(Reading time: 21 - 41 minutes)

"சூர்யா அப்படி எல்லாம் சொல்லாதப்பா. எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்லை. எனக்கு மதியை நினைச்சு சந்தோசமா தான் இருக்கு. அவளை நீ நல்லா பாத்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒரு அப்பனா அவளுக்கு எதையும் செய்ய முடியலைன்னாலும் உன்னை கட்டாய படுத்தி கட்டி வச்சதே அவளுக்கு நான் செஞ்ச பெரிய காரியம். அவளை நல்லா பாத்துக்கோ", என்று கண்ணீருடன் கூறினார் சண்முகம்.

அனைவரும் கிளம்பியதும் "நான் பஸ் ஸ்டாண்டில் விடுறேன்", என்று கிளம்பிய சூர்யாவை "நீ இரு பா. நான் விட்டுட்டு வரேன்", என்று கூறி காரை எடுத்தார்  சுப்பிரமணியம்.

மதி கன்னத்தை தட்டி "போய்ட்டு வரேன் பாப்பா. சந்தோசமா இரு டா", என்று சொல்லி விட்டு சென்று விட்டார் சண்முகம்.

அவர்கள் சென்றதும் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான் சூர்யா. 

"இந்தா மதி, அவனுக்கும் கொடுத்துட்டு நீயும் குடிச்சிட்டு படுங்க", என்று சொல்லி இரண்டு பால் டம்ளரை கொடுத்த மங்களம் பின் அவளுடைய அறைக்கு சென்று விட்டாள்.

இரண்டு டம்ளரை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தாள் மதி.

அவனோ குளிக்க சென்றிருந்தான். கட்டிலில் அமர்ந்தவள் ஒரு டம்ளரை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.

குளித்து முடித்து வெளியே வந்தவனோ வெறும் லுங்கியுடன் தான் வந்தான். "இவன் என்ன சொன்னாலும் கேக்க மாட்டான்", என்று நினைத்து கொண்டு முகத்தை திருப்பி கொண்டாள்.

அவள் வெட்கத்தை அறிந்தவன் சிரித்து கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.

அவன் கையில் டம்பளரை திணித்தாள். அதை வாங்கி கொண்டவன்  "என்ன மேடம் அமைதியா இருக்கீங்க?", என்று கேட்டான்.  

"அத்தான் நான் ஒரு தப்பு செஞ்சிட்டேன்", என்று பாவமாக சொன்னாள் மதி.

"தப்பா? என்ன தப்பு மா?"

"அத்தை கிட்ட பொய் சொல்லிட்டேன்"

"அம்மா கிட்டயா? என்ன பொய்? எதுக்கு அப்படி சொன்ன?"

"அது வந்து..."

"காரணம் இல்லாம நீ பொய் சொல்லிருக்க மாட்ட கலை. அதனால தயங்காம சொல்லு"

"ஹ்ம்ம் என்னை வெறுக்க மாட்டிங்கள்ல? வாழ்க்கைல எது இல்லாதப்பவும் யார் மேலயும் பொறாமை பட்டது இல்லை. யார் கூடவும் போட்டியும் போட்டது இல்லை. ஆனா இன்னைக்கு மனசுல கோபமா வருது"

"கலை, நீ சொல்றது எனக்கு புரியவே இல்லையே. யார் மேல கோபம் வருது? அம்மா எதாவது சொன்னாங்களா?"

"அத்தை ஒண்ணுமே சொல்லலை. நீங்க வேஷ்டி கட்டுவீங்களா?"

"ஏய் என்னடி ஆச்சு உனக்கு? சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுற?"

"நீங்க பதில் சொல்லுங்க"

"இதுல மிரட்டல் வேறையா? ஊருக்கு வந்தா எதாவது திருவிழான்னா கட்டுவேன் போதுமா? ஏன் கேக்குற?"

"இனி நீங்க ஊருக்கு வந்தா வேஷ்டியை கட்ட கூடாது சரியா?"

"சரி கட்டலை. ஏய் டார்லிங், என்ன மா ஆச்சு?", என்று கேட்டு கொண்டே அவள் தோளில் கைகளை போட்டான்.

"தேன்மொழிக்கு நீங்க வேஷ்டி சட்டை போட்டா ரொம்ப பிடிக்குமாம். அழகா இருப்பீங்களாம். முன்னாடி எல்லாம் பாத்து ரசிப்பாளாம். அத்தை என்கிட்ட அவங்களை நாளைக்கு போக சொல்லுன்னு சொல்லி என்னை அனுப்புனாங்களா? அப்ப அவ இதை பத்தி பேசுனாளா? எனக்கு கோபமா வந்துட்டு. அவ எப்படி உங்களை பாக்கலாம்? உங்களை பத்தி பேசலாம்னு எரிச்சலா வந்துச்சு. அதனால நாளைக்கு போங்கன்னு அத்தை சொல்ல  சொன்னதை சொல்லாமலே அத்தை கிட்ட போய் அவங்க கேக்கலைன்னு பொய் சொல்லிட்டேன் அத்தான். நான் யார் மேலயும் கோபமே பட மாட்டேன் தெரியுமா? ஆனா இப்ப கோபமா வருது. பொய் வேற சொல்லிட்டேன்", என்று அவன் தோள்களில் சாய்ந்து கொண்டே கூறினாள். 

அவள் கூறியதை கேட்ட சூர்யாவுக்கு ஜிவ்வென்று வானத்தில் பறப்பது போல இருந்தது. காதல் என்று தெரியாமலே காதலை சொல்லி கொண்டிருந்த மனைவியை ரசித்தவன் அவளை அப்படியே இறுக்கி கொண்டு "இந்த விசயத்துல உன் கோபமும் தப்பு இல்லை. உன்னோட பொய்யும் தப்பு இல்லை டா", என்றான்.

விழி விரிய அவனை பார்த்தாள் மதி. அந்த குண்டு கண்களின் இமைகளில் முத்தமிட்டவன் அவளை பார்த்து கண் சிமிட்டினான்.

"நிஜமாவே வா? ஏன் அப்படி சொல்றீங்க? கோப படுறதும், பொய் சொல்றதும் தப்பு தான அத்தான்?"

"மக்கு பொண்டாட்டி, நீ என்னை ரொம்ப ரொம்ப காதலிக்கிற. அதனால தான் அவ அப்படி பேசுன உடனே உனக்கு கோபம் வருது. இப்ப எந்த பையனாவது லவ் பண்றேன்னு சொல்லி உங்கிட்ட பேசுனா எனக்கு கோபம் வரும். அது உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சதுனால தான? அது மாதிரி தான். என்னை நீ உனக்கு மட்டும் சொந்தமா நினைக்கிற. அதனால இந்த கோபம் வருது. என்னை ரசிக்கிறவ இங்க இருந்து போகணும்னு நினைக்கிற. அதனால தான் அவங்க போகட்டும்னு நினைச்சு பொய் சொல்லிருக்க. எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.