(Reading time: 40 - 80 minutes)

கவி-அஸ்வினது திருமணம் திடீர் கல்யாணம் என்று சிம்பிளாக நடந்து விட,கவியினது வளைக்காப்பு வெகுவிமர்சையாக நடக்க வேண்டும் என்று பர்வதம்மாள் நினைத்தார்.

வேண்டாம் என்று கவி-அஸ்வின் மறுத்தாலும் கடைசியில்  அவரது பிடிவாதமே வென்றது.

தனது  மகனின் மகள் கவி என்று தனது சொந்தங்கள் அனைவருக்கும்  தெரிய வேண்டும் என்று அவர் நினைத்தார்.அவளை யாரும் இனி வேறுவீட்டு பெண் என்றோ,உங்க அப்பா,அம்மா யாரு என்றோ கேட்கக் கூடாது என்று நினைத்தவர்..,தனது சொந்தங்களுக்கு அவள் யார் என்று உணர்த்தவும் திரும்பி வந்த தனது மகனை காட்டவும் பெரிய விழாவாக ஏற்பாடு செய்தார்.

கட்டிலில் இன்னும் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்தான் அஸ்வின்.நேற்று நித்தி போட்டு விட்ட மருதாணி கோலம் அவளது கைகளை சிவக்க வைத்திருக்க,தாய்மையின் பூரிப்போடு அவள் அழகாக உறங்கிக் கொண்டிருந்தாள்.அவளை பார்க்க வளர்ந்த குழந்தை போல் அவனுக்கு தெரிந்தது.

அவளது அருகில் சென்றவன் அவளது கலைந்த முடியை ஒதுக்கிவிட்டான்.

ஒதுக்கிவிட்டவனது கைவிரல்கள் அவளது கன்னத்தின் மென்மையை உணர்ந்து வருடிக் கொண்டிருந்தது.

அவனது அந்த தீண்டலில் சிணுங்கினாள் கவி. அவளது சிணுங்களைப் பார்த்தவன் அவளை சீண்ட நினைத்தான்.

தனது உதடுகளை குவித்து தனது வெப்ப  மூச்சுக் காற்றினை அவளது முகம் முழுவதும் பரவவிட்டான்.

அந்த வெப்ப மூச்சுக்காற்று அவளை இம்சிக்க தனது தூக்கம் கலைந்து முழித்துப் பார்த்தாள் கவி.

கண்விழித்தவளது கண்களில் காதலுடன் அவளை கொள்ளை அடித்துக் கொண்டிருந்த அஸ்வின் தெரிந்தான்.

“அஷு மாமா இன்னும் கொஞ்ச நேரம்..”என்று கூறிக் கொண்டே அவனை ஒண்டிப்படுக்க அவளை பார்த்து  சிரித்தவன்,”மலர்ம்மா எழுந்திரு..,இன்னைக்கி எல்லாருக்கும் நீ தான் கதாநாயகி.,ஒழுங்கா எழுந்து கிளம்பு...’என்று அவன் கூற அவள் எழுந்துக் கொள்ளாமல் இருக்க

எப்படியோ அவளை தாஜாப் பண்ணி எழுப்பி கிளம்ப வைத்தான்.

அவள் குளித்துவிட்டு வந்துவுடன் உணவுடன் வந்த ஆனந்தி அவளுக்கு ஊட்டிவிட்டார்.

நித்தி,காவ்யா,அனன்யா,மித்ரா,ஹேமா என்று அனைவரும் அவளை கிளப்ப வந்தனர்.

அவர்கள் அவளை அலங்கரிக்க அங்கு வந்த கவிஸ்ரீ,”அக்கா அப்பா உங்களுக்காக இதை வாங்கி வந்தாங்க,இதை போட்டுகோங்க...”,என்று அவளை பார்த்து ஒரு எதிர் பார்ப்புடன் ஸ்ரீ தர

அதை வாங்கியவள் பிரித்துப் பார்க்க அதில் நகைகள் இருந்தன.

“மித்து அந்த ஜிமிக்கியை கழட்டிட்டு  இதைப் போடு..”என்று தனது கைகளில் இருந்ததைக் கொடுக்க அனைவரது முகத்திலும் ஆனந்தம்.

வெளியில் இருந்து இதைப் பார்த்த மலர்கண்ணனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.தன் மகள் தன்னை ஏற்றுக் கொண்டுவிட்டால் என்று...

அந்த சந்தோசத்தை அவள் அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ள அனைவருக்கும்  அந்த சந்தோசம் தொற்றிக்கொண்டது.

அடுத்து விழா ஆரம்பிக்க கவியினது கைகளில் தனது அன்பளிப்பாக முத்துவளையலை பூட்டினார் பர்வதம்மாள்.

ஒரு வழியாக விழா முடிய அனைவரும் அவளை ஆசிர்வாதம் பண்ணி திருநீர் விட்டு விட, மல்ர்கண்ணன் அதைப்பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்றார்.                                       

aeom

அவரைப் பார்த்தவள் அவள் அருகில் போனவள் “அ...அப்பா...”என்று கண்ணீருடன் அழைக்க அவள் அழைத்த அடுத்த நொடி அவர் வானத்தில் பறப்பதாய் உணர்ந்தார் மலர்கண்ணன்.

“அவளை அணைத்துக்கொண்டார் மலர்கண்ணன்.

“அப்பா நீங்க என்னை ஆசீர்வாதம் பண்ண மாட்டீங்களா...”என்று அவள் கேட்க

அடுத்த நொடி அவளையும்,தனது மருமகனையும் ஆசீர்வாதம் பண்ணினார் மலர்கண்ணன்.

அவளது நெற்றியில் முத்தம் இட்டவர்,”நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் டா..,என்னை நீ அப்பானு கூப்பிட்டல..”என்று அவர் கூற

“ஆமாம் அப்பா,என்னை நீங்க தீம் பார்க்லாம் கூட்டி போவிங்கள..,என்னை ஊஞ்சலில் உட்காரவச்சு ஆட்டி விடுவீங்கள..”என்று தனது தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டு அவளது ஆசையெல்லாம் சொல்ல

அவளது ஏக்கம் அனைவருக்கும் புரிந்தது...

“கண்டிப்பா டா..,அப்பா உனக்கு ஐஸ்கிரீம் கூட வாங்கி தரேன்...”என்று அவர் அவளை கொஞ்ச

“அப்ப என்னோட குழந்தையை யாரு பார்த்துப்பா..”என்று அஸ்வின் கேட்க

“நீயே பார்த்துக்கோடா..”என்று கவி சொன்னாள்.

“என்னடி  புருஷன இத்தனை பேர் முன்னாடி வாடா போடானு கூப்பிடுற..”என்று பர்வதம்மாள் கேட்க

“அப்படி கேளுங்க பாட்டி,வர வர இவ ரொம்ப கேட்டு போய்டா,எல்லாரும் கொஞ்சுரதால...”என்று அஸ்வின் கூற

“கவி இங்க தான் உன்னைகூப்பிடக் கூடாதுனு சொன்னேன்..,நிறைய பேர் இருக்காங்கள..,அதான்டி செல்லம்..”என்று பர்வதம்மாள் கூற

‘பாட்டி என்னை இப்படி கவுத்திட்டியே...” என்று அவன் கூற அங்கே இருந்த அனைவரும் சிரிக்க அவர்களுக்கு எந்த துன்பமும் இனி வராது என்று நம்பிக்கையுடன் நாமும் அவர்களிடமிருந்து விடைபெறுவோம்....

Hi friends, இது எல்லாருக்கும் vote of thanks சொல்லுற நேரம்..,முதல்ல chillzee teamku ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..,என் மேல நம்பிக்கை வச்சி எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததுக்கும் support பண்ணதுக்கும்.., ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் chillzee  team....,என்னோட கதைய படிச்சு எனக்கு ஆதரவு தந்த வாசகர்கள் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..,என்னோட ஒவ்வொரு எபிக்கும் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி..எல்லாரையும் என்னால தனித் தனியா குறிப்பிட்டு சொல்ல முடியல....,ஆனா எல்லாரோட கமெண்ட்ஸ்ம் தான் என்னோட ஸ்டோரி இவ்வளவு நல்லா வர காரணமா இருந்திருக்கு,என்னோட ஸ்டோரி தொடங்கி 20 th ஓட ஒரு வருஷம் ஆகிடுச்சு....,பொறுமையா என்னோட ஸ்டோரி படிச்ச எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..

இந்த கதை எனக்கு ரொம்ப நல்ல நண்பர்களை தந்து இருக்கு..,தேங்க்ஸ் ஸ்ரீ அக்கா,ஹரிணி for ur support...,உங்களை எல்லாம் நிம்மதியா இருக்க விடமாட்டேன் சீக்கிரம் என்னோட செகண்ட் ஸ்டோரியோட வரேன்...once again thank u frds for ur support…

முற்றும்!

Episode # 25

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.