(Reading time: 28 - 56 minutes)

ன் செய்யாம.. ஒரு தம்பியா என்னோட அண்ணனுக்கு கல்யாணம் செஞ்சு வைப்பேன்.. தன்னோட உரிமையான மனைவியோடு அவர் சந்தோஷமா வாழ்வாரு.. ஏற்கனவே சாரு விஷயத்துல வாழ்க்கையை தொலைக்க இருந்தவர் இப்போ மாறலையா? அதேபோல, நீ போனா அவர் திரும்ப பழைய நிலைமைக்கு போய்டுவார்னு தப்பு கணக்கு போடாத.. அவரை என்னால மாத்த முடியும்.. அவருக்கு கல்யாணமும் செஞ்சு வைக்க முடியும்..”

“அப்போ சரி.. நான் உங்க அண்ணனோட வாழ்க்கையை விட்டு விலகிப் போய்ட்றேன்.. இனி திரும்ப வரவே மாட்டேன்.. போதுமா?”

“சரி அதுக்கு எவ்வளவு பணம் எதிர்பார்க்கிற?” என்று செல்வா கேட்டதற்கு ஒரு விரக்தி சிரிப்பு சிரித்துக் கொண்டவள்,

“உங்க பங்கு சொத்து முழுசும் தருவீங்களா?” என்றதும் அவன் அதிர்ந்தான். உடனே திரும்ப புன்னகைத்துக் கொண்டவள்,

“இப்போ போய் உங்க அண்ணன்கிட்ட, நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்.. அதுக்கு உங்க பங்கு சொத்தை எனக்கு எழுதிக் கொடுத்திடுங்கன்னு கேட்டா.. ஏன்னு கூட கேக்காம மொத்தத்தையும் எழுதி வச்சிடுவார்.. அப்படியிருக்கும் போது, நீங்க கொடுக்கிற பணம் எனக்கெதுக்கு?” என்றாள்.

“அப்போ பணம் ஒன்னுதான் குறிக்கோள் இல்லையா?” அவன் கேட்டதற்கு,

“அதுக்கு இவ்வளவு வருஷம் நான் காத்திருக்க வேண்டியதில்ல.. நீங்க சொன்னது போல உங்க அண்ணன் வாழ்க்கையை விட்டு விலகிட்றேன்.. அதுக்கு பதிலா, நீங்க சொன்னது போல, அவருக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுங்க.. அதை நீங்க செஞ்சாலே போதும்.. சீக்கிரம் நான் விலகிப் போய்டுவேன், அப்போ உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்..” என்று சொன்னவள், அவன் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினாள்.

துஷ்யந்தோடு வாழவும் முடியாமல், அவனை விட்டு விலகவும் முடியாமல் இத்தனை வருடம் அவள் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தாள். அவனோடு சேர முடியாததற்கு ஒரு காரணம் இருந்தது போல, அவனை விட்டு விலக முடியாததற்கு ஒரே காரணம், அவளின் பிரிவால், அவன் திரும்ப பழைய நிலைக்கே போய்விடக் கூடாதே என்பதற்கு தான்,

இப்போது தான் செல்வா திரும்ப தன் சகோதரனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்பதாக சொல்கிறானே! அதனால் மனதில் வலி இருந்தாலும், துஷ்யந்தை விட்டு விலக அவள் முடிவெடுத்துவிட்டாள். ஆனால் எங்கு செல்வது என்று அவள் குழம்பிய போது தான், மதர் அவளை பார்க்க வேண்டுமென்று அழைத்திருந்தார். அவளும் அவரை பார்க்கச் சென்றாள்.

“கங்கா.. கேரளாவில் ஒரு குக் கிராமத்துல ஒரு சேவை மையம் உருவாக்கியிருக்கிறோம்.. நம்ம குன்னூர்ல இருப்பது போலத்தான்.. அதை கொஞ்ச நாள் என்னோட பொறுப்பிலேயே பார்த்துக்க சொல்லி கேக்கறாங்க.. அதான் நான் கேரளாவுக்கு போகப் போறேன்..”

“கண்டிப்பா போங்க மதர்.. உங்க சேவை எல்லோருக்கும் தேவையான ஒன்னு.. ஆனா என்னையும் யமுனாவையும் மறந்துடாதீங்க..”

“உங்களை எப்படி மறக்க முடியும் கங்கா.. எப்பவும் நீங்கல்லாம் என்னோட ஞாபகத்துல இருப்பீங்க.. இப்போ எதுக்கு உன்னை வரச் சொன்னேன்னா, அங்க இலவசமா தையல் வகுப்பு வைக்கப் போறோம், அப்புறம் இலவச ட்யூஷன் இன்னும் சில கைத்தொழில் எல்லாம் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கப் போறோம்.. உன்னோட டெய்லரிங் இன்ஸ்டிட்யூட்ல கத்துக்கிட்டவங்க யாராச்சும் எங்கக்கூட வர முடியுமா? நிரந்தரமா இல்ல, அங்க யாரையாச்சும் நல்லா ட்ரியின் பண்ணிட்டு அவங்க இங்க வந்துடலாம்.. அப்படி யாராச்சும் வருவாங்களா கங்கா?”

“ஏன் மதர்.. அங்கேயே நிரந்தரமா இருக்கிறதா இருந்தா ஏத்துக்க மாட்டீங்களா?”

“ஏன் ஏத்துக்காம… உனக்கு யாராச்சும் அப்படி தெரியுமா கங்கா..”

“அது நானே வரேன் மதர்.. நிரந்தரமா அங்கேயே இருந்து உங்க சேவையில நானும் பங்கெடுத்துக்கிறேன்.. என்னை கூட்டிட்டுப் போவிங்களா மதர்..”

“கண்டிப்பா கங்கா.. ஆனா ஏன் இந்த முடிவுன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“ப்ளீஸ் மதர்.. எதுவும் என்கிட்ட கேக்காதீங்க..”

“இப்படி தான் ஆறு வருஷம் முன்னேயும் எதுவும் கேக்காதீங்கன்னு சொன்ன.. எனக்கு உன்மேல எப்பவும் நம்பிக்கை இருக்கு கங்கா.. அதான் இதுவரையிலும் நான் எதுவும் கேக்கல.. ஆன இப்போ நீ எடுத்திருக்க இந்த முடிவு சரிதானா? கொஞ்ச நாள் முன்னக்கூட யமுனா வந்து, நீ துஷ்யந்தை கல்யாணம் செஞ்சுக்கனும்.. அதுக்கு நான் உன்கிட்ட பேசனும்னு சொன்னா.. எனக்கு துஷ்யந்த் பத்தி முழுசா தெரியாது.. நம்ம ஆசரமத்துக்கு அந்த பையன் டொனேஷன் கொடுக்கறதால நான் நல்ல பையன்ன்னு சொல்ல வரல.. ஆனா உன்மேல அந்த பையனுக்கு அன்பு இருக்கு.. உன்னை சுத்தி எல்லோரும் உன்னோட நன்மையை மட்டுமே விரும்புறாங்க.. அவங்களை விட்டு நீ போகனுமா?”

“கொஞ்ச காலமாவது நான் அவங்கள விட்டு விலகித்தான் இருக்கனும்  மதர்.. ப்ளீஸ் எனக்கு இந்த வேலையை கொடுங்க மதர்..”

“கங்கா எல்லாம் யோசிச்சு செய்வேங்கிற நம்பிக்கையில் நான் உன்னை கூட்டிட்டுப் போறேன்.. ஆனா எப்பவும் பிரச்சனையை விட்டு ஒதுங்க நினைக்காத கங்கா.. எப்படியோ ஒருநாள் நீ அதை சந்திச்சு தான் ஆகனும்”

“எனக்கு புரியுது மதர்.. நீங்க என்னை கூட்டிட்டுப் போறேன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ்.. கொஞ்ச நாள் தான் மதர்.. அப்புறம் பிரச்சனைகள் தானாகவே சரியாகிடும்.. அதுவரைக்கும் நான் கேரளாவில் இருக்கேன்னு யாருக்கும் தெரிய வேண்டாம்..”

“நான் சொல்ல மாட்டேன்.. ஆனா அந்த கர்த்தர் என்ன முடிவெடுத்திருக்கார்னு தெரியாதே! சரி 4 நாளில் நான் கேரளாவுக்கு கிளம்பிடுவேன்.. இன்னைக்கு நான் பாண்டிச்சேரி போறேன்.. அங்க ரெண்டுப்பேரை கூட்டிக்கிட்டு அப்புறம் தான் கேரளா கிளம்பனும்.. அதுக்குள்ள நீ பாண்டிச்சேரி வந்திடு..” என்று மதர் சொல்லியிருந்தார்.

துஷ்யந்தை விட்டு விலகி செல்வதற்கு முன், அவனோடு ஒரு நாளாவது அவனின் மனைவியாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, அவன் பிறந்த நாளிலேயே அதை செயலாற்றினாள். ஆனால் அவன் ஏக்கத்தோடு விடைப்பெற்ற போது, இப்படி செய்திருக்க கூடாதோ என்று நினைத்தாள். இப்படி அவனை கஷ்டப்படுத்தி பார்த்தற்கு கண்டிப்பாக தனக்கு நரகம் தான் என்று நினைத்துக் கொண்டாள்.

அனைவருக்கும் தெரியாமல் எப்படி பாண்டிச்சேரி செல்வது என்று அவள் குழம்பிக் கொண்டிருக்க, இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்ததும், அனைவரிடமும் மனதார மானசீகமாய் மன்னிப்பு கேட்டவள், அவர்கள் அனைவரையும் விட்டு விலகிச் சென்றாள்.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 31

Episode # 33

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.