(Reading time: 15 - 29 minutes)

தன்னைச் சுற்றியிருந்த பகைவர்களின் நடவடிக்கையை உற்று நோக்கினான். அவர்களின் கால்கள் ஓரிடத்தில் நிற்காமல் அலைந்துகொண்டிருந்தன.

சம்யுக்தன் பார்த்திபனைப் பார்த்தான். பார்த்திபன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடீரென்று தன் கண்களைத் திறந்து, "பகைவர்களே!" என்று கூவினான். பகைவர்கள் அனைவரும் பார்த்திபனையே வெறித்தனர். "தயவுசெய்து எனக்குத் தண்ணீர் தந்து விட்டு நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நடந்துகொண்டிருங்கள். எனக்குத் தண்ணீர் தாகம் உயிர் போகிறது" என்றான்.

முகமூடி மனிதன் பார்த்திபனைப் பார்த்து, "இன்னும் சிறிது நாழிகை தான், நண்பா!. எல்லாம் முடிந்துவிடும். உனக்குத் தண்ணீர் தாகம் இருக்காது".

"நான் வீரமரணம் அடையவேண்டும் என்று விரும்புகிறேன். தண்ணீர் தாகத்தாலே மரணிக்க வைக்காதீர்கள்".

முகமூடி மனிதன் அங்கிருந்த ஒருவனிடம் பார்வையால் சமிக்ஞை செய்தான். அவன் ஒரு குவளையுடன் பார்த்திபனிடம் சென்றான். அதிகாரமாக, "ம்ம்ம்....வாயைத் திற!" என்றான்.

"ஏன், சங்கிலியை அவிழ்த்துவிட்டு  என் கைகளில் குவளையைக் கொடுக்கக்கூடாதா?"

"அதெல்லாம் முடியாது. இப்படிக் குடித்தால் குடி. இல்லையென்றால் நான் போகிறேன்" என்று கூறி அங்கிருந்து நகர ஆரம்பித்தான்.

"ஐயா, நில்..நில்...நான் இப்படியே குடிக்கிறேன்" என்று கூறி பார்த்திபன் வாயைத் திறந்தான். அவன் பார்த்திபனின் வாயில் நீரை ஊற்றினான். பார்த்திபன் தன் தாகத்தைத் தீர்த்துக்கொண்டான். அவன் மூச்சு புத்துணர்ச்சியோடு வெளிவந்தது.

பார்த்திபன் பூபதியைப் பார்த்தான். பூபதியோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். உயிர்போகும் நிலையிலும் இவனால் எப்படி நிம்மதியாக உறங்க முடிகிறது என்று எண்ணிக்கொண்டே "பூபதி! பூபதி!" என்று அவனைக் கூப்பிட்டான்.

பூபதி உறக்கத்திலேயே, "என்ன?" என்று கேட்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"நம் தலையை வெட்டப்போகிறார்களாம். முதலில் உன்னைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தலையை நீட்டு. வெட்டிக்கொண்டு செல்லட்டும்"என்றான்.

அதைக் கேட்டு உறக்கத்திலிருந்த பூபதி, "என்னை விட்டுவிடுங்கள்! என்னை விட்டுவிடுங்கள்!" என்று அலறியபடி எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் எழுந்த விதத்தைப் பார்த்து பகைவர்களும் சிரித்தார்கள்.

அப்போது கதவு தட்டும் ஓசை கேட்டது.

பகைவர்கள் சிரிப்பதை நிறுத்திவிட்டு ஒருவரையொருவர் பார்த்தனர். முகமூடி மனிதன் கதவைத் திறந்தான். பிறகு, "நம் தலைவர் வந்துவிட்டார்!" என்று கூறினான். அனைவரின் கண்களும் வாசலின் பக்கம் சென்றன.

வழியை மறித்துக்கொண்டு நின்ற முகமூடி மனிதனை விலக்கிக்கொண்டு வந்தவனைப் பார்த்து பார்த்திபன் பேரதிர்ச்சியில் உறைந்து போனான். அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டு சம்யுக்தனைப் பார்த்தான். ஆனால், சம்யுக்தனோ எந்த அதிர்ச்சியையும் வெளிக்காட்டாமல் ஏதோ சாதித்துவிட்ட புன்னகையை இதழ்களில் தவழ விட்டான்.

வந்தவன் யார்?....அடுத்த அத்தியாயத்தில்....  

தொடரும்...

பாகம் - 01 - அத்தியாயம் 12

பாகம் - 01 - அத்தியாயம் 14

{kunena_discuss:1135}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.