச்சன்ல கஷ்டப்பட்றதைப் பார்க்கும் போது ஹெல்ப் செய்ய தோனும்… ஆனா அண்ணாவும் இல்லாம ஆஃபிஸ்ல நிறைய வேலை.. அதான் முடியறதில்ல”

“நர்மதாக்கு அதெல்லாம் கஷ்டமில்ல மாப்ள.. நீங்க இப்படி செய்றது எனக்கு தான் ஒருமாதிரி இருக்கு..”

“நந்தா இப்படி உங்களுக்கு ஹெல்ப் செஞ்சா வேண்டாம்னு சொல்லுவீங்களா?? அப்போ இப்பவும் அமைதியா இருங்க...” என்று மறுபேச்சு பேசாதப்படி அமைதியாக்கி விடுவான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.