(Reading time: 21 - 41 minutes)

அவளுடைய அருகாமையும், கிசுகிசுப்பான அவளுடைய குரலும், அதுவும் அவள் சொன்ன வார்த்தைகளும், அதை அவள் ரசித்து சொன்ன விதமும் அவனை எங்கோ கொண்டு சென்றது.

காதல் இல்லாமல் கல்யாணம் செய்தாலும், காதல் வரும் என்று இவர்கள் கண்களை பார்த்து புரிந்து கொள்ளலாம். 

வேண்டாம் என்று கூறியவனை பிடித்து கல்யாணம் செய்து வைத்த மங்களமும், சுப்பிரமணியமும் கூட இப்போது இவர்களை வியந்து பார்த்தார்கள்.

மகன், மருமகள் முகங்களில் இருந்த பூரிப்பை பார்த்து பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

"தப்பு பண்ணிட்டோமோன்னு நினைச்சு ரொம்ப கலங்கிருக்கேங்க. ஆனா பாருங்களேன். ரெண்டு பேரும் ஒருத்தருக்காக ஒருத்தர் படைக்க பட்டது மாதிரி இருக்காங்க. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு", என்று கூறினாள் மங்களம். ஆம் என்னும் விதமாய் சுப்பிரமணியமும் தலை அசைத்தார். சண்முகமும் அவ்வாறே சந்தோச பட்டார்.

"முகத்தை பார்க்காம  ரெண்டு பேரும் கல்யாணத்தில் இருந்தது என்ன? இப்ப பார்வையை எடுக்க முடியாம பாத்துட்டு இருக்குறது என்ன?", என்று மனதுக்குள் புகைந்தாள் வள்ளி.

அதன் பின் உணவு வேளை ஆரம்பமானது. மணமக்களை அமர வைத்து விட்டு ஒருவருக்கொருவர் ஊட்டி விட வேண்டும் என்று தொல்லை செய்து கொண்டிருந்தார் போட்டோ கிராபர்.

கல்யாண தினத்தன்று அவன் தாலி கட்டி விட்டு எழுந்து சென்றதால் இப்போது விருப்பமாகவே அனைத்தையும் செய்தான்.

காவ்யாவும் அவளுடைய அம்மா அப்பாவுடன் கிளம்பி விட்டாள். அடுத்து அனைவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

காரில் வீட்டுக்கு வரும் போதும் அவள் கையை பற்றிய படி தான் வந்தான் சூர்யா.

வீட்டுக்கு  சென்றதும் அவர்களுக்கு ஆரற்றி சுற்றி உள்ளே வர விட்டாள் மங்களம். இருவரும் அவர்கள் அறைக்குள் சென்றார்கள்.

குளிக்க உடை எடுத்தவளை "கொஞ்ச நேரம் இரு கலை. அப்பறம் மாத்தலாம்", என்றான் சூர்யா.

"எதுக்கு அத்தான்?", என்று கேட்டவளை "கிட்ட வா", என்று அழைத்து அருகில் வந்தவளை தன் அருகே அமர வைத்து கொண்டான்.

"இந்த டிரஸ்சல எப்படி இருக்க தெரியுமா?", என்று கூறி அவள் நெற்றி கன்னம், உதடு என்று விரலால் வருடியவன் அழுத்தமாக உதட்டில் முத்தத்தை பதித்தான்.

முத்தத்தில் திளைத்தவள் அவன் விலகியதும் "இதுக்கு தான் இருக்க சொன்னீங்களா?", என்று சிணுங்களாக கேட்டாள்.

"என்னோட பிரண்ட் ஷியாம் பிரகாஷ் பாரின்ல இருக்கான். நானும் அவனும் ஒண்ணா தான் படிச்சோம். அப்புறம் பாரின்கு ஒண்ணா தான் போனோம். அங்க உடம்பு சரி இல்லாம தான் நான் திரும்பி வந்துட்டேன். அவனால கல்யாணத்துக்கு வர முடியலை. அதனால இப்ப அவன் கிட்ட பேசலாம். உன்னை பாக்கணும்னு சொல்லிட்டு இருந்தான். அவன் கிட்ட நாம இப்ப பேச போறோம்.  அதுக்கு தான் இப்ப டிரெஸ் மாத்த வேண்டாம்னு சொன்னேன். அதுக்கு முன்னாடி நம்மளும் ஒரு போட்டோ எடுத்துக்கலாம்", என்று கூறி தன்னுடைய போனை எடுத்து இருவரையும் புகைப்படம் எடுத்தவன் தன் லேப்டாப் எடுத்து முன்னால் வைத்து ஆன் செய்தான்.

அவனையே அமைதியாக பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் கலைமதி.

தேநேரம் தூங்கி எழுந்து தன்னுடைய கையினால் ஒரு காப்பியை போட்டு கொண்டிருந்தான் ஷியாம். அப்போது அவனுடைய மொபைல் அடித்தது.

எடுத்து நம்பரை பார்த்தான். அது சூர்யா என்று தெரிந்ததும் அவன் முகத்தில் புன்னகை ஒட்டி கொண்டது.

அதுவும் வீடியோ காலில் அவன் அழைத்திருப்பதால், அவனுடைய காலை கட் செய்து விட்டு போனை லேப்டாப்பில் கனெக்ட் செய்து விட்டு சூர்யாவை அழைத்தான் ஷியாம்.

"என்ன கட் பண்ணிட்டாங்க?", என்று கேட்டு கொண்டிருந்த கலைமதியிடம் "திருப்பி கூப்பிடுவான்", என்று சூர்யா சொல்லி கொண்டிருக்கும் போது ஷியாம் அழைப்பு வந்தது. அதை ஆன் செய்தான் சூர்யா.

"டேய் மச்சி", என்று சந்தோஷமாக அழைத்தான் ஷியாம்.

"எப்படி டா இருக்க? தூங்கி எழுந்துட்டியா?", என்று கேட்டான் சூர்யா.

"ஹ்ம்ம் இருக்கேன் டா. இப்ப தான் எழுந்தேன். நீ எப்படி இருக்க? ஹாய் தங்கச்சி எப்படி மா இருக்க?", என்று ஷியாம் கேட்டதும் அவனுடைய தங்கச்சி என்ற குரலில் கனிந்தவள் "நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?", என்று கேட்டாள்.

அந்த அண்ணா என்ற அழைப்பில் ஷியாம் மனதில் பல நினைவுகள் வந்து போனது.

அதை அறிந்த சூர்யாவும் அவனை திசை திருப்ப "எப்படி டா கலையை உன் தங்கச்சின்னு கண்டு பிடிச்ச? என்னோட பிரண்டா கூட இருக்கலாம்ல?", என்று கேட்டு வம்பிழுத்தான்.

கலை அவனை பார்த்து முறைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.