(Reading time: 18 - 36 minutes)

அந்த பெரிய பங்களாவை வாயை பிளந்து பார்த்தப்படியே யாதவி தன் தந்தையோடு உள்ளே நுழைந்தாள்.

“ இது ப்ரொட்யூசரோட ஃபார்ம் ஹவுஸாம்.. இங்க தான் அவர் மகன் நடிக்கிற ரெண்டாவது படத்துக்கான கதை கேக்கறாராம்.. கூடவே ஹீரோயின் மத்த நடிகர்கள் செலக்‌ஷனும் இங்க வச்சு தான் பார்க்கிறாங்க.. என் ப்ரண்ட் பூபதி தான் ப்ரொட்யூஸரை பார்க்க சான்ஸ் வாங்கிக் கொடுத்தான்..” என்று பேசியப்படியே அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.

சிறிது நேர காத்திருப்புக்கு பின் அவர்களை அழைத்தவர்கள், அவளை நடக்கச் சொல்லி, நடிக்க சொல்லி, பேசச் சொல்லி, ஆடச் சொல்லி என்று பார்த்தனர். அனைத்தையும் அவள் கொஞ்சம் சொதப்ப,

“நீ கொஞ்சம் நேரம் வெளியில் இரும்மா..” என்று அவளிடம் சொன்ன வசந்தன்,

அவள் சென்றதும், “என்னப்பா பொண்ணு அழகா இருக்கு ஓகே.. ஆனா நடிப்பெல்லாம் கொஞ்சமும் வரலையே.. இந்த படத்தில் நடிகைக்கும் கொஞ்சம் நடிப்பு வரணும்.. அப்போ தான் நல்லா இருக்கும்..” என்று பன்னீரிடம் வசந்தன் சொல்லிக் கொண்டிருந்தார். அங்கிருந்த இயக்குனரும் அதையே தான் கூறினார்.

“சான்ஸ் கொடுத்து பாருங்க.. அதுக்குள்ள நல்ல நடிக்க கத்துக்குவா..” என்று பன்னீர் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“இது எவ்வளவு பெரிய ப்ராஜ்க்ட் தெரியுமா? நஷ்டமாச்சுன்னா என்ன செய்ய.. அடுத்த ப்ராஜக்ட்ல பார்ப்போம்..” என்றார் வசந்தன். பன்னீரும் அவர்களை சம்மதிக்க வைக்க கொஞ்சம் போராடி பார்த்தார்.

இங்கு விட்டால் போதும் என்று வெளியே வந்த யாதவி சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்க்க, அங்கு சோகமே உருவாக ஒருவன் நின்றிருக்க,

“என்ன ஓகே பண்ணலையா?” என்றுக் கேட்டப்படி யாதவி அவன் அருகில் சென்றாள்.

அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியாமல் அவன் அவளைப் பார்க்க, “என்ன நீ சான்ஸ் கேட்டு தானே வந்த.. உன்னை ரிஜக்ட் செஞ்சுட்டாங்களா?” என்று அவனிடம் கேட்டாள்.

அதைக்கேட்ட சாத்விக்கிற்கு வியப்பாக போயிற்று, அவனை யாரென்று தெரியாமல் அவள் பேசியதில் அவன் வியப்படைந்தான்.

இப்போது தான் ஒரு படம் நடித்து முடித்திருக்கிறான். அதன் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்திருந்தது. இன்னும் படம் வெளிவரவில்லை என்றாலும், டி.வி, இணையதளம், பத்திரிக்கைகள் மூலம் சாத்விக்கை பற்றி தெரிந்துக் கொண்டு இளம்பெண்களிடம் அவன் பிரபலமாகிவிட்டிருந்தான். அவன் நடித்த படத்தின் பாடல்கள் தான் இப்போது பல பேர் வாயில் முனுமுனுக்கப்படுகிறது. அப்படியிருக்க அவனை தெரியாதது போல் அவள் பேசியதில் வியப்படைந்தவன்,

“ஆமாம் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ண சொல்லியிருக்காங்க.. என்ன சொல்வாங்கன்னு தெரியல.. ஆமாம் நீயும் சான்ஸ் கேட்டு தான் வந்தீயா?” என்றுக் கேட்டான்.

“எங்க அப்பா தான் கூட்டிட்டு வந்தாரு.. எனக்கு இதில் இஷ்டமில்ல.. அவங்க என்னை ரிஜக்ட் செய்யணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன்..” என்றாள்.

“அப்போ எதுக்கு இங்க வந்த?” என்று அவன் கேட்க,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அது அப்பாக்கிட்ட நல்ல லெஹங்கா எடுத்து தரச் சொல்லியிருக்கேன்.. எப்படியோ ரேஸ்ல ஜெயிக்கிற பணத்தை வீட்ல கொடுக்க போறதில்ல.. அதான் இப்படி நான் வரணும்னா நீ எனக்கு இது வாங்கித் தரணும்.. அது வாங்கித் தரணும்னு கேட்பேன்..” என்றாள்.

அவளுடன் பேசுவது அவனுக்கு சுவாரஸியமாக இருந்தது. இங்கு வந்ததிலிருந்தே அவன் கவலையோடு இருந்தான்.

சிறுவயதிலிருந்தே வீட்டில் வசந்தன் எடுக்கும் முடிவுக்கு தான் அனைவரும் கட்டுப்பட வேண்டும். அதில் சாத்விக்கிற்கு எப்போதும் வருத்தம் தான், அன்னையிடம் பற்றுதல் இருந்தாலும் அவன் விஷயத்தில் தந்தை எடுக்கும் முடிவு பிடிக்காததால், கல்லூரி படிப்பு முடிந்ததும் மேற்படிப்பு வெளிநாட்டில் இருக்க வேண்டும்.  அங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் இருந்தான்.

ஆனால் கல்லூரியின் இறுதி ஆண்டில் இருக்கும் போதே அவருக்கு யாரோ சினிமா ஆசை காட்டியிருக்க, படத்தயாரிப்பில் இறங்கியவர், முதல் படமே சாத்விக்கை நடிக்க வைக்க நினைத்தார். அதுவும் பிரபலமாய் இருக்கும் இயக்குனரை வைத்து தயாரிக்க முடிவு செய்தார்.

சாத்விக்கிற்கு அதில் சுத்தமாக விருப்பமில்லை. ஆனால் அவன் மறுப்பை அவர் பொருட்படுத்தாமல் முழு மூச்சாக அந்த வேலையில் இறங்கினார். அவனது மறுப்பின்மையை அவன் நடிப்பில் காட்ட, இயக்குநர் பிரபலமான ஆள் என்பதால், அவர் சாத்விக்கிடம் கண்டிப்பு காட்ட, அதனாலேயே அவன் கொஞ்சம் ஒழுங்காக நடிக்க ஆரம்பித்தான்.

படப்பிடிப்பும் முடிந்து அது இன்னும் வெளிவராத நிலையில், ஓய்வெடுக்க என இங்கு வந்து இரண்டாவது படத்திற்கான பேச்சு நடந்துக் கொண்டிருப்பதில் எரிச்சலாகி இப்படி தனியே வந்து நின்றுக் கொண்டிருந்த போது தான், அவள் இங்கு வந்தாள்.

“உன்னோட பேர் என்ன? நீ படிக்கிறீயா? என்ன படிக்கிற..” என்ற கேள்விகளுக்கு அவளும் பதில் கூறினாள்.

“இங்கப்பார் யாதவி.. உனக்கே விருப்பம் இல்லைங்கிறப்போ எதுக்காக இங்கல்லாம் வர.. எப்போதும் நாம நினைக்கிறது போல நடக்காது.. திடீர்னு வேற மாதிரியும் ஆகலாம்.. அதனால இனி இப்படி உன்னோட அப்பா கூப்பிட்டா போகாத.. சினிமா ஒன்னும் வெளிய இருந்து பார்க்கிறது போல உள்ளேயும் இருக்காது..” என்று அவன் சொல்ல, அவளும் சும்மா தலையாட்டி வைத்தாள்.

“ஆமாம் உன்னோட பேர் என்ன? எந்த கேரக்டருக்கு உன்னை கூப்பிட்டிருக்காங்க..” என்று அவள் கேட்கும் நேரம்,

“யாதவி..” என்று பன்னீர் எரிச்சலோடு தூரமாக அவளை தேடியப்படி கூப்பிட்டார்.

“மேட்டர் ஊத்திக்கிச்சு போல, அப்பா டென்ஷனா இருக்கார்.. அவர் யாதவின்னு கூப்பிட்றதிலேயே தெரியுது.. என்னோட ஆசை நிறைவேறிடுச்சு.. அதேபோல உன்னோட ஆசையும் நிறைவேறணும்.. உன்னை செலக்ட் செய்யணும்.. ஆல் தி பெஸ்ட்..” என்றவள்,

“கனவுக்குள் வந்து காதலை கொடுத்தான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் " உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்..." - நட்பு கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

யாரவன் யாரவன்..”

என்று அவன் நடித்த படத்தின் பாடலையே அவள் வாயில் முணுமுணுத்துக் கொண்டு போக,

“புயல் போல் வந்து பூக்களை கொடுத்தாள்..

யாரவள் யாரவள்..”

என்ற அடுத்த வரியை பாடி சாத்விக் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

மையல் தொடரும்..

Episode # 17

Episode # 19

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.