(Reading time: 40 - 80 minutes)

“உனக்கு தெரியுமா மலர் நான் உன்னை அப்படி தப்பா நினைச்சேனு..,நீ சொன்னதா நர்ஸ் சொன்ன உடனேயே நான் டாக்டர தான் போய் பார்த்தேன்…,அவங்க சொன்னப்ப நான் எவ்வளவு சந்தோஷப் பட்டேன் தெரியுமா...,நீயா வந்து சொல்லுவேனு நினைச்சேன்..,இன்னைக்கி கூட நான் உன்னை வீட்ட விட்டு வெளிய போக சொன்னது இந்த நேரத்துல நீ இங்க இருந்தா எல்லாரும் எதாவது சொல்லுவாங்க,அது உன் மனசப் பாதிச்சிடும்னு தான்...,அதுவும் அர்னவ் வரானு தெரிஞ்சப் பிறகு தான்..” என்று அஸ்வின் கூற

“சாரி அஷு மாமா..”என்று அவனை கட்டிக்கொண்டு அழுதாள் கவி.

“லூசு அழாத..”என்று அவன் சமாதானப் படுத்த கவியோ

“ஐ  லவ் யூ மாமா...”என்றுக் கவி கூற

“ஐ லவ்  யூ டு மலர்..”என்று அஸ்வின் கூற இருவரும் அந்த நொடிகளை ரசித்துக் கொண்டிருந்தனர்...

(வாங்க அதுக்குள்ள நாம கீழ போய் என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வந்துடலாம்...)

ன்னடா மேல போனவங்கள இன்னும் காணும்..,எதுவும் பிரச்சனை ஆகியிருக்குமோ..”என்று சுதாகர் சொல்ல

அவன்  சொன்னதைக் கேட்ட அமர் சிரிக்க,”எதுக்குடா இப்ப இப்படி சிரிக்குற.”என்று அமரைப் பார்த்துக் கேட்டான் அர்னவ்.

“பின்ன என்னடா.,அஸ்வின் தான் சரண்டர் ஆனதுக்கு சாட்சியா எப்பவே ஜூஸ் எடுத்துகிட்டு போய்டாரே..,இப்ப அங்க ரொமான்ஸ் நடந்துக் கிட்டு இருக்கும்..இதுக்கூட தெரியாம பச்சபுள்ள மாதிரி இவன் கேள்வி கேட்டா சிரிப்பு வராம என்ன செய்யும்..” என்று அமர் கூற

அர்னவ் சுதாகருக்கு மட்டும் அல்ல அங்கு இருந்த இளம்படை அனைவருக்கும் அவனை அடிக்க தோன்றியது..

இங்கு ஆனந்தியோ..,”என்னோட மருமக எவ்வளவு கஷ்டப் பட்டுருக்கா..,இனி நான் அவளை அம்மாவா இருந்து பார்த்துப்பேன்...”என்று மஞ்சுவிடம் கூற

“அவ மனசுக்குள்ள இவ்வளவு ஏக்கம்,கஷ்டம் இருக்கும்னு எனக்கு தெரியாம போயிடுச்சு அண்ணி..”என்று கூறினார் மஞ்சு.

“அம்மா என்னோட் பொண்ணு நிறைய கஷ்டப் பட்டுடா இனி அவ சந்தோசமா இருக்கனும்மா..” என்று தனது  தாய் மடியில் சாய்ந்து மலர்கண்ணன் கண்ணீர் வடிக்க அதைப் பார்த்த பொழுது பர்வதம்மாளுக்கு கண்ணீர் தான் வந்தது..

இனிமேலும் தங்களது குடுமபத்தை சோதிக்க வேண்டாம் என்று தனது குலதெய்வதை வேண்டிக் கொண்டார் அவர்.

கவியை எப்படியும் அஸ்வின் சமாதானம் படுத்தியிருப்பான் என்று எல்லாரும் ஒருவராக தங்களை தேற்றிக் கொண்டு, பெண்கள் அனைவரும் இந்த சந்தோசத்தை கொண்டாட

இனிப்புடன் சமைக்க சென்றனர்.

வனது அணைப்பில் இருந்த கவி அப்படியே தூங்கி விட அவளை படுக்கையில் கிடத்தியவன் கீழே இறங்கி வந்தான்.

வந்தவனை எல்லாரும் ஆவலுடன் பார்க்க,”மலர் இங்கதான்  இருக்கப்போறா, ஆனால் அவ மனசுல இருக்குற காயம் ஆறுற வரைக்கும்..,நாம கொஞ்சம் பொறுமையா தான் இருக்கணும்,அவளுக்கு எல்லார்மேலையும் அளவுக்கடந்த அன்பு இருக்கு..,அதே மாதிரி உங்க கிட்டையும் அவ அந்த அன்ப எதிர் பார்க்குற..,நாம அவகிட்ட அன்பு காட்டினா போதும் அவ சரி ஆகிடுவா...”என்று அஸ்வின் கூற

aeom

“என்னை ஏத்துப்பாளா அஸ்வின்...,அவ வாயிலிருந்து அப்பானு என்னை அழைக்க வருமா...”என்று மலர்கண்ணன் கேட்க

சிறிதுநேரத்திற்கு முன்பு தன்னிடம் கவி  பேசியபொழுது மலர்கண்ணனை அவள் அப்பா என்று அழைத்தது அவனுக்கு நினைவில வர

“கண்டிப்பா கூப்பிடுவா..”என்று அஸ்வின் கூற

அவரது முகத்தில் ஆனந்தம் குடிக்கொண்டது....

அனைவரும் தங்கள் பெண்ணை இனி பாசத்தில் குளிப்பாட்டி நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று   நினைத்துக்கொண்டனர்....

அனைத்து ஜோடிகளுக்கும் அடுத்து வந்த முகூர்த்தத்திலே திருமணம் நடந்தேறியது.

அஸ்வினது நண்பன் ருத்ரா அந்த திருமணத்திற்கு  வந்த பொழுது கவிஸ்ரீயை பார்த்து அவனுக்கு பிடித்துவிட அடுத்த முகூர்த்தத்திலே அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தேறியது.

கவியை தங்களது பாசத்தால் அனைவரும் திணறடுத்திக் கொண்டிருந்தனர்.அவள் அங்கு அன்பு மழையில் இனிமையாக நனைந்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் மலர்கண்ணனை மட்டும் இன்னும் அவள் அப்பா என்று அழைக்காமல் தான் இருந்தாள்.

ந்து மாதங்களுக்கு பிறகு.....

அஸ்வின்-கவியினது வீடு விழகோலம் பூண்டிருந்தது...

பர்வதம்மாள் அதை எடுத்து வை,இதை எடுத்து வை என்று அனைவரையும் வேலை வாங்கிக் கொண்டே வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.