(Reading time: 21 - 41 minutes)

சீ அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு விரும்பி கல்யாணம் பண்ணிக்குறாங்க.அப்படி நடக்குற கல்யாணத்துல ஏற்கனவே அந்த விக்டிம் பெர்சனே கொஞ்சம் இன்பீரீயாரிட்டி காம்ப்ளக்ஸ்ல இருக்க வாய்ப்பு இருக்கு அப்படியிருக்கும் போது நாம சும்மா போற போக்குல போட்டு போற கமெண்டோ இல்ல பயன்படுத்துற வார்த்தைகளோ அவங்களை எத்தனை அளவு காயப்படுத்தும்.

அதுமட்டுமில்லாம நாம குடுக்குற இந்த தியாகி பட்டத்துக்காக அவங்க இந்த கல்யாணத்தை பண்ணிக்கல..மத்தவங்களுக்கு குறையா சுமையா தெரியுறது தனக்கு தெரியாத அளவு காதல் இருந்து கல்யாணம் பண்றவங்க தான் எங்களை மாதிரி எல்லாருமே..

இப்போ இந்த விஷயத்தையே ஒரு கப்பில் போட்டோக்கு எல்லார் கல்யாணத்துக்கும் விஷ் பண்ற மாதிரி திருமண வாழ்த்துக்கள் காட் ப்ளஸ் யூ போத்னு மட்டும் போடுறதுல ஒண்ணும் தப்பில்ல தான..

உடலின் குறைங்கிது எப்பவுமே பெரிய விஷயம் கிடையாது..உடம்பு நல்லா இருக்குற எத்தனை பேரோட மனசு குறையில்லாம சுத்தமா இருக்குதுனு நம்மால் சொல்லிவிட முடியுமா..

அதைவிடவும் முக்கியம் தன் உடல் பலகீனத்தை பொருட்படுத்தாது தன் பாதை தடைகளை மீறி ஒவ்வொரு நாளையும் கடக்குறவங்க முன்னாடி சாதாரணமா இருக்குற நாம தான் தகுதி குறைஞ்சவங்க..

எல்லா வசதியும் இருந்தும்கூட ஒண்ணுமில்லயேனு ஒருநாளாவது மனசுல தோணாதவங்க எத்தனை பேர் இருப்போம்.அவங்களுக்கெல்லாம் தன் உடல் உறுப்பே  சரியா இல்லாத நிலையிலும் தன்னம்பிக்கையோட இந்த சமூகத்தை எதிர் கொள்றாங்க..அப்படியிருக்க அவங்க எல்லாம் நாம பார்த்து ஆச்சரியபட வேண்டியவங்க தானே தவிர அனுதாப படவேண்டியவங்க இல்ல நிச்சயமா..

அதனால என் கதை பக்கா காதல் கதையா தான் வரணுமே தவிர எந்த எக்ஸ்ட்ரா எலமெண்டும் வேண்டாம்.உங்க தீசிஸோடா காப்பி நிச்சயம் வேணும் ஓ.கே தான?”,என மென்னகைக்க

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனும் பதிலுக்குச் சிரித்து கைக் குலுக்கினான்.

அவனை வாசல் வரைச் சென்று அனுப்பிவிட்டு வந்தவனை கண்கொட்டாமல் அவள் பார்த்திருக்க வழக்கம்போல் சோபாவில் படுத்து அவள் மடியில் தலை வைத்துக் கொண்டவன்,

“என்ன என் மூணுகால் அழகி மயக்கும் பார்வை பாத்துட்டு இருக்கா??ஸ்பெஷல் கவனிப்பு எதுவும் இருக்கா??”

“புத்தி போறத பாரு..அதெல்லாம் ஒண்ணுமில்ல கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆனாலும் ஏதோ நேத்துதான் கல்யாணம் ஆன மாதிரி என்ன விட்டுக் கொடுக்காம பேசுறீங்களே..அதை நினைச்சுதான் இப்படி இருக்கேன்..”

“நாலு என்ன நாற்பது வருஷம் ஆனாலும் நா இப்படிதான் பேபி இருப்பேன்..வழக்கமான டயலாக் தான் என் மொத்த காதலுக்கும் சொந்தகாரி, எஜமானி நீ தான்..இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்..”

“ம்ம் எனக்கும் அதான் வேணும் உங்களை எப்பவும் எந்த ஜென்மத்துலயும் யாருக்கும் விட்டு தரவே மாட்டேன்..

“எந்தன் ஊன் குறை மறந்து

உள்ளத்து  குறை அழித்து

வாழ்வை செழிவூட்டி

அழகாக்கிய அன்பன் நீ

ஏழேழு பிறவிக்கும்

உன் மாசற்ற

இவ்வன்பின் அழகியாய் நான்!!!”

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இந்த கதை ஆரம்பித்ததில் இருந்து ஆச்சரியம் அதிர்ச்சினு மிரள வச்சுட்டீங்கனு தான் சொல்லனும் ஒவ்வொரு வாரத்துக்கும் உங்க அத்தனை பேரோட பீட்பேக் என்னை நிஜமாவே கொஞ்சம் பயப்பட வச்சுதுங்கிறது தான் உண்மை...ரொம்பவே எக்ஸ்பெக்டேஷன் குடுக்குறோமே நல்ல படியா முடிக்கனுமேனு பயந்து பயந்து தான் எழுதினேன்..இப்படி ஒரு சப்போர்ட்டை நிச்சயமா எதிர்பார்க்கல..நன்றிங்கிற வார்த்தை நிச்சயமா போதுமானதா இருக்காது..இருந்தாலும் வேற எப்படி என் மரியாதையை வெளிப்படுத்தனு தெரில..சில்சீக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..

இந்த எபில மென்ஷன் பண்ண அந்த பேஸ்புக் டாபிக் தான் இந்த கதைக்கான முக்கிய காரணம் நிஜமா..அழகான காதல் உள்ளங்களை நாம ஏன் அனுதாப பார்வை பாக்குறோம்னு தோணிட்டே இருக்கும்நினைத்ததை நினைத்தபடி கொடுத்துட்டேன்..மொத்தத்தில் அன்பின் அழகு முழுமையாய் உங்களுக்கு வெளிப்பட்டதானு நீங்களே சொல்லுங்க

விரைவில் அடுத்த காதல் ஜோடிகளுக்கு புதிய பயணத்தை தொடங்க ஓடோடி வருகிறேன்.. 😊😊

முற்றும்

Episode # 16

{kunena_discuss:1198}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.