(Reading time: 40 - 80 minutes)

ஆனா உங்க கூட வாழந்த அந்த கொஞ்சநாளுல அம்மாக்கு உங்க மேல அளவு கடந்த காதல் வந்துச்சு அம்மாவோட டைரிய நீங்க படிச்சிங்கனா உங்களுக்கு அது  தெரியும்.

அத நான் படிச்சப்ப எங்க அம்மா என்னோட அப்பாவ எந்த அளவு காதலிச்சு இருக்காங்க அப்போ என்னோட அப்பா எந்த அளவு நல்லவர் அப்படினு நான் நினைச்சேன்.

ஏற்கனவே சின்ன வயசுல அம்மா உங்களை பத்தி என்கிட்ட பெருமையா சொன்னது எல்லாம் சேர்ந்து என்னோட அப்பா ரொம்ப நல்லவர் அவர் என்னை தேடி கண்டிப்பா அம்மா சொன்ன மாதிரி வருவார் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன்.                                  

aeom

அம்மாவோட கடைசி டைரிய நான் படிச்சப்ப தான் நீங்க அம்மாவ அவங்க உங்களை காதலிக்கலனு நினைச்சி பிரிஞ்ச செய்தி,நீங்க எழுதுன லெட்டர்,இதுவரைக்கும் நாராயணன் தாத்தா சொன்னது எல்லாம் எனக்கு தெரிஞ்சது.

அதுவரைக்கும் நான் உறவா நினைச்ச  எல்லாரும் எனக்கு எதிரியா தெரிஞ்சாங்க..,தான்  கர்ப்பமா இருக்குறத சொல்ல காத்திருந்தப்ப தன்னோட காதலையே தன்னோட கணவன் புரிஞ்சுக்கல அப்படிங்குற கஷ்டத்துல  அம்மா டைரில இருந்த ஒவ்வொரு வார்த்தையும் என் மனசுல இருந்த என்னோட அப்பாவோட பிம்பத்த அப்படியே சுக்குநூறா உடைச்சிடுச்சு.

எந்த அம்மா என்னோட அப்பாவ பத்தி நல்ல விதமா சொல்லிகொடுதாங்காளோ எந்த அம்மாவோட டைரிய பார்த்து எங்க அப்பா ரொம்ப உயர்ந்தவரா நினைச்சனோ அதே அம்மாவோட டைரியில இருந்த வரிகள் என்னோட அப்பாவ பத்தின என்னோட எண்ணத்தை அப்படியே மாத்திடுச்சு...

அம்மாவோட அந்த டைரிய நான் படிக்குறதுக்கு முன்னாடி நீங்க வந்திருந்தீங்கனா இந்த கவிமலர் தன்னோட அப்பாவ தன்னோட பாசத்தால மூழ்கடிச்சிருப்பா..

ஆனா நான் உங்களை பார்த்தப்ப உங்க மேல எனக்கு வெறுப்பும் மட்டுமே இருந்தது.

உங்க மேல மட்டும் இல்லை எல்லார் மேலையும் எனக்கு வெறுப்பு.

எனக்குனு இந்த உலகத்துல யாரும் இல்லை,ஏன் என் புருஷனுக்கு கூட நீங்க முக்கியமா இருந்தீங்க நான் இல்லை..,அதான் இங்க இருந்தா நான்  எல்லாரையும் கஷ்டப்படுத்திடுவேன் தான் எல்லாரையும் விட்டு விலகி போனேன்.

எங்க அம்மா இந்த குடும்பம் நல்லா இருக்கனும் நினைச்சாங்க அப்படி இருக்குறப்ப நான் மட்டும் உங்க சந்தோசத்துக்கு இடைஞ்சலா இருப்பேனா..,அதான் போனேன்..”என்று சொல்லி முடித்தாள் கவி.

அவளது கையை பிடித்த மலர்கண்ணன் “நீ எதுவும் சொல்ல வேணாம்டா என் அரசி என் மேல வச்சிருந்த காதலை நீ என்னோட பொண்ணுன்னு தெரிஞ்ச பின்னாடி உன்னோட பெயர வச்சியே நான் தெரிஞ்சுகிட்டேன்,என்னைக்கோ நான் அவகிட்ட சொன்னத நியாபகம் வச்சிக்கிட்டு என்னோட பெயரையும்,அவளோட பெயரையும் சேர்த்து வச்சிருக்கானா,அதுவும் அவளை நான் நட்டாத்துல விட்டுட்டு போனப் பிறகும்..என்னோட அரசியோட காதல் எனக்கு புரிதுடா...”என்று கூறிக் கொண்டு அவர் அழ

அழுதுக் கொண்டிருந்த கவிக்கும் இன்னும் அழுகை அதிகம் தான் ஆனது.அதைப் பார்த்த அனைவரது கண்களிலும் கண்ணீர் தான்..

தங்களது ரத்தப்பந்தம் அனுபவித்த வேதனைகளை கேட்டு...

சிறிது நேரத்தில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட கவி அவரது கைகளில் இருந்து தனது கைகளை உருவிக்கொண்டாள்

“இவ்வளவு நேரம் என்னோட அம்மாக்காக பேசினேன்.இப்ப நான் எனக்காக பேச போறேன்....” எனக் கூறிகொண்டு சஞ்சீவைப் பார்த்து “நான் கிட்னி கொடுக்கலைன்னு  சொன்னப்ப எல்லாரும் அவங்க அவங்க பங்குக்கு திட்டுனப்ப நீங்களும் உங்க பங்குக்கு வந்து பேசினப்ப என்ன சொன்னீங்க அண்ணா,நீங்க அநாதைனு என்கிட்ட வந்து சொன்னீங்கள,உண்மையா

அநாதை யாரு தெரியுமா நான் தான்..,ஏன் தெரியுமா எல்லா சொந்தமும் இருந்தும் நான் அப்படிதான் இருந்தேன்..,இல்லமா இருக்குறத விட இருந்து இல்லமா இருக்குறது தான் ரொம்ப கொடுமை அது தான் எனக்கு நடந்திருக்கு...,

உங்களுக்கு இல்லைனாலும் கிடைச்சிருக்கு..,எனக்கு இருந்தும் கிடைக்கல..,இப்ப சொல்லுங்க நீங்க அநாதையா நான் அநாதையா...”என்று கேட்டவளது கேள்வியில் அவளது மனம் எந்த அளவு பாதித்து உள்ளது என்று அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.

கவிமலர் அழுவதை தாங்க முடியாதவனாக அவளது அருகில் சென்று தனது தோளில் சாய்த்துக் கொண்டிருந்தான் அமர்.

அவள் அநாதை என்ற சொல் அங்கு இருந்த அனைவரையும் அசைக்க தான் செய்தது.

தன்னை மீறி வந்த அழுகையை அடக்க தன்னை நிதானப் படுத்திக் கொண்டிருந்தால் கவிமலர்.அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின்.

அவனை பார்க்க பார்க்க அர்னவிற்கு கோபம் வந்துக் கொண்டிருந்தது.என்ன மனுஷன் இவன் தன்னோட மனைவி இப்படி அழுதுக் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணமே இல்லமால்,சலனமே படாமல் அப்படியே நின்றுக் கொண்டிருந்தவனை பார்க்கும் பொழுது அவனை அப்படியே அடிக்கும் வெறி அர்னவிற்கு வந்தது ஆனால் செய்ய முடியாத நிலையில் அவன் இருந்தான்.(உங்க எல்லாரோட எண்ணமும் இதுதான...)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.