(Reading time: 15 - 29 minutes)

அந்நேரத்தில் லூஸி அங்கு வந்து சேர்ந்து வசந்திற்கு போன் செய்தாள்.

"எங்க இருக்க வசந்த்? நான் வந்துட்டேன்"

அடுத்த நிமிடத்தில் இருவரின் சந்திப்பும் நடந்தது.

"ரொம்ப பயமா இருக்கு வசந்த்"

"அஞ்சே நிமிஷம் தான். நான் தான் அமேலியான்னு சொல்லுற. சில நலம் விசாரிப்புக்கு அப்புறம் எனக்கு வேலையிருக்குனு கிளம்புற. அவ்வளவு தான்"

அடுத்த ஒரு மணி நேரத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஓய்வாக இருந்த மாடல் பெண்ணிடம் லூஸியை அழைத்துச் சென்றான் வசந்த்.

"ஹலோ மேம். இவங்க தான் ஓவியர்"  

"ஹாய்! ஐ அம் அமேலியா" என்று கையை நீட்டினாள் லூஸி.

இருவரும் கை குலுக்கிக் கொண்டனர். மாடல் பெண்ணின் முகத்தில் மட்டும் சந்தேக அலை படர்ந்தது.  

"என்ன அப்படி பாக்குறீங்க?"

"உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே"

அந்த கேள்வி லூஸியையும் வசந்தையும் ஒரு மிரட்டு மிரட்டியது.

"நான் பெரிய ஓவியர் இல்லையா. எங்கயாச்சும் பாத்திருக்கலாம்"

"அப்போ, என் கண் முன்னாடி ஒரு ஓவியத்தை வரைஞ்சு காட்ட முடியுமா?"

"ஓவியமா?!"

லூஸி என்ன செய்வதென தடுமாற, மாடல் பெண்ணோ, " ஆங்..ஆமா.. ஆமா"  என ஒரு குறிப்பிட்ட ஒரு விளம்பர கம்பெனி பெயரை குறிப்பிட்டு "அந்த இடத்துல உங்களை நான் பாத்திருக்கேன். நீங்க நடிச்சிட்டு இருந்திங்க. உண்மையிலேயே நீங்க அமேலியா தானா?"

"இல்லை மேம்"

"அப்போ ஏன் பொய் சொன்னீங்க?"

லூஸி செய்வதறியாது வசந்த்தை நோக்க. அவனோ என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தான்.

"பாத்தியா வசந்த், அவங்க கண்டுபிடிச்சிட்டாங்க" என்றான் ஜான்.

"என்ன கண்டுபிடிச்சிட்டேன்?"

"ஆக்சுவலா, இந்த ஐடியாவை நான் தான் கொடுத்தேன். உங்களை ஏமாத்தலாம்னு நினைச்சோம். ஆனா நீங்க கண்டுபிடிச்சிட்டீங்க"

"நிஜ அமேலியா எங்கே?"

"இன்னும் பத்து நிமிஷத்துல அவங்க இங்க இருப்பாங்க"

"ஜான்!!!" என்று அதிர்ந்தான் வசந்த்.

அந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க நிஜ அமேலியா வரவேண்டிய சூழ்நிலை. அடுத்து என்ன நடந்தது என்றே வசந்திற்கு புரியவில்லை.  எல்லாம் கனவு போல் நடந்தது.

திடீரென கதவைத் திறந்து அமேலியா வர, அங்கிருந்தவர்கள் மரியாதை நிமித்தமாக கைகளைத் தட்டி வரவேற்றனர்.

தொடரும்...

Episode # 43

Episode # 45

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.