(Reading time: 40 - 80 minutes)

அப்ப மாலதியோட அரசி பேசிக்கிட்டு இருக்குறத பார்த்து அவங்களை நோக்கி நான் போனேன்..,ஆனா அவங்க பேசினத கேட்டு நான் அப்படியே என்னோட வாழ்கையை வெறுத்துட்டேன்.

மாலதி தன்னோட  காதலுக்காக கவியரசி எல்லாருக்கும் கெட்டவளா மாறி என்னை கல்யாணம் பண்ணிகிட்டதப் பத்தி சொல்லியும் அவங்க அம்மா இறந்ததை பத்தி சொல்லியும் அழுதுக்கிட்டு இருந்தா..

அதை கேட்ட நான் மனசளவுல செத்துட்டேன்,என்னோட அரசி என்னை காதலிக்கலை அப்படிங்குற எண்ணம் மட்டுமே என்னை அவளை விட்டு தூர போகவச்சிது.

அதுவும் இல்லமா அவ கல்யாணம் ஆன புதுசுல ஒதுங்கி நின்னது மகாதேவன் மேல இருந்த காதலால தானு எனக்கு  தோணுச்சி, நான் போனப் பின்னாடி அவ என்ன பண்ணுவா அப்படினு என்னை யோசிக்க வைக்காம என்னோட உணர்ச்சிகள் என்னோட மூளையை மழுங்க வச்சிடுச்சி.

அங்கே இருந்த வாட்ச்மேன்கிட்ட  என்னோட மனசுல இருந்தத எல்லாம் ஒரு காகிதத்துல எழுதி அரசி கிளம்புறப்ப கொடுக்க சொல்லிட்டு நான் போய்டேன். அந்த லெட்டர்ல என் மேல காதல் இல்லாத உன்கூட வாழமுடியாது,என்னை நீ ஏமாத்திட்ட அப்படின்னு எனக்கு தோணுன எல்லாத்தையும் எழுதி அவர்கிட்ட கொடுத்துட்டு வந்துட்டேன்.

எங்கஎங்கோயோ  போய் கடைசியா தான் சஞ்சீவ்,கவிஸ்ரீயோட அப்பா சந்திரசேகர சந்திச்சேன்.அவருக்கு நானும் எனக்கு அவரும் நண்பர்களா மாறிபோனோம்.

அதனால அவங்களோடவே என்னையும்  மலேசியாவுக்கு  கூப்பிட்டாங்க,அப்ப தான் நான் கவியரசியை பத்தி யோசிச்சேன்.

நாங்க இருந்த ஊருக்கு போய் நான் விசாரிச்சப்பா அவ வேற ஊருக்கு மாறி போனதா சொன்னாங்க அந்த ஊருக்கு போய் நான் விசாரிச்சப்ப கவியரசி இறந்து போனது எனக்கு தெரிஞ்சது. வாழ்கையே எனக்கு வெறுத்து போச்சு என்னோட அரசி செத்து போய்ட்டா  அதுவும் என்னால  செத்து போய்ட்டா அப்படிங்குற எண்ணமே என்ன கொஞ்சம் கொஞ்சமா கொன்னுச்சு அதுல இருந்து என்னை சந்திரசேகர் தான் மீட்டான்.

அவனோட நான் மலேசியா போனேன்.கொஞ்சநாள் எல்லாம் நல்லாதான் போச்சு.என்னோட அனைத்து கவலைக்கும் வடிகால சஞ்சீவ் இருந்தான்.

அப்பதான் சஞ்சீவ் அம்மாவுக்கு கவிஸ்ரீ பொறந்தா,அந்த பிரசவத்துல அவங்க இறந்து போக என்னோட அரசி இறந்தப்ப என்னை தேத்துன சந்திரசேகர்,அவனோட மனைவியோட இழப்ப தாங்க முடியாம என்னை அவனோட குழந்தைகளுக்கும்,சொத்துகளுக்கும் கார்டியனா போட்டுட்டு தற்கொலை செஞ்சுகிட்டான்.

அதுக்கு அப்பறம் என்னோட வாழ்கையை  அவனோட குழந்தைகளுக்காக வாழ்ந்தேன்.

சஞ்சீவுக்கு அவ்வளவு விவரம் தெரியலனாலும் அவனோட அப்பா நான் இல்லைனு அவனுக்கும் தெரியும்.

கவிஸ்ரீக்காக அவன் என்னை அப்பாவா ஏத்துக்கிட்டான்.ஸ்ரீக்கு அம்மாவா அரசியோட போட்டோவ தான் காண்பிச்சு வளர்த்தேன்,தன்னோட தங்கைக்காக சஞ்சீவ் அதையும் ஏத்துக்கிட்டான்.

அரசி இல்லமா உங்களை பாக்க வர எனக்கு பிடிக்கலை.எல்லாரோட நியாபகம் வந்தாலும் நான் அதனால தான் யாரையும் தேடி வரலை..”என்று கூறியவர் தொடர்ந்து பேசியதால் மூச்சிறைக்க அதை பார்த்த அஸ்வின் அவரை அமைதி படுத்தினான்.

ன்னை சமாளித்துக் கொண்டவர் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

“ எல்லாரோட நியாபகம் என்னை அடிக்கடி துரத்தும்,ஸ்ரீ படிப்பும் முடிஞ்சு போக நான் இந்தியாக்கு வந்தேன்.அரசியோட இறந்தநாள் அன்னைக்கி நீ அப்படி நடந்துகிட்ட அப்ப தான் எனக்கு தெரிஞ்சது என்னோட பொண்ணு நீனு, நான் விசாரிச்சப்ப உன்ன பத்தி சொல்லி இருந்தா உன்னை இவ்வளவு கஷ்டப்பட விட்டிருக்கமாட்டேன்டா...”

அவர் பேசிக்கிட்டு இருந்தபொழுது இடையில் புகுந்த அஸ்வின் “மாமா என்ன மாமா இப்படி ஸ்ரீ முன்னாடி எல்லாத்தையும் சொல்ல்லிட்டீங்க...”என்று அவன் கேட்க

“ஸ்ரீக்கு ஏற்கனவே தெரியும் அரசியோட நினைவுநாள் அப்ப கவி நடந்துகிட்டது வச்சு அவளுக்குள்ள நிறைய  கேள்வி எழுந்துடுச்சு..,அதனால அவகிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டேன்..”என்று கூற அங்கு இருந்தவர்கள் அனைவரது மனதிலும் ஒரு நிம்மதி.

அனைவரும் அப்பொழுது ஸ்ரீயை நினைத்து தான் பயந்துக் கொண்டிருந்தனர்.

தன்னவன் அனைவரது மேல் காட்டும் அக்கறையை பார்த்த கவியின் மனதில்  ஏக்கம் வர தான் செய்தது.

“அம்மா உங்களை விரும்பல அப்படினு சொன்னீங்கல,நான் ஒத்துக்குறேன் அம்மா வீட்ட விட்டு உங்க கூட வந்தப்ப அவங்க மனசுல உங்க மேல காதல் இல்லை. மகாதேவன் சித்தப்பா மேலையும் அம்மாக்கு  காதல் இல்லை..,அம்மா,அப்பா பார்த்த மாப்பிளை இனி தன்னோட அனைத்துமா அவர்  மட்டும் தான் அப்படிங்குற எண்ணம் அவங்களுக்கு இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.