(Reading time: 40 - 80 minutes)

“ஆகாஷ் தீ னு சொன்ன அது சுடாது..,அவங்க அவங்க செஞ்ச எல்லா தப்புக்கும் ஒரு நாள் எல்லார் முன்னாடியும் பதில் சொல்ல வேண்டிவரும்..,இப்ப என்னோட அப்பாவும் அந்த இடத்துல தான் இருக்குறாரு..,எல்லாம்  தெரிஞ்சும் நீ இப்படி குறுக்கால போகாத..”என்று நடராஜன் கூற அனைவரும் அவர்களை பார்த்தனர்.

அப்ப எல்லா விஷயமும் அவர்கள் இருவருக்கும் தெரியும் என்று...எல்லாரது பார்வையும் தங்களை நோக்கி இருப்பதை உணர்ந்தவன்..

“இதுவரைக்கும் அத்தையோட வாழ்கையில நடந்தது எல்லாம் எனக்கும் தெரியும் அப்பாவுக்கும் தெரியும்..,கவிக்காக என்கிட்ட அப்பா பேசாம இருந்தாரு அப்ப ஒரு நாள் எனக்கு கோபம் வந்து நான் அப்பாக் கிட்ட சண்டை போட்டப்ப அவர் எல்லாத்தையும் சொல்லிட்டாரு அதுக்கு அப்பறம் தான் நான் கவிக்கூட சகஜமா பேச ஆரம்பிச்சேன்.. ” என்று தனக்கு எப்படி தெரிந்தது என்று கூறினான் ஆகாஷ்.

இப்பொழுது அது என்ன விஷயம் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அனைவரிடமும்  இருந்தது.

மகன் பேசியதும்,பேத்தி பேசியதும் அவரை சரியாக தாக்க அவர் வாயை திறக்க ஆரம்பித்தார்.

“கவி நான் ஒரு நாளும் அப்படி நினைச்சது இல்லம்மா..,மாலதி மாதிரி கவியரசியும் என்னோட பொண்ணு தான்.நீ இப்படி சொன்னப் பிறகும் நான் எதுவும் சொல்லாமா இருந்தா நீ சொன்னது உண்மையுனு ஆகிடும்..”என்று கூறியவர் அதை சொல்ல ஆரம்பித்தார்.

மாலதி-மலர்கண்ணன்,மகாதேவன்-கவியரசி இவர்களுக்கு திருமண பேச்சு முடிந்ததிலிருந்து மாலதியின் முகத்தில் எப்பொழுதும் ஒரு சோகம் இருந்துக் கொண்டிருந்தது. இரண்டு கல்யாண வேலைகளும் இருந்ததால் அதை மற்றவர்கள் கவனிக்க தவறினர்.

கல்யாணத்திற்கு  இரண்டு நாட்கள் என்ற நிலையில் கவியரசி தனது தங்கையின் முகத்தில் இருந்த சோகத்தை உணர்ந்துக் கொண்டாள்.தன்னை போல் தன் தங்கைக்கும் கல்யாண கனவுகள் இருக்க தானே செய்யும்..,ஆனால் என் அவள் சந்தோசமாக இல்லை என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

இதைப்பற்றி தன் தங்கையிடம்  பேசவேண்டும் என்று நினைத்தால் கவியரசி.

அன்று இரவு கவியராசி மாலதியின் அறைக்கு செல்ல அங்கே லட்சுமி தேவி மாலதியை கட்டிப்பிடித்து அழுதுக்கொண்டிருந்தார்.

என்ன என்று தெரியாமல் உள்ளே செல்லாமல் வெளியில் நின்றிருந்த அவளது காதுகளில் அவர்களது பேச்சு விழுந்து அவளை உள்ளே செல்லாமல் நிற்க வைத்தது.

“எதுக்கு டி இதை முன்னாடியே என்கிட்ட சொல்லல..,இப்படி பாதிலேயே நீ போறதுக்க நான்  உன்னை பெத்தேன்..”என்று லட்சுமிதேவி அழ அதை கவியரசியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவளை பெறவில்லை  என்றாலும் அவளை ஒரு தாயின் பாசம் கொண்டு வளர்த்தவர் இல்லையா..,எந்த குழந்தைக்காவது தன் தாய் அழுவதை தாங்கிக் கொள்ள முடியுமா..அந்த நிலைமையில் தான் கவியரசி இருந்தாள்.

அடுத்து அவள் தங்கை மாலதி சொன்ன விஷயம் அவளை நிலைகுலைய செய்தது.

“அம்மா நான் என்ன பண்ணட்டும்..,நளினி அண்ணி கல்யாணத்தப்பவே எனக்கு மகாதேவன் மாமாவ பிடிச்சி போச்சும்மா..,எப்படியும் என்னோட ஆசை நிறைவேறிடும் என்னும் தையிரியத்துல அவர் மேல நான் வெச்ச காதல் இன்னைக்கு மரமா என்னோட மனசுல வளர்ந்து நிக்குதும்மா.,அதனால தான்மா நான் தற்கொலைக்கு முடிவு பண்ணனேன்..”என்று கூற  லட்சுமிதேவி இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தார்.

“ஏண்டி..,இதை முன்னாடியே சொல்ல வேண்டி தானா..,அப்பாக்கிட்ட நான் பேசி இருப்பேன் இல்ல..,யார்யார் பெத்த பொண்ணுக்கோ நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம்..,நான் பெத்த பொண்ணுக்கு பிடிச்சவன கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேனா...”என்று அவர் சொல்ல

அந்த வரிகள் கவியரசியின் மனதை முழுவதுமாக உலுக்கி இருந்தது.

அவள் இதுவரை லட்சுமிதேவியை தனது சொந்த அம்மாவாக தான் நினைத்து வாழ்ந்து இருக்கிறாள்.

ஆனால் இன்று  தான் தாயாய் நினைத்த அவரது அந்த பேச்சு கவியசியின் மனதை நன்கு பாதித்திருந்தது.

அதே யோசனையுடன் அவள் வந்தது தெரியாதாது போல் அங்கிருந்து சென்றாள் கவியரசி. மனது முழுக்க பாரத்துடன் இருந்தவள் தூக்கம் வராமல் மொட்டைமாடிக்கு சென்றாள்.

அவளது மனது முழுவதும் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. அதனால் தூக்கம் வராது தவித்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அங்கு வந்தார் மலர்கண்ணன்.அவரிடம் தனது காதலை கூறினார்.

அடுத்த அடுத்த அதிர்ச்சியில் அவளுக்கு என்ன பண்ண வேண்டும் என்றே தெரியவில்லை.

அவளுக்கு இப்பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அரசியினது மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு மலர்கண்ணன் பேச ஆரம்பித்தார்..”அரசி நான் உன்னை பாத்திலேருந்து காதலிச்சிட்டு இருக்கேன். அன்னைக்கி  அம்மா பொண்ணு நாரயணன் மாமா பொண்ணுனதும்.., அது நீ தானு நினைச்சேன்..,அது மாலதியா இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை.என்னால உன்னோட இடத்துல மாலதிய நினைச்சி பக்கா முடியல..தயவுசெஞ்சு என்னை ஏத்துக்கோ அரசி..,நீ இல்லமா என்னால வாழமுடியாது..”என்று மலர்கண்ணன் கூற

கவியரசிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.