(Reading time: 32 - 64 minutes)

புனித தோமையார் கருணை இல்லம்

சில வெளிநாட்டு கிறிஸ்தவர்கள் மூலமாக இந்தியாவில் பல இடங்களில் இதுபோன்ற இல்லங்களும், சேவை மையங்களும் இயங்கிக் கொண்டிருக்க, அதில் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவர் தான் மதர் ஜெர்மன்.. அவருக்கு வயது 60.. கன்னியாஸ்திரிகளுக்கான அந்த லைட் ப்ரவுன் நிற புடவையில், கழுத்தில் சிலுவை டாலர், வட்ட முகம்,  கண்களில் கண்ணாடி, தலையில் ஒரு கொண்டை போட்டு, மாநிறத்திற்கும் கொஞ்சம் அதிக்கப்படியான் நிறத்தில் 5 அடி உயரம் தான் அவரது தோற்றம். 18 வயதில் கன்னியஸ்திரியாக இந்த சேவையை தொடங்கியவர், இப்போது நான்கு வருடமாக இந்த இல்லத்தை பராமறிக்கும் பொறுப்பில் இருக்கிறார்.

யமுனா காலையே அந்த இல்லத்திற்கு வந்துவிட்டாள்.. குழந்தைகளுக்கான இனிப்பு, பட்டாசு எல்லாம் கையோடு வாங்கி வந்திருந்தாள்.. காலை மற்றும் மதிய உணவும் அவளே ஏற்பாடு செய்வதாக முன்தினமே மதரிடம் சொல்ல, அதற்கான ஏற்பாட்டை வேறொருவர் ஏற்றுக் கொண்டதாக மதர் கூறினார்.

வந்ததிலிருந்து குழந்தைகளோடு அவள் விளையாடிக் கொண்டிருக்க, காலை உணவு வந்துவிட்டதாக மதர் கூறி, அதை உள்ளே எடுத்து வருமாறு மதர் சொன்னதும், யமுனா வாசலுக்கு வந்தால், உணவு கொண்டு வந்த வண்டியோடு, இளங்கோ அவனது பைக்கில் வந்தான். வியப்போடு அவனை இவள் பார்க்க, அவனோ இவளை பார்த்து கையசைத்தான்.

வண்டியிலிருந்து உணவை எடுத்தவன், உடன் வந்தவர்களோடு சேர்ந்து சாப்பிடும் அறைக்கு அதையெல்லாம் கொண்டுப் போக, அவள் ஆச்சர்யத்தை ஒதுக்கிவிட்டு, அவர்களுக்கு உதவினாள்.

இளங்கோவை பார்த்ததும் அங்குள்ள பிள்ளைகள், “ஹை இளங்கோ அங்கிள்’ என்று அவனை சூழ்ந்துக் கொண்டனர்.. மீண்டும் வியப்போடு அதை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் மதர் அங்கு வந்தார்.. “வணக்கம் மதர்” என்றவன், அவரிடம் ஆசி வாங்கிக் கொண்டான்.. பின் மதர் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைக்க,

“யமுனாவை எனக்கு தெரியும் மதர்.. இவங்க ஸ்கூல் புக்ஸ் பப்ளிஷ் செய்யற விஷயமா யமுனாவை பார்த்திருக்கேன்… எனக்கு நல்ல ப்ரண்ட்” என்றான்.

“அப்போ சரி.. நீங்க ரெண்டுப்பேரும் இங்க கொஞ்சம் கவனிச்சுக்கோங்க.. நான் ஒரு ஐ.எஸ்.டி கால் செய்ய வேண்டியிருக்கு, பேசிட்டு வந்துட்றேன்” என்று அவர் அங்கிருந்து சென்றதும்,

“ஆமாம் ஏன் தீபாவளிக்கு ஊருக்குப் போகலையா??” என்று யமுனா அவனை கேட்டாள்.

“அதுவா.. அப்பா இந்த தீபாவளிய என்னோட வருங்கால மருமகக் கூட கொண்டாடுன்னு பர்மிஷன் கொடுத்திட்டாரு..” என்று சிரித்தப்படி சொல்ல,

“எப்பவும் உங்களுக்கு விளையாட்டு தானா இளங்கோ.. நடக்காத விஷயத்தையே ஏன் பேசறீங்க” என்று கோபப்பட்டாள்.

“நீ சொல்ற மாதிரி அது நடக்காதப்போ பார்த்துக்கலாம்.. இப்போ பசங்க சாப்பிடனும் வா போலாம்..” என்று அழைத்துப் போக, இருவரும் பிள்ளைகளுக்கு பரிமாறினர்.

அதன்பின் மாலை வரை இருவரும் அந்த பிள்ளைகளோடு நேரத்தை செலவிட்டனர்.. அவர்களுடன் விளையாடினர்.. அவர்களோடு சேர்ந்து பட்டாசு வெடித்தனர்..

மாலை முடிந்து இரவு கிளம்ப அவர்கள் தயாரானப் போது தான் மதர் அங்கு வந்தார்.

“சாரி.. ஒரு முக்கியமான வேலை, அதான் உங்கக் கூட இருக்க முடியல..” என்று மன்னிப்புக் கேட்டவர், பின் யமுனா இந்த நேரம் தனியாக செல்ல வேண்டாம் என்று இளங்கோவிடம் கூறியவர், அவனையே ட்ராப் செய்ய சொன்னார்.

இருவரும் மதரிடம் விடைப்பெற்று அவன் பைக் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு நடந்து வந்தனர்.. இளங்கோ மௌனமாக நடக்க, யமுனா தான் அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“அப்போ உங்களுக்கு என்ன முன்னாடியே தெரியும் அப்படித்தானே..” அவள் சொன்ன நொடி வியப்பாய் அவளை நோக்கினான்.

“முதல் முறை நீங்க என்ன பார்த்த பார்வைக்கு எனக்கு அர்த்தம் புரியல.. முதல்ல அதை தப்பா தான் நினைச்சேன்.. ஆனா அப்புறம் தான் ஏதோ இருக்குன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்… இவ்வளவு நாள் கழிச்சு இன்னைக்கு தான் அதுக்கு விடை தெரிஞ்சிருக்கு..

என்னத்தான் மதர்க்கு தெரிஞ்சவங்களா நீங்க இருந்தாலும், யாரோ ஒருத்தர் கூட மதர் என்னை அனுப்பிட மாட்டாங்க.. அப்படி அனுப்புறாங்கன்னா, இதுல ஏதோ இருக்கு..” அவள் அதை சொல்லி முடிக்கும் முன், அவன் பைக் இருக்கும் இடத்திற்கு இருவரும் வந்துவிட்டிருந்தனர்.

“என்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்சும் என்னை கல்யாணம் பண்ணிக்க நீங்க முடிவு செஞ்சுட்டீங்களா?? என் மேல வந்த காதல் பரிதாபத்துல வந்ததில்லையே..” அவள் கேட்டதும் அவனுக்கு வந்த கோபத்தில், அவளிடம் எதுவும் கடுமையாக பேசிடக் கூடாது என்று நினைத்தவன்,

“டைம் ஆச்சு போலாமா??” என்றுக் கேட்டவன், அவள் ஏறி உட்கார்ந்ததும் வண்டியை கிளப்பினான்.

இப்படி ஒரு வார்த்தை அவளிடம் இருந்து வரக்கூடாதென்று தான் அவன் இவ்வளவு யோசித்ததே, கங்காவின் தோழனாக அறிமுகம் ஆகாமல், அவளை கண்ட நொடி அவள் மீது வந்த காதல் மூலமாய் அவளை நெருங்கிட நினைத்தான்.. ஆனால் அப்படியும் அவள் இப்படிக் கேட்டது, அவனுக்கு கஷ்டமாக இருந்தது.. கங்கா விஷயம் தான் அவளுக்கு உறுத்தல் என்று அவன் நினைக்க, அவள் சொல்வதைப் பார்த்தால், வேறெதோ காரணம் தான் அவள் இவனை தவிர்க்கிறாளோ?? என்று சந்தேகித்தான்.

அவன் வண்டி ஓட்டும் விதமே அவன் கோபத்தில் இருப்பதை யமுனாவிற்கு சொல்லாமல் சொன்னது..  தன் சகோதரியைப் பற்றி அவனோ, அவன் குடும்பமோ அறிந்தால், அதை அவர்கள் எப்படி புரிந்துக் கொள்வார்களோ என்பது அவனது காதலை அவள் ஏற்காததற்கு ஒரு காரணம்.. கங்கா அவளுக்கே ஒரு புதிராக இருக்க, அவர்களுக்கு கங்காவை பற்றி எப்படி புரியவைப்பாள். இதையெல்லாம் யோசித்து அவள் திருமணம் பற்றி யோசிக்காமல் இருந்தாள்..

இப்போது மதர் ஜெர்மனுக்கு அவனை தெரியும் என்றால், கங்காவிற்கும் அவனை தெரியும் என்று அறிந்துக் கொண்டால், அதாவது கங்காவைப் பற்றி இவனுக்கும் தெரியும், இருந்தும் அந்த பிரச்சனை ஒருப்பக்கம் என்றால், இவளை உறுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் அவனுக்கு தெரியுமா?? அது தெரிந்தும் இவளை மணக்க அவன் தயாரா?? என்று அவனிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.. ஆனால் அதற்கான நேரம் அதுவல்ல, அது தெரியும் வரை, அவனது கோபத்தையும் சமாதானப்படுத்த போவதில்லை.. ஒருவேளை அவனை பிரியும் நிலை வந்தால்?? என்று சிந்தித்தப்படியே அவனுடன் பயணித்தாள்.

இந்த அத்தியாயத்துல கங்கா, துஷ்யந்த் பகுதியில் உங்களுக்கு புரிந்தது என்ன?? அடுத்த அத்தியாயத்துல இன்னும் கொஞ்சம் தெளிவுப்படுத்திகிறேன்உங்கள் கருத்துக்களை ஆவலாக எதிர்பார்க்கிறேன்.. நன்றி.

 

 

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 24

Episode # 26

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.