(Reading time: 40 - 80 minutes)

அவரது அருகில் சென்றவள் “தாத்தா உங்க பையன் மேல எவ்வளவு கோபம் இருந்தாலும் அவருக்கு உடம்பு முடியலனு சொன்ன உடனேயே உங்களுக்கு துடிச்சுதுல அதுமாதிரி தான் எனக்கும்  இருக்கும் என்ன இருந்தாலும் அவர் எனக்கு அப்பா தாத்தா...”என்று அவரை பார்த்துக் கூற

அவரால் அதை மறுக்க முடியவில்லை..,ஒரு வேலை அவளுக்கும் தோன்றி இருக்குமோ என்று நினைக்க தான் முடிந்தது அவரால்...

“நீங்களாவது முயற்சி பண்ணி இருக்கலாமே தாத்தா எங்க அம்மா எங்க இருக்காங்கனு தெரிஞ்சிக்க ,உங்க சொந்தகாரங்க ஒருத்தவங்க மூலமா என்னோட அப்பா அம்மாவ விட்டுட்டு போய்ட்டாங்கனு தெரிஞ்சிகிட்டப்ப..,அவங்களை தேடணும் மட்டும் உங்களுக்கு தோணலை இல்ல...,என்ன அப்படி பாக்குறீங்க..,பாட்டிக்கு எப்படி அப்பா அம்மாவ விட்டுட்டு போனது தெரியும்னு நான் யோசிச்சப்ப எனக்கு கிடைச்ச பதில் இது...”என்று அவரை பார்த்துக் கூறியவள் இன்றைய தனது நிலைக்கு அவரும் ஒரு காரணம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள்.

அடுத்து அவளது பாட்டியிடம் சென்றவள்,”உங்களை நான் எதுவும் சொல்ல மாட்டேன் பாட்டி..,எந்த ஒரு தாயுக்கும் தன்னோட குழந்தை தான் முக்கியம்னு தோணும் அதுதான் உங்களுக்கும் தோணிருக்கு..,நீங்க எதையும் மனசுல வச்சிக்காம ஆரம்பத்திலேருந்து சொல்லிட்டீங்க...,”என்று கூறியவளது குரலில் உண்மை மட்டுமே இருந்தது.அவரை குற்றம் சாட்டும் தொனி இல்லை.

அவளை பொருந்தவரை பர்வதம்மாளுக்கு உண்மைகள் ஒருவேளை தெரிந்திருந்தால் தன் அன்னையை அவர் ஏற்றுக் கொண்டிருப்பார் என்று நினைத்தாள்.

அடுத்து நளினியிடம் சென்றவர் “அன்னைக்கி நீங்க என்ன சொன்னீங்க அத்தை...

அப்படி கூப்பிடலாம் தானே எங்க அம்மா ஓடி போனவங்க தான் உங்க அண்ணனோட வாழ்கைய கெடுத்துட்டு இல்லை..,உங்க வாழ்கையையும்..,உங்க அண்ணனோட வாழ்கையையும் சேர்த்துக் காப்பாற்ற தான் அவங்க அன்னைக்கி அப்படி செஞ்சாங்க..”என்று கூறியவளால் தனது அழுகையை  கட்டுப்படுத்த முடியவில்லை அவளது அறியாத வயதில் கேட்ட வார்த்தைகள் அல்லவா அவைகள்..இன்றும் இரணமாய் அவளின் மனதில் ஆறாமல் இருக்கிறது.

அவளது ஒவ்வொரு வார்த்தைகளும் நளினிக்கு புரிய வைத்தது அவளை தனது வார்த்தைகள் எந்த அளவு காயப்படுத்தி உள்ளது என்று...

அடுத்து விஷ்வாவிடம் சென்றவள்,”உன்னோட தாத்தா மானத்தை எங்க அம்மா கப்பல ஏத்திடாங்க தான் ஆனா அன்னைக்கி எங்க அம்மா அப்படி செய்யலைனா  கண்டிப்பா இன்னைக்கி எல்லாரும் மனகஷ்டத்தோட வாழ்ந்திருப்பாங்க..,

எங்க அம்மா பண்ணது ரொம்ப தப்பு தான்..,நீ அன்னைக்கி சொன்ன மாதிரி நான் பிடிவாதக்காரி தான்..,என்ககு ஒரு தோழனா இருந்தும் உன்னால என்னை புரிஞ்சிக்க முடியல இல்லை...” தன்னை அவன் புரிந்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தை அவனிடம் கொட்டினாள்.

தனது நண்பர்கள் கூட்டதை பார்த்தவளது பார்வையில்  தன்னை நீங்களும் புரிந்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது.

அவள் அவர்களை பார்த்துவிட்டு திரும்புகையில் அவளது கண்ணில் அவர்களது அறையில் இருந்து வெளியில் வந்திருந்த கவிஸ்ரீ  மற்றும் மலர்கண்ணன் தென்பட்டனர்.

தனது மகளின் பேச்சை இதுவரை கேட்டவருக்கு புரிந்தது தனது மகள் எவ்வளவு மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளால் என்பதை ,அவரது  வேதனையை மறக்க சஞ்சீவும்,கவிஸ்ரீயும் இருந்தனர் ஆனால் அவரது மகளுக்கு....

அடுத்த இலக்காக அஸ்வினை வைத்திருந்தவள் இப்பொழுது தனது தந்தையை நோக்கி சென்றாள்.

“உங்களை  இதுவரைக்கும் நான் அப்பானு கூப்பிட்டது இல்ல உங்ககிட்ட ஒரே ஒரு உதவி மட்டும் கேக்குறேன் அதை மட்டும் எனக்கு பண்ணுங்க போதும்..” என்று அவள்  கூற

என்ன என்பது போல் பார்த்தார் மலர்கண்ணன்.

அவரது கண்களை பார்த்த அவளுக்கு புரிந்தது அவரது கண்களில் ஒரு  வலி இருப்பதை..

“எங்க அம்மாவை எதுக்கு பிரிஞ்சீங்க..,அதை மட்டும் சொல்லிடுங்க எல்லாருக்கும்..”  என்று அவள் கூற தனது மகள் தன்னிடம் கேட்டதை மறக்க முடியாதவராய் பேச ஆரம்பித்தார் மல்ர்கண்ணன்.

ன்னைக்கி ஊரைவிட்டு போன நாங்க  என்னோட நண்பனோட உதவியால கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு சின்ன வீட்டுல எங்க வாழ்கையை ஆரம்பிச்சோம்.

அரசி என்கிட்ட முதல் முதலா வெச்ச வேண்டுகோள்..,எங்க வாழ்கையை தொடங்க கொஞ்சநாள் டைம் கேட்டா...

அவ வீட்ட விட்டு பிரிஞ்சு வந்ததால தான் அப்படி சொல்லுறானு நானும் அவளுக்காக காத்திருந்தேன்.

எங்களுக்கு கல்யாணமாகி ஏழு மாதம் கழிச்சு தான் நாங்க எங்க வாழ்கையை தொடங்கினோம்.அந்த இடைப்பட்ட காலத்துல அதுநாள் வரை நான் மறைச்சி வச்சிருந்த என்னோட காதலை எல்லாம் அவ மேல மொத்தம்மா  கொட்டினேன்.

அவளும் என்னோட நல்லா தான் வாழ்ந்தா.., எங்களோட வாழ்கை  நல்லாதான் போச்சு

ஒரு நாள் பக்கதுல இருக்குற டவுனுக்கு டாக்டர பார்க்க கவியரசி போறதா சொன்னா...

என்னனு தெரியாம அவ சொன்னதும் அவளை பார்க்க நான் ஹாஸ்பிட்டலுக்கு  தேடிப்போனேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.