(Reading time: 21 - 41 minutes)

ஷியாமோ "முறைக்க கூடாது தங்கச்சி. முதுகுல நாலு போடணும். ஆனா நீ அதை செய்ய எல்லாம் அவசியமே இல்ல மா. அவன் கிட்ட வேற எந்த பொண்ணும் இப்படி நெருக்கமா உக்கார முடியாது. பக்கத்துல வந்து பேச வந்தாலே சிங்கம் மாதிரி தான் பாப்பான். நீ அவன் கிட்ட இப்படி நெருக்கமா உக்காந்திருக்கும் போதே அது உரிமைக்காரின்னு எனக்கு தெரியாதா?", என்று கேட்டான்.

அதில் அவளும் சிரித்தாள். சூர்யாவோ அவளை தோளோடு தோளாக அணைத்து கொண்டான்.

"டேய் எனக்கு போன் பண்ணிட்டு அங்க என்ன ரொமான்ஸ்? என் தங்கச்சி தோளில் இருந்து கை எடு", என்று கூறினான் ஷியாம்.

"ஏய் என்னோட பொண்டாட்டி, நான் என்ன வேணாலும் செய்வேன். அண்ணனுக்கு எல்லாம் கேட்க உரிமை இல்லை", என்று சொல்லி அவளை வெட்க பட வைத்தான். "நான் அப்புறம் பேசுறேன் அண்ணா", என்று ஷியாமிடம் கூறிய கலை சூர்யா காதில் எதோ சொல்லிவிட்டு சென்றாள்.

"என்ன டா தங்கச்சி கிளம்பிட்டா?", என்று கேட்டான் ஷியாம்.

"நீ கிண்டல் பண்ணல்ல? அதான் மேடம்க்கு  வெட்கம்", என்று சிரித்த சூர்யா "காவ்யா வீட்ல வீட்டுக்கு போய்ட்டாங்களானு போன் பண்ணி கேட்டுட்டு வரேன்னு போயிருக்கா டா", என்றான்.

"காவ்யாவா அது யாரு? சிஸ்டரோட சிஸ்டரா?"

"இல்லை மச்சான். அது அவ கூட படிக்கிறவ. எனக்கு தங்கச்சின்னு வச்சுக்கோயேன். செம வாலு. எங்க ரெண்டு பேரையும் கிண்டல் பண்ணிட்டே இருப்பா. இன்னொரு காமெடி தெரியுமா? முதல் நாள் கலையை பாக்க காலேஜ் போயிருந்தேன் டா. அப்ப நான் தான் கலையோட ஹஸ்பன்டுன்னு தெரியாம என் பிரண்டுக்கு ஒருத்தனை கட்டி வச்சிட்டாங்க சார். அவன் மட்டும் என் பிரண்டை கொடுமை படுத்தட்டும் அவனை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போயிருவேன்னு மிரட்டினா டா"

"வாவ் இன்டெரெஸ்ட்டிங். அப்பறம் என்ன ஆச்சு?"

"என்ன ஆச்சா? நான் தான் கலை ஹஸ்பன்ட்ன்னு தெரிஞ்ச அப்பறம் ஒரு மாதிரி அசடு வழிஞ்சா பாரு. சின்ன குழந்தைங்க கூட தோத்து போயிரும்", என்று சிரித்தான் சூர்யா.

"சிரிப்பா இருந்துருக்கும். செம பல்ப் வாங்கின மாதிரி முழிச்சிருப்பா. ஹ்ம்ம் சரி டா. ரிசப்ஷன் போட்டோ இருக்கா? இருந்தா அனுப்பேன்"

"ஹ்ம்ம் அது பிரிண்ட் போட்டு வர நாள் ஆகும் டா. அப்பா என்னோட மொபைல்ல கொஞ்சம் எடுத்து வச்சிருக்காங்க. இப்பவே அனுப்புறேன்", என்று சொல்லி அதை அனுப்பியும் விட்டான்.

"ஹ்ம்ம் சரி டா. உங்கிட்ட பேசுன அப்புறம் பாக்குறேன்", என்று சொல்லி விட்டு எதை எதையோ பேசி கொண்டிருந்தார்கள். ஆனால் ஷியாம் மனதில் மட்டும் அந்த காவ்யா என்ற பெயர் பதிந்து போனது.

அதற்கு பிறகு கலைமதி வந்தாள். பின் நண்பர்கள் இருவரும் காலேஜில் செய்த அரட்டையை அவளிடம் கூறி அவளை சிரிக்க வைத்து கொண்டிருந்தார்கள்.

அதற்கு பிறகு ஷியாம் ஆபிஸ் செல்ல நேரம் ஆனதால் "நைட் கூப்பிடுறேன்", என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.

"இப்ப டிரெஸ் மாத்த போகட்டா?", என்று கேட்டாள் கலை.

"ஹ்ம்ம் சரி மா. எதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடு", என்று சிரிக்காமல் சொன்னான் சூர்யா.'

"இல்லை வேண்டாம். இதுல என்ன ஹெல்ப் பண்ண இருக்கு?", என்று சொல்லி விட்டு எழுந்து போனாள்.

"தத்தி, டிரெஸ்ஸை கழட்டி விட ஹெல்ப் வேணுமான்னு கேட்டா, எல்லாம் தெரிஞ்சவளா இருந்தா ச்சி போங்க  அப்படின்னு சிணுங்கிருப்பா? என்ன ஹெல்ப்புனு கேட்டுட்டு போறா பாரு?", என்று சிரித்து கொண்டிருக்கும் போதே "அத்தான் அத்தான் ஒரு நிமிஷம் இங்க வாங்களேன்", என்று கத்தினாள்.

"என்னவோ எதுவோ?", என்று ஓடி போனான். அவளோ கழட்டிய சேலையை நெஞ்சோடு சுருட்டி வைத்து கொண்டு மேலே பார்த்து "அந்த பல்லியை விரட்டி விடுங்களேன்", என்று சொன்னாள்.

"பல்லிக்கா இப்படி கத்தினா?", என்று நினைத்தவனுக்கு  அவள் முகத்தில் இருந்த பயம் பல்லியின் மீது அவளுக்கு இருந்த பயத்தை தெள்ள தெளிவாக உணர்த்தியது.

"பாப்பா தான்", என்று நினைத்து கொண்டு பாத்ரூம் வாசலில் இருந்த துடைப்பத்தை  எடுத்து பல்லியை வெளியே  தள்ளியவன் அந்த ஜன்னலையும் அடைத்து விட்டான்.

"இதுக்கெல்லாமா டி பய படுவ?", என்று கேட்டவனை பார்த்து அசடு வழிந்தாள்.

"நல்ல ஆள் தான் போ", என்று சொல்லி விட்டு வெளியே வர பார்த்தவன் அவளை பார்த்து சிரிப்பதுக்காக  திரும்பினான்.

அப்போது அவன் கண்ணில் பட்டது ஜாக்கெட் மறைக்காத அவள் முதுகும், சட்டைக்கும் பாவாடைக்கும் இடையே தெரிந்த இடமும் தான். மெரூன் கலர் சட்டையும், மெரூன் கலர் பாவாடையும் சேர்ந்து அந்த உடை மறைக்காத அவள் உடலை பளீரென்று தூக்கி காட்டியது. அதுவும் அந்த டியூப் லைட் வெளிச்சத்தில் மின்னியது என்றும் சொல்லலாம்.

அதையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவனுக்கு ஊமத்தம் பிடித்தது போல இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.