(Reading time: 44 - 87 minutes)

அவளை தன்னிடமிருந்து பிரித்து, “மறுபடியும் சொன்னா, என்ன செய்வடி?” ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, இதழோரம் புன்னகையை அடக்கி, சீண்டினான் மனைவியை.

சட்டென அழுகையை கைவிட்டவள், “என்னடா? அவ்ளோ ஆயிடுச்சா? சொல்லிதா பாரே... என்ன நடக்குதுனு தெரியும்” அவனை மிரட்ட..

“என்ன நடக்குதுனு பார்க்கனுமே” சொல்லிமுடிக்கும் முன்பே அவன் இதழ்களை சிறைப்பிடித்திருந்தாள் சரயூ.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

யற்கை எண்ணற்ற எழில் அதிசயங்கள் அடங்கியது! 

பிறந்த கணத்திலிருந்து காடு மேடு திரிந்து, பாரபட்சமின்றி பார்ப்போருக்கெல்லாம் உதவி புரிந்து, உயிர் வளர்த்து தன்னுடைய ஆர்பரிக்கும் பயணத்தை முடித்து, தன்னவனை சேரும் நதிமகள்.

பல உயிர்களை சுமந்து அமைதியும் ஆர்பரிப்புமாக இரு வெவ்வேறு குணாதிசயங்களை வெளிபடுத்தும் கடல் எத்தனை இதயங்களை கொள்ளையிடுகிறது.  கடற்கரையின் மணலும், அலைகளும், சூரியனை விழுங்கிடும் அதன் அழகும் திகைப்பைத் தருகிறது.

நதியும் கடலும் ஒருசேரக் காணக் கிடைக்கும் அற்புதம்! அதுவும் மதிமயங்கும் மாலைப்பொழுதில் அந்த அற்புதத்தை காணக் கிடைத்திருக்கும் சரயூ திகைப்பின் எல்லையில் வாயடைத்து போனாள்.   

திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக இப்போது தான் கிடைத்திருக்கும் மனமொத்த அமைதியைக் கொண்டாட இருவரும் விரும்பி ரசிக்கும்மொரு இடத்திற்கு செல்ல முடிவெடுத்தவனுக்கு தோன்றியது மரவந்தே பீச்.  கர்நாடக மாநிலத்தின் உடுப்பியருகே இருக்கும் மரவந்தேயின் சாலையொன்று கடலையும் நதியையும் பிரிக்கிறது.  சமயங்களில் கடலலைகள் சாலையின் பாதியைக் கடப்பதுண்டு.  அத்தருணத்தில் இன்னும் சற்று வேகத்தோடு பாய்ந்து, அலைகள், நதியை எட்டாதா என்று நம்மை ஏங்க வைப்பதுமுண்டு.

இருவரும் கைக்கோர்த்து நடக்க, இடது புறத்தில் இவளுக்கு பிடித்த நதியும், வலது புறத்தில் அவனுக்கு பிடித்த கடலும்.  வார்த்தைகளில் வடிக்க முடியா உணர்வொன்று நெஞ்சை நிரைத்திருக்க...அங்கிருந்த கல்லொன்றில் அமர்ந்து, கணவனின் தோள் சாய்ந்து, கண்கள் இயற்கையின் அற்புதத்தையும், உள்ளம் தன்னவனுடைய காதலையும் ரசித்தது.

என்னோட கதை எழுதும் பல நாள் கனவை நினைவாக்க வாய்ப்பளித்த சில்சீ டீமிற்கும்

இதுவரைக்கும் கதையை பொறுமையா படிச்சு, தங்களின் கருத்துகளால் என்னை ஊக்கப்படுத்திய,

Madhumathi, Adharvjo, Saaru, Mahinagaraj, Srivi, CV, Saju, Udhi, Anu, Bindu, Devi, Thenmozhi, Nanthini,  Vasumathi, Kannamma, Kiruthika, Shanthi, Shivani, Maayaa, Anjana, Janani, Jansi, Shivani, Subashree.

அமைதியா படிச்சிட்டு போன சைலெண்ட் ரீடர்ஸுக்கு கோடி நன்றிகள்!

தடைகளின்றி சாதனையில்லைனு எனக்கு சொல்லி கொடுத்தது இந்தக் கதை.  எழுதனும் என்ற ஆசையில தொடங்கிட்டாலும் கூட எத்தனை தடங்கல்கள்! எல்லாத்தையும் தள்ளி நிறுத்தி என்னோட முதல் முத்துக்கு வடிவம் கொடுத்தது ரொம்பவே ஸ்பெஷல் & ஹேப்பியா இருக்கு. 

அடுத்த கதையை தொடங்கலாம்னு ஒரு ஐடியா வச்சிருக்க மக்களே.  கூடியசீக்கிரம் சிச்சீ டீம்கிட்ட பேசிட்டு வருவ.  ESNM-லிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கே.  அதற்கும் உங்களின் அன்பான ஆதரவையளிக்க வேண்டுகிறேன்.

Episode 32

முத்து ஒளிர்ந்தது!

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.