(Reading time: 28 - 56 minutes)

ண்ணி.. நீங்க யமுனா கல்யாணத்துக்கு நர்மதாவையும் செல்வாவையும் அனுப்பியிருக்கக் கூடாது அண்ணி..”

“யமுனா நர்மதாவோட தோழி.. அப்புறம் எப்படி கல்யாணத்துக்கு ரெண்டுப்பேரும் போகாம இருப்பாங்க..”

“அண்ணி.. யமுனா நர்மதாவோட தோழியா இருக்கலாம்.. ஆனா இப்போ அவ கங்காவோட தங்கச்சி.. அது தெரிஞ்சும் நீங்க தொடர்ந்து நர்மதாவை யமுனாவோட பழக வைக்காதீங்க.. என்ன இருந்தாலும், அக்காவோட குணம் கொஞ்சமாவது தங்கச்சிக்கிட்ட இருக்குமில்ல..”

“விஜி.. அந்த பொண்ணுக்கு இன்னைக்கு கல்யாணம்.. அதை மனசில வச்சு பேசு.. அவ கங்காவோட தங்கை என்பதால, அவளையும் தப்பானவன்னு சொல்லக் கூடாது.. நாம பேசற ஒன்னொன்னும் அடுத்தவங்க வாழ்க்கையில பாதிப்பை ஏற்படுத்தாம இருக்கனும்.. என்கிட்ட பேசின மாதிரி, நர்மதாக்கிட்ட பேசிடப் போற..

“நான் உங்கக்கிட்ட மட்டும் தான் அண்ணி சொன்னேன்… இருந்தாலும் நீங்க, கங்காவையே கோபமா பேச மாட்டீங்க.. அவளோட தங்கச்சியையா கோபமா பேசப் போறீங்க.. ஆனா அது தான் எனக்கு புரியல.. நம்ம பையன் வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்கி வச்சிருக்க அந்த கங்காவை பார்த்தா உங்களுக்கு ஏன் அண்ணி கோபம் வர மாட்டேங்குது..??”

“தெரியல விஜி.. எனக்கே அது தெரியல.. கங்காவை பத்தி நாம கேள்விப்பட்டது தப்பா இருக்கு.. ஆனா அவளை பார்த்தா அப்படி தெரியல.. இந்த பொண்ணு தப்பனாவளா இருப்பாளா? அப்படின்னு தான் என் மனசு கேக்குது.. இதுவரைக்கும் நம்ம ராஜாக்காக நாம கங்காக்கிட்ட பேசினப்போ, அவ திமிரா ஏதாச்சும் பேசியிருக்காளா? நாம கேட்டு நம்ம ராஜாவை விட்டு விலகத்தானே தயாரா இருந்தா..

நான் நிறைய தடவை யோசிச்சிருக்கேன்.. ஏன் கங்காவை நான் நல்ல விதமா சந்திக்கல.. அவ ஏன் ராஜா வாழ்க்கையில் நல்ல முறையில் வரல.. இப்படி நிறைய கேள்வி மனசுல வரும்.. ஆனாலும் எனக்கு பரந்த மனசும் இல்லை.. அவ எப்படி வேணாலும் இருந்திருக்கட்டும், இனி என்னோட பையனோட மனைவியா வாழட்டும்.. நாமளே அவங்க கல்யாணத்தை நடத்துவோம்னு நான் நினைச்சதில்ல.. ஆனா ஒருவேளை ராஜா அந்த முடிவெடுத்திருந்தாலும், நான் தடுத்து இருக்க மாட்டேன்..

ஆனா அது ஒன்னு தான் எனக்கு புரியல.. நம்ம ராஜாக்கிட்ட கங்கா என்ன எதிர்பார்க்கிறா? அவனோட பணம் அந்தஸ்த்தை எதிர்பார்க்கிறாளா? அப்போ அவனை கல்யாணம் செஞ்சுக்கிட்டா அவளுக்கு எல்லாம் கிடைக்குமே! இல்லை காதல் கல்யாணம் இது தான் அவளுக்கு தேவைன்னா அதுவும் ராஜா அவளை ஏமாத்த போறதில்ல.. ஆனா அவ என்ன எதிர்பார்க்கிறான்னு தெரியலையே? அவன்கிட்ட வெறும் பணத்தை மட்டும் தான் எதிர்பார்க்கிறாளா?/இல்லை அவன் மேல் அன்பு வச்சிருக்காளா? அப்படி அவன் மேல அன்பு இருந்தா.. அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்னு அவளுக்கு தெரியாதா? ஒன்னு அவனோட அவளே அந்த உரிமையை ஏற்படுத்திக்கனும்.. இல்ல அவன் வேற ஒரு பெண்ணோட வாழட்டும்னு விட்டு விலகிடனும்.. ரெண்டும் இல்லாம, இப்படி அவனோட வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்கி வச்சிருக்காளே! என் பையன் இப்படியே கடைசி வரை இருந்திடுவானா? அதான் என்னோட கவலை.. அதனால தான் கங்கா மேல எனக்கு வருத்தம்.. மத்தப்படி கங்காவை நேருக்கு நேர் பார்த்தா, என்னால அவ மேல கோபப்பட முடியல.. என்ன இருந்தாலும், என் பையனை நான் இப்படி பார்க்கிறேன்னா, அதுக்கு அவ தானே காரணம்..” என்று நீளமாக பேசி முடித்தார்.

கோமதி பேசியதிலேயே, செல்வாவிற்கு தன் அண்ணனின் வாழ்க்கையில் கங்கா எப்படி வந்தாள் என்பது புரிந்தது.. தன் அன்னையின் கவலையை போக்கி, தன் சகோதரனின் வாழ்க்கையை சரிப்படுத்த அன்று முழுதும்  தீவிரமாக யோசித்தவன், பின் ஒரு தீர்வை கண்டுபிடித்து, நர்மதா அலைபேசியிலிருந்து கங்கா எண்ணை கண்டுபிடித்தவன், கங்காவை உடனே பார்க்க வேண்டும் என்று கூறினான்.

செல்வாவிடம் இருந்து அழைப்பு வந்ததும், “இவன் ஏன் என்னை பார்க்க நினைக்கிறான்..” என்று கங்காவின் மனதில் கேள்விகள் தோன்றவில்லை, ஏனெனில் துஷ்யந்த் வீட்டிலிருந்து ஒருவர் இவளிடம் பேசுகிறார் என்றால், அது அவனைப் பற்றிய விஷயமாக தான் இருக்கும் என்பது கங்காவுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.. ஏற்கனவே துஷ்யந்த் மாமா, கோமதி, விஜி, ஏன் வேறு ஒரு நோக்கம் என்றாலும், நர்மாதவும் அதே விஷயத்துக்காக  தானே வந்தாள்.. அதனால் செல்வாவும் துஷ்யந்த் பற்றி பேச தான் கூப்பிட்டிருப்பான் என்று யூகித்து விட்டாள். அதுவும் அன்று துஷ்யந்த் கோவிலில் நடந்துக் கொண்டதை செல்வா பார்த்திருப்பானே? அதனால் அவன் கூப்பிட்டதும், இவளும் அவனை சந்திக்க ஒத்துக் கொண்டாள்.

அதனால் தான்.. இவளைப் பார்த்ததும், “என்னோட அண்ணனை விட்டுப் போக, உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்..” என்று செல்வா கேட்ட கேள்விக்கு அதிர்ச்சியோ! வருத்தமோ! கொள்ளாமல், புன்னகையோடு அவனை எதிர் கொண்டாள்.

“உங்க அண்ணனை நான் பிடிச்சு வச்சில்ல்.. அவரா விலகினா.. நானும் அவரை விட்டு விலகிடுவேன்..”

“ஆனா அவரா உன்னை விட்டு விலகமாட்டார்.. அப்படித்தானே?”

“அப்படி நீங்க நினைச்சா என்னால ஒன்னும் பண்ண முடியாது..”

“இப்படி பதில் சொன்னா எப்படி? என்னோட அண்ணனோட வாழ்க்கை நல்லா இருக்கனும்.. அதான் என்னோட கவலையும், எங்க அம்மாவோட கவலையும்.. அவங்க வருத்தப்பட்டு பேசினதுல தான்.. எனக்கு உங்க தொடர்பை பத்தி தெரியும்.. இங்கப்பாரு.. நான் எவ்வளவு பணம் வேனும்னா தரேன்.. அவரை விட்டு விலகிப் போய்டு..”

“இங்கப்பாருங்க செல்வா.. இப்பவும் உங்க அண்ணனை விட்டு நான் விலக தயாராத்தான் இருக்கேன். அதனால உங்க அண்ணன் கிட்ட இதைப்பத்தி பேசுங்க..”

“அண்ணன் கிட்ட பேசினா எதுவும் நடக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டே சொல்றல்ல.. அந்த அளவுக்கு என்னோட அண்ணனை நீ ஆக்கி வச்சிருக்க.. அதான் கல்யாணத்துலேயே பார்த்தேனே! உன்னோட தங்கை நகையை வேண்டாம்னு மறுக்கறதும், அப்புறம் நீ சொன்னதும், அதை வாங்கிக்கிறதும், இப்படி எத்தனை விஷயத்துல நடிச்சு எங்க அண்ணனை ஏமாத்தி வச்சிருக்கீங்க”

“இங்கப்பாருங்க செல்வா.. உங்க அண்ணனோட வாழ்க்கையில நான் சம்பந்தப்பட்ருக்கவே தான், நான் இப்போ பொறுமையா பேசறேன்.. இதுல என்னோட தங்கையை இழுக்க வேண்டாம்.. எதுவா இருந்தாலும் என்னை மட்டும் பேசுங்க..

உங்க அண்ணன் ஒன்னும் சின்ன குழந்தையில்லை அவரை ஏமாத்த.. தி பேமஸ் DR க்ரூப்ஸ் ஆஃப் கம்பெனியோட மேனேஜிங் டைரக்டர்.. இந்தியா முழுக்க பிஸ்னஸ் பண்றவர்.. இன்னும் கொஞ்ச நாளில் வெளிநாடோடவும் சேர்ந்து பிஸ்னஸ் பார்க்கப் போறீங்க.. அப்படிப்பட்ட உங்க அண்ணன் என்கிட்ட ஏமாந்துப் போறாரா?”

“அதான் எனக்கும் புரியல.. ஏற்கனவே ஒருப் பெண்ணால ஏமாந்து, வாழ்க்கையையே தொலைச்சவர், திரும்ப அதே தப்பை ஏன் செய்றார்னு புரியல.. ஆனா அதை பார்த்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாது..

முன்னனாலும் நான் சின்னப்பையன், ஆனா இப்போ என்னோட அண்ணனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கு.. அவரோட சந்தோஷமான வாழ்க்கை தான் எங்களோட சந்தோஷம்.. அம்மாவும் அப்போ தான் அண்ணனை நினைச்சு வருத்தப்படாம இருப்பாங்க.. அதுக்கு நீ எங்க அண்ணனோட வாழ்க்கையை விட்டுப் போகனும்..”

“நான் போயிட்டா.. உங்க அண்ணன் வேற கல்யாணம் செஞ்சுப்பார்னு நீங்க நம்பறீங்களா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.