(Reading time: 21 - 41 minutes)

"அப்படியே வெளிய போயிரு டா", என்று ஒரு மனமும், "ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்துக்கவா?", என்று மற்றொரு மனமும் கூறியது.

அவளோ அவன் உணர்வுகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் அந்த பல்லி இனி உள்ள வராதுல்ல என்று கணக்கிட்டு கொண்டிருந்தாள்.

"நான் என்ன செஞ்சாலும், அதுக்கப்புறம் என்ன ஆகும்னு கலைக்கு தெரியாது. நான் எல்லை மீறினா தான ஆபத்து? அதனால முத்தம் கொடுத்தா  தப்பு இல்லை", என்று தனக்கு தானே கூறி கொண்டு அவளை நெருங்கினான்.

"இப்ப டிரெஸ் மாத்தலாம்", என்று நினைத்து கையில் இருந்த சேலையை அங்கு இருந்த ஹேங்கரில் போட்டாள் கலைமதி. அதுக்கு பின்னர் தான் கதவை பூட்ட வேண்டும் என்ற நினைவே வந்தது.

திரும்பி அவனை பார்ப்பத்துக்காக திரும்பினாள். அவனோ அவளை நெருங்கி கொண்டிருந்தான். கண்களை அவளை விட்டு அகற்ற முடியாமல் அவளையே குறுகுறு என்று பார்த்து கொண்டிருந்தவனை சரியான நேரத்தில் வெளியே இருந்து "சூர்யா சூர்யா, இங்க வா பா", என்று அழைத்தாள் மங்களம்.

அன்னையின் குரலில் சுயநினைவுக்கு திரும்பியவன் "நீ டிரெஸ் மாத்திட்டு வா கலை", என்று சொல்லி கதவை சாற்றி விட்டு சென்று விட்டான்.

அவன் போன பின்பும் அப்படியே நின்றவளுக்கு வயிற்றுக்குள் பட்டாம் பூச்சு பறப்பது போல இருந்தது.

"நல்லதா போச்சு முன்னாடி அவன் பாக்கலை. கடைசி வரை திரும்பாம  நின்னு சமாளிச்சிட்டோம்".

"இதை பத்தி தான் காவ்யா அடிக்கடி பேசுறாளா? அப்ப பொண்டாட்டி, புருஷனுக்குள்ள இப்படி தான் நடக்குமா? அப்பறம் எதுக்கு அத்தான் சாரி சொல்லிட்டு போறாங்க? ஓ நான் படிச்சு முடிச்ச அப்றமான்னா இந்த சாரி சொல்ல மாட்டாங்க போல? சே சீக்கிரம் காலேஜ் முடிஞ்சா நல்லா இருந்திருக்கும்", என்று நினைத்து கொண்டே குளிக்க ஆரம்பித்தாள்.

சிரித்து கொண்டே வெளியே வந்தவன் "இதோ வரேன் மா. ஒரு நிமிஷம்", என்று கூறி விட்டு ஏற்கனவே கோர்ட்டை கழட்டி இருந்ததால் பேண்டை மட்டும் கழட்டி விட்டு ஒரு லுங்கியை கட்டி கொண்டு போட்டிருந்த வெள்ளை சட்டையுடன் வெளியே சென்றான். 

அங்கு அமர்ந்திருந்த கலைமதி வீட்டினரை கவனிக்காதவன்  போல மங்களம் அருகில் சென்றவன் "என்ன மா?", என்று கேட்டான்.

"உன் மாமா, அதான் கலை அப்பா இப்பவே எல்லாரையும் கூட்டிட்டு ஊருக்கு போறேன்னு சொல்றார் பா. நீ நாளைக்காவது போக சொல்லேன்", என்றாள் மங்களம்.

"சரி அவரிடம் சொல்லலாம்", என்று நினைத்து திரும்பியவன் கண்ணில் முகம் முழுவதும் முல்லை கட்டி கொண்டு அமர்ந்திருந்த வள்ளி பட்டாள். அவளை பார்த்து எரிச்சல் ஆனவன் "மாமா சொல்றது சரி தான். இப்ப கிளம்புனா ரெண்டு மணி நேரத்துக்குள்ள வீட்டுக்கு போயிருவாங்க. நாளைக்குன்னா ஒரு நாளே வீணா போன மாதிரி இருக்கும்", என்றான்.

எல்லாருடைய முகமும் அவனுடைய பதிலில் சுருங்கி போனது. "அதான் சூர்யாவே சொல்லிட்டானே? எல்லாரும் கிளம்புங்க", என்று கூறினார் சண்முகம்.

மதி குளித்து முடித்து வெளியே வரும் போது அனைவரும் கிளம்பி கொண்டிருந்தார்கள். "போகாதீங்க", என்று சொல்வதுக்கு மனது வந்தாலும் வாய் வரவில்லை கலைக்கு. 

மங்களம் வேறு, "நீயாவது சொல்லு மா கலை", என்று அவளிடம் கூறினாள்.

வேறு வழி இல்லாமல் சித்தி மற்றும் பாட்டி, தாத்தா இருந்த அறைக்குள் நுழைய போனவள் காதில் தேன்மொழியின் குரல் கேட்டது.

"இந்த அத்தான் கோர்ட் சட்டைல நல்லாவே இல்லைல மா. சில நேரம் வெள்ளை சட்டை வெள்ளை வேஸ்டின்னு வருவாங்க பாரு. அப்படியே ஹீரோ மாதிரி இருப்பாங்க", என்று கூறினாள் தேன்மொழி.

இதை கேட்டு உடல் எல்லாம் எரிந்தது மதிக்கு.

"லூசு தேனு. அவனே உனக்கு இல்லைனு ஆகிட்டு. அந்த சனியன் புடிச்சவ வந்து என்ன மாயம் மந்திரம் போட்டாளோ அவளே கதின்னு கிடக்கிறான் உன் அத்தான். இன்னும் தேவை இல்லாம அவனை பத்தி யோசிக்காத", என்றாள் வள்ளி.

"அத்தானை எப்படி மா மறக்க முடியும்? நம்ம பாத்ததுலே அத்தான் தான் ரொம்ப அழகு தெரியுமா?"

"தேனு என்கிட்ட அடி வாங்காத. இனியொரு தரம் அவனை பத்தி பேசாத சொல்லிட்டேன்", என்று கண்டிப்புடன் வள்ளி கூறியவுடன் வாயை மூடி கொண்டாள் தேன்மொழி.

"என் அத்தானை இவ எப்படி பாக்கலாம்? அத்தை சொன்ன மாதிரி இவங்களை நான் இருக்க சொல்ல மாட்டேன். இவங்க எல்லாரும் ஊருக்கே போகட்டும். வேஷ்டி சட்டையை கூட ரசிச்சிருக்கா", என்று கடுப்புடன் நினைத்தவள் மங்களம் அருகில் வந்து "நான் சொல்லியும் அவங்க கேக்கலை அத்தை", என்று பொய் உரைத்தாள்.

தனியாக அமர்ந்திருந்த சண்முகம் அருகில் சென்ற சூர்யா "சாரி மாமா", என்று சொன்னான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.