(Reading time: 19 - 37 minutes)

ங்கா எப்போதும் வேண்டுமென்று அவளை குறித்து அவன் எடுத்த முடிவையோ, அண்ணாமலை சொன்னதை  பற்றியோ, கங்காவிடம் அவன் பேசியிருந்தால், அவனது குழப்பத்திற்கெல்லாம் அவன் எதிர்பார்த்த முடிவுகள் அவனுக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவனோ இப்போதும் அண்ணாமலையிடம் அதைபற்றி பேச நினைத்தான். கங்காவை தன் மனைவியாக்கிக் கொள்ள கண்டிப்பாக இப்போதைக்கு இங்கு குடும்பத்தில் முக்கியவராக இருக்கும் தன் மாமாவிடம் சொல்லித் தானே ஆக வேண்டுமென்று அவரை பார்க்க வந்திருந்தான்.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் அவர் பேசியதற்கு அவன் காட்டிய முக பாவனைகளை வைத்தே, கங்காவைப் பற்றி இதற்கு மேலும் அவனோடு பேசாமல், சீக்கிரம் அவளை இங்கிருந்து அனுப்பியாக வேண்டும் என்று அவர் உறுதியாக நினைத்துக் கொண்டார். கங்காவை இங்கிருந்து அனுப்பும் போது, துஷ்யந்த் வீட்டில் இருக்கக் கூடாது என்று நினைத்தார். அதற்கேற்றார் போல் துஷ்யந்தை வெளியே அனுப்ப அவருக்கு தானாக ஒரு வாய்ப்பு அமைந்தது.

“மாமா நான் கங்காவ பத்தி உங்கக்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்று அண்ணாமலையிடம் துஷ்யந்த் அனுமதி கேட்ட போது,

“இப்போ கங்காவை பத்தி பேசல்லாம் நேரமில்லை ராஜா.. ஒரு முக்கியமான வேலை உனக்கு காத்திருக்கு..” என்றுக் கூறினார்.

“என்ன முக்கியமான வேலை மாமா அது? எனக்கு இப்போதைக்கு கங்காவை தவிர எதுவும் முக்கியமில்ல..”

“ராஜா அப்படி சொல்லக் கூடாது. இப்போ இருக்க பிரச்சனையை என்னால தீர்க்க முடியாது.. நீதான் தீர்க்கனும்.  நம்ம எஸ்டேட்ல வேலை செய்றவங்க, சம்பளம் பத்தலன்னு ஸ்ட்ரைக் பண்ண போறாங்களாம். அதுக்காக அவங்க யூனியன்ல அதை தெரியப்படுத்தி இருக்காங்க.. நாம அவங்க கோரிக்கைகளை ஒத்துக்கலன்னா அடுத்து ஸ்ட்ரைக்னு யூனியன் சொல்லி இருக்கு.  இப்போ நமக்கு லாபம் தரக் கூடிய ஒன்னு இந்த எஸ்டேட் மட்டும் தான், இதுல வர லாபத்தை நம்ம பிஸ்னஸ்ல போட்டா தான் நாம விட்டதல்லாம் பிடிக்க முடியும். எனக்கு இந்த மீட்டிங்லல்லாம் பேச தெரியாது. செல்வாவை இப்போ அங்க எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வர வைக்க முடியாது. அதனால நீ தான் மீட்டிங்க்க்கு போய் எல்லாத்தையும் சுமூகமாக முடிச்சிட்டு வர..” என்ற ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைத்தார்.

ஆனால் அது தன்னால் முடியுமா? என்ற கேள்வி அவனுக்கு பெரிதாக இருந்தது.  இதில் தோல்வியடைந்து விட்டால் என்ன செய்வது? என்று பயமாக இருந்தது. திரும்ப அவன் தவறு செய்து ஏதாவது நஷ்டத்தை உண்டாக்கி விடுவானோ? என்று கவலைக் கொண்டான். அந்த நேரம் தன் பிரச்சனையை சொல்லி கங்காவின் முன் நின்றான்.

“இதுக்கு யாராவது பயப்படுவாங்களா? திரும்ப உங்களை நீங்க காட்டிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. இப்படியே குன்னூர்ல எத்தனை நாள் ஒளிஞ்சிக்க போறீங்க? நீங்க தோல்வி அடைஞ்சதுலல்லாம் திரும்ப வெற்றி அடைய வேண்டாமா? அங்க ஊர்ல உங்க தம்பி எல்லாத்தையும் தனியா பார்த்துக்கிறார். நீங்க போய் அதை உங்க பொறுப்புல எடுத்துக்க வேண்டாமா? எல்லாத்தையும் சரி செய்ய வேண்டமா? அதுக்கெல்லாம் முதல்படி இந்த மீட்டிங்னு நினிச்சுக்கோங்க.. முன்ன நடந்த தோல்வி எல்லாத்தையும் இனி நீங்க அடையப் போற வெற்றியோட படிக்கட்டா எடுத்துக்கோங்க..”

“என்னால முடியுமா கங்கா.. நான் திரும்ப சொதப்பிட்டேனா?”

“முடியும்னு நினைச்சுகோங்க.. முடியுமான்னு கேக்காதீங்க.. உங்களால முடியும். அப்படி மீட்டிங்ல உங்களுக்கு பயமா இருந்தா, கண்ணை மூடி என்னை நினைச்சுகோங்க.. தானா உங்களுக்கு தைரியம் வந்து பிச்சி உதறிடுவீங்க” என்று சொல்லி சிரித்தாள்.

அவள் விளையாட்டாக சொன்னாலும், அது தான் உண்மை, அவளும் அவள் பேச்சுக்களும் தான் அவனுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. அவளை இறுக்கி அணைத்தவன், “இது போல எனக்கு வழிக்காட்ட நீ எப்போதும் என்கூட இருக்கனும் கங்கா” என்று மனதில் சொல்லிக் கொண்டான். அந்தோ பாவம் அவன் அதை வாய்மொழியாக அவளிடம் உரைத்திருந்தால், “நான் உங்க பொண்டாட்டி, உங்களை விட்டு எங்கே போய்விட போகிறேன்.” என்று அவனுக்கு அவள் ஆறுதல் அளித்திருப்பாள். அவனின் மனப்போராட்டத்திற்கு அங்கேயே முற்றுப் புள்ளி கிடைத்திருக்கும். ஆனால் வழக்கம் போல் மனதில் பேசியவன், அவள் இதழில் முத்தம் ஒன்றை பதித்துவிட்டு கிளம்பினான்.

அவன் என்னவோ சரியில்லாமல் இருக்கிறான் என்பதை அவனது அணைப்பில் உணர்ந்தாலும் என்ன என்பது புரியாததால், இன்னும் வாய்மொழியால் அவனுக்கு ஊக்கம் கொடுத்து அவனை அனுப்பி வைத்தாள். அடுத்து அவளிடம்  பேச வேண்டும் என்று சொல்லி அண்ணாமலை அவளை வரச் சொன்னார்.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 36

Episode # 38

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.