(Reading time: 21 - 41 minutes)

“அட நா கூட நினைச்சேன் சாரு ரொம்ப அமைதியா இருக்காளேனு எனக்கு தான் அப்படி தோணுதோனு நினைச்சு விட்டுட்டேன்.அப்போ நிஜமாவே சமையல் தான் காரணமா”,என அவரும் சேர்ந்து கலாய்க்க அவ்வளவு தான் கட்டிக் காத்த அத்தனை பொறுமையும் காற்றில் பறக்க வேகமாய் எழுந்தவள் தன் அருகிலிருந்த டம்ளர் தண்ணீரை அப்படியே எதிரிலிருந்த அபினவின் மேல் கொட்டியிருந்தாள்.

திஷானி விழுந்து விழுந்து சிரிக்க சாருவின் கணவனோ அதிர்ச்சியாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

“எரும மாடே இன்னைக்கு என்ன ஆகுறீங்கனு மட்டும் பாருங்க என்றவள் அடுத்த தண்ணீர் டம்ளரை கையில் எடுக்க அபினவ் வேகமாய் எழுந்து தள்ளி நின்றான்.

அதற்குள் அவளிடமிருந்த டம்ளரை பிடுங்கி கீழே வைத்த கணவனின் பார்வையில் அமைதியானவள் மனதினுள்,”செத்தேன் இன்னைக்கு..ஸ்டார்ட் மியூசிக்..”

“சாரு ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா நடந்துக்குற வந்த இடத்துல இப்படியா பிகேவ் பண்ணுவாங்க..உனக்கு எப்போதான் பொறுப்பு வரப் போகுதோ..சாரி அபினவ்..”

“ஐயோ இப்படி ஆகும்னு தெரிஞ்சு தான் அவகிட்ட வம்பு பண்ணேன்..நீங்க தப்பா எடுத்துக்காதீங்க..”

“சுத்தம் அப்போ என்னை விட உங்க நிலைமை மோசம் போலயே திஷானி”,என்றவன் சிரித்தான்.

அன்றைய பொழுது அதை விட இனிமையாய் நகர முடியுமா என்றே தோன்றியது.அத்தனை சந்தோஷத்தோடு சாரு விடைபெற திஷானிக்குமே மனது நிறைந்து விட்டிருந்தது.

இரவு அபினவோடு அமர்ந்திருந்தவள்,”இன்னைக்கு சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறே வலிச்சுருச்சு..அத்தனை மெச்சூர்ட்டான சாரு இவ்ளோ சில்லியா பிகேவ் பண்றாங்க அந்த அண்ணாவும் அவ்ளோ கேஷ்வலா எடுத்துகிட்டாங்க..”

“ம்ம் அதானே திஷா பேபி லவ்வோட மகிமை..ஒருத்தரை அவங்களாவே ஏத்துகிட்டா மட்டும் தான் லவ்வை முழுசா பெற முடியும் தரவும் முடியும்.இப்போ என் பொண்டாட்டி கூட அப்பப்போ அழுமூஞ்சியா தான் இருக்கா நா அட்ஜெஸ்ட் பண்ணிக்கலையா?”

செல்லமாய் அவன் கையை கிள்ளியவள்,”இனி நா எதுக்காகவும் அழ மாட்டேன்..என்ன பெட்??”

“ம்ம் நம்ம பட்டூஸ்க்கு சிப்ளிங்க்ஸ் ரெடி பண்ணிரலாம்..எப்படி என் பெட்??”

“ஐயே ஆசை தான்..”,என்றவள் சலுகையாய் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

மூன்று  வருடங்களுக்குப் பிறகு,

அபினவ் திஷாவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அந்த மாலில் சுற்றிக் கொண்டிருந்தான்.

“ம்மா ஒரே ஒரு ஐஸ்க்ரீம் ப்ளீஸ்..”

“ஆமா ஆமா ஒன் தான் எனக்கு ஒண்ணு அக்காக்கு ஒண்ணு..ப்ளீஸ்..”

“ம்ம் ஆமா ரொம்ப பெரிய ஆள் இவ..ரெண்டு நிமிஷம் முன்னாடி பொறந்துட்டு ரொம்ப தான் மரியாதை..அபிப்பா நீங்க தான் வேண்டாம்னு சொல்லணும் இங்க என்னனா நீங்களும் கூட சேர்ந்து லூட்டி அடிக்குறீங்க..”

“நா என்ன பண்ண பேபி பசங்க தான் கேக்குறாங்க..”என்றவன் தோளை குலுக்கினான்.

“பேபி பேபி ப்ளீஸ்..”,என அகல்யாவும் அகிலும் ராகம் பாட அபினவை முறைத்தவள் எடுத்தா கொடுக்குறீங்க..வீட்டுக்கு வாங்க பாத்துக்குறேன்..”

அவளிடம் காரியம் சாதிக்க குழந்தைகளுக்கு எளிதான வழி தந்தையை போன்றே அவளை பேபி பேபி என ஒரு வழியாக்கி விடுவர்..

நினைத்தபடியே ஆளுக்கொரு ஐஸ்கீரிமை வாங்கிக் கொண்டு அங்கிருந்த டேபிளில் அமர்ந்தனர்.

சற்று நேரம் கழித்து அவர்கள் அருகில் வந்த புதியவன் அபினவிடம்,”எக்ஸ்கீயூஸ் மீ சார்..”

“எஸ் சொல்லுங்க..”

“சார் ஐ அம் விக்கி..ஜெர்னலிஸம் பைனல் இயர் ஸ்டூடண்ட்..”

“சொல்லுங்க என்ன விஷயம்..”

“இல்ல நா ப்ராஜெக்ட்காக ரொம்ப நாளா ஆர்டிகல் தேடி அலைஞ்சுட்டு இருக்கேன்..இன்னும் டூ டேஸ்ல சப்மிட் ண்ணணும்..பட் எதாவது வித்யாசமா கிடைக்கட்டும்னு தேடி தேடி அலுத்துப் போய்ட்டேன்..இன்னைக்கு உங்களை பார்த்தவுடனே உங்களை பத்தி எழுதலாம்னு தோணுது..”,என்று தயங்கியவாறே திஷானியை பார்த்வாறு கூறினான்.

அபினவுமே திஷானியை பார்க்க அவளோ இயல்பாய் எப்போதும் போல் குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

“சாரி ப்ரோ..இதெல்லாம் சரி வராது அதுமட்டுமில்லாம நீங்க எதிர்பாக்குற எந்த வித்யாசமும் இங்க இல்லை அதை புரிஞ்சுகோங்க..”

எவ்வளவு கூறியும் அவன் மீண்டும் மீண்டும் பேச்சை தொடர அவன் நிலைமை உணர்ந்தவளாய்,”அபிப்பா ஏதோ ஒருநாலு கேள்வி பதில் சொல்லிட்டு போங்களேன்..பாவம் லாஸ்ட் மினிட் வேற வழியில்லை தான..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.