(Reading time: 13 - 26 minutes)

"அந்த புது ரெஸ்டாரண்ட்டால எங்க தொழில் கடுமையா பாதிப்படைஞ்சிடுச்சு. எங்களை விட கம்மியான விலையில அவன் உணவு கொடுத்தான். இந்த இடத்துல அந்த தொழில் போட்டிய எப்படி சாமாளிச்சிருப்ப வசந்த்?"

"நான் உணவை இன்னும் சுவையா தரமா கொடுத்திருப்பேன் சார்"

ஃப்ராங்க்ளின் சிரித்தார்.

"தப்பு வசந்த். அது இன்னும் லாஸ்ல தான் போய் முடியும். இங்க சுவை பிரச்சனையில்லை, விலை தான் பிரச்சனை. கம்மியா சம்பளம் வாங்குறவன் விலையை பாத்து தான் சாப்பிடுவான். இப்போ நீ என்ன முடிவெடுத்திருப்ப?"

"எனக்கு இந்த பிஸினஸ் பத்தியெல்லாம் சரியா தெரியாது சார்"

"என் அப்பா ஒரு முடிவெடுத்தாரு. அதை எல்லாரும் முதல்ல முட்டாள்தனமான முடிவுன்னு கேலியா சொன்னாங்க. நானும் அப்படி தான் நினைச்சேன்"

"அப்படி என்ன சார் முடிவெடுத்தாரு?"

"அந்த ரெஸ்டாரண்ட்டை விட ரொம்ப கம்மியான விலையில உண்வு கொடுத்தாரு"

"பயங்கரமான நஷ்டம் வந்திருக்குமே"

"ஒரு வருஷத்துக்கு ஒண்ணுமே இல்லை"

"அப்புறம் என்ன ஆச்சு?" வசந்த் ஆர்வமாய் கேட்டான்.

"போட்டிய சமாளிக்க முடியாம எதிர்ல ரெஸ்டாரண்ட் வச்சிருந்தவன் வேற இடத்துக்கு போயிட்டான்"

வசந்தின் முகத்தில் லேசான தெளிவு பிறந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"என் அப்பா அதே விலையில தான் பிஸினஸ் பண்ணுவேன்னு முடிவெடுத்திருந்தா எங்களால தொழில் செஞ்சிருக்க முடியாது. ஒரு வருஷ நஷ்டம் எங்கள ஆயுளுக்கும் நஷ்டம் வராம காப்பாத்துச்சு"

"அது எல்லாம் சரி தான் சார். என்னை எதுக்கு வரச் சொல்லி அலைக்கழிச்சிங்க? அதுக்கு பதில் சொல்லுங்க"

"உங்க பொறுமைய பாக்கணும்னு விரும்பினேன் வசந்த். உங்க லட்சியத்துக்காக நீங்க எந்த அளவு பொறுமையா இருக்கிங்கன்னு பாத்தேன். ஆனா உங்களுக்கு பொறுமையே இல்லை"

ஃப்ராங்க்ளின் சொல்வதை உன்னிப்பாக கேட்டான் வசந்த்.

"பொறுமையில்லாதவங்க எப்பவும் வேலையை சரியா முடிக்க மாட்டாங்கன்னு என் அனுபவம். நீ இன்னும் முழுமையா தகுதி பெறல வசந்த். திறமையிருந்தாலும் இன்னும் பொறுமை வரல"

வசந்த் நெற்றியை மெதுவாய் தடவினான். ஃப்ராங்க்ளின் சொன்னதைக் கேட்டு அவனுக்கு கோபமும் வருத்தமும் வந்தது.

"ரொம்ப நன்றி சார்"

"எதுக்கு?"

"முழுசா புரியலனாலும் ஏதோ ஒரளவு புரிய வச்சதுக்கு"

"எனக்கு இன்னைக்கு மனசு கொஞ்சம் ரிலாக்ஸா இருந்ததால சில விஷயங்கள் மனசு விட்டு பேச முடிஞ்சது. இனி இது போல எப்போ பேச போறேன்னு தெரியல" என நிறுத்திய ஃப்ராங்க்ளின் அமேலியாவை ஒரு முறை நோக்கினார்.

"வசந்த்"

"சொல்லுங்க சார்"

"அந்த அழகான பொண்ணு யாருன்னு கடைசி வரைக்கும் சொல்லலையே"

வசந்த் அமேலியாவை நோக்கினான். அவள் நிலாவோடு விளையாடிக்கொண்டிருந்தாள்.

"என் காதலி சார்"

"நினைச்சேன். அவங்க தான ஓவியம் வரைஞ்சு கொடுத்தது?"

"ஆமா சார்"

"ரொம்ப களையான அமைதியான முகம். நீங்க உள்ள வரும்போதே அந்த முகத்தை பாத்தேன். ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பன்னேன். நீங்க கொடுத்து வச்சவரு மிஸ்டர் வசந்த்"

வசந்த் அமேலியாவின் முகத்தை பார்த்தபடியே இருந்தான். ஃப்ராங்க்ளின் சொல்வது அனைத்தும் உண்மை என அவன் உள்ளம் கூறியது.

"ஓகே மிஸ்டர் வசந்த். உங்க அவசரம், கோபம் எல்லாத்தையும் என்னைக்கு மூட்டை கட்டுறிங்களோ அன்னிக்கு நாம திரும்ப சந்திக்கலாம்" என ஃப்ராங்க்ளின் வசந்திடமும் குடும்பத்திடமும் விடைபெற்று வெளியேற, வசந்த் சிலையென அமர்ந்திருந்தான்.

தொடரும்...

Episode # 55

Episode # 57

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.