(Reading time: 21 - 41 minutes)

“ஓகோ சார்க்கு அகல்யா பேபி வந்தவுடனே திஷா பேபி வேண்டாம போய்டாளா?”,என்று சலிப்பு குரலில் கேட்க ஒருநொடி அவளை பார்த்தவன் இறுக அணைத்து கதறித் துடித்து விட்டான்.ஒரு மாதமாய் அவளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவளிடம் விஷயத்தை கூறாமலே மறைத்தவனால் அழவும் முடியாமல் போனது..ஒரு மாத பாறத்தையும் அவள் தோளில் இறக்கி வைக்க எண்ணிணானோ கரைபுரண்ட வெள்ளமாய் கொட்டித் தீர்த்து விட்டான்.

“ஏங்க என்னாச்சு ஏன் இப்படி அழறீங்க..அகல்யா நல்லா இருக்கா தான??என்னாச்சு சொல்லுங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு..”

சற்று நேரத்தில் தெளிவானவன் அங்கிருந்த தண்ணீரை குடித்துவிட்டு அவள் முகம் பார்த்து அமர்ந்தான்.

“திஷாம்மா அகல்யா நம்மயெல்லாம் விட்டு…”,குரல் தழுதழுத்தது..

“என்ன சொல்றீங்க எப்போங்க..ஏன் என்கிட்ட சொல்லல..நானும் வந்துருப்பேன்ல..”

“இல்ல டா அது நடந்து ஒரு மாசம் ஆகுது சரியா நம்ம அகல்யா இந்த பூமிக்கு வந்தப்போ தான் அவ…”

என்ன கூறவென தெரியாமல் திஷானி சிலையென அமர்ந்திருக்க,”இங்க பாரு திஷாம்மா என்னை கேட்டா அவ பட்ட சித்ரவதைக்கு இது அவளுக்கு நிம்மதிதான்.அது மட்டுமில்லாம அவ நம்மளவிட்டு போகலையே இதோ இங்கேயே என் கூடவே தான் இருக்கா..இன்னைக்கு நீ பெயரை சொன்னப்போ ஒருநிமிஷம் ஹார்ட் பீட் ஸ்டாப் ஆய்டுச்சு டா நிஜமா..தேங்க் யூ சோ மச்..”

“என்ன அபிப்பா நீங்க இப்படியா மனசுக்குள்ளேயே போட்டு உங்களை கஷ்டபடுத்திப்பீங்க..என்னாலயே சட்டுனு ஜீரணிச்சுக்க முடில நீங்க என்ன பாடுபட்டுருப்பீங்க..நம்ம அகல்யா நம்மகிட்ட தான் இருக்கா தைரியமா இருங்க எங்களுக்காக..”,என்றவள் தாயாய் தன்னவனை தோள் சாய்த்துக் கொண்டாள்.

திஷானியிடம் மனம்விட்டு பேசிய பிறகு சற்றே தெம்பாய் உணர்ந்தான் அபினவ்.அன்றைய பொழுது இனிமையாய் கழிய மறுநாள் சாரு குழந்தைகளை பார்க்க வருவதாய் கூறியிருந்தாள்.

காலை உணவிற்குப் பின் பதினோரு மணியளவில் கணவன் குழந்தையோடு வந்தவளை அனைவரும் வரவேற்க அபினவ் அவள் கணவனுக்கு கேட்காதவாறு,

“அந்த நல்லவளே நீ தானாம்மா..என்ன ஒரு அடக்கம் என்ன ஒரு அடக்கம்..மச்சான் முன்னாடி பிண்ற போ..”

“வாய மூடிட்டு இருக்கல சாவடிச்சுருவேன் குரங்கு..”,என்று பல்லை கடித்தவாறே சாரதாவிடம் சென்று நின்று கொண்டாள்.

குழந்தையை பார்த்து வருவதாய் கூறி அவர்கள் அறைக்குச் செல்ல சில நிமிடங்களில் அவள் கணவன் அபினவோடு பேசி படியே வெளியே செல்ல சாரு திஷானியோடு அமர்ந்தாள்.

“இப்போ தான் வழி தெரிஞ்சுதா உங்களுக்கு?”

“ஹே அப்படியெல்லாம் இல்ல டா ஆபீஸ் விஷயமா மும்பை போய்ட்டேன் அப்பறம் இங்கேயும் சரியா இருந்தது அதனால தான்..சாரி டா..”

“அட சாரி எல்லாம் எதுக்கு சும்மா சொன்னேன்..ரொம்பவே நிறைவா இருக்குற பீல் சாரு..நீங்க மட்டும் சரியான நேரத்துல அவர்ட்ட விஷயத்தை சொல்லியிருக்கலனா என்னென்னவோ நடந்துருக்கும்..”

“இப்போ எதுக்கு பழசை பத்தி பேசிட்டு திஷானி..நிஜமா உங்களை இப்படி பாக்குறதுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு..இனி வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் தான் உங்களுக்கு சொந்தம்..ஹேப்பியா இருங்க சரிதான?”

“அவரை மாதிரி ஒரு ஹஸ்பெண்ட் கிடைச்ச அப்பறம் எனக்கு என்ன குறை இருந்துட போகுது..ரொம்பவே ஹேப்பியா தான் இருக்கேன்..தேங்க்ஸ் அ லாட்..”

“தேங்க்ஸ் மட்டும் தானா சாப்பிட எதுவும் இல்லையா பசிக்குது..”

“அதான குண்டுபூசணி எப்படி இன்னும் சாப்பிடாம இருக்கேனு நினைச்சேன் கேட்டுட்ட..”,என்றவாறே அபினவ் வந்தான்.

“டான்கி புருஷனோட வந்துருக்கேனேனு கொஞ்சம் அமைதியா குட் கேர்ளா இருக்கேன்..இல்லனா இன்னைக்கு புல்லா எனக்கு அர்ச்சனை நடக்கும்..அதுக்காக தான் பாக்குறேன் இல்ல இன்னைக்கு நீங்க சட்னி தான்..”

“ஹா ஹா அது தெரிஞ்சு தான நானும் ஆட்டம் போட்றேன் இன்னைக்கு மை டே மகளே தொலஞ்ச..வா வா சாப்ட உன் அவர் வெயிட்டிங்..”

அவனை கருவியவாறே அவள் செல்ல குழந்தைகள் உறங்கியதால் திஷானியும் சிரித்தவாறே அவர்களை பின் தொடர்ந்தாள்.

டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்திருக்க சாரு அடக்க சொவரூபியாய் அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தாள்.திஷானியும் அபினவும் சிரிப்பை கட்டுப்படுத்தியதை பார்த்தவள் அருகில் பழத்தின் அருகில் இருந்த கத்தியை கண்களால் காட்டியவள் கண்களாலேயே எச்சரித்தாள்.

“ம்மா இன்னைக்கு உங்க சமையல் நல்லாயில்லையோ என்னவோ சாரு இவ்ளோ அமைதியா சாப்டுறா இல்ல..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.