(Reading time: 18 - 36 minutes)

தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 11 - மகி

valentines

ந்த காதல் எப்படி வரும்.. எப்படி இருக்கும்.. இது தான் காதல்ன்னு எப்படி கண்டுபிடிக்கரது..

இப்படி ஒரு கேள்வியை மகள் கேட்பாள் என்று பெற்றோர் நினைக்கவே இல்லை.. இருந்தும் இருவரும் புன்னகைத்தனர்.. பின் கண்ணன் பேச ஆரமித்தார்..

காதல்... இதை எல்லாம் ஒருத்தர் சொல்லி தான் வரும்ன்னு இல்லடா.. அது ஒரு வகையான உணர்வுடா.. கண்டிப்பா அதை சொல்லி புரியவைக்க முடியாது.. தன்னால உணரனும்.. மனுகுட்டி..

மனும்மா.. காதல்ங்கரது உணர்வுல கலந்து இருக்கரதுடா செல்லம்.. என கமலா கூறினார்..

அம்மா..  அந்த உணர்வை எப்படி கண்டுபிடிக்கரது..

யாரும் இதை ஒழிச்சு வைக்கல செல்லம்.. தேடி கண்டுபிடிக்கரதுக்கு..

ஆனா..

சரி.. மனுகுட்டி.. நான் உங்க அம்மாவ எப்படி காதலிக்க ஆரமித்தேன்னு சொல்லரேன்.. அப்போ உனக்கு கொஞ்சம் புரியும்..

ம்.. சொல்லுங்க.. கதை கேட்க தயாரானாள்..

அப்போ நான் கல்லூரி படிச்சிட்டு இருந்தேன்.. எங்க காலத்துல கல்லூரிக்கு போரது எல்லாம் ரொம்ப பெரிய சாதனை.. எங்க அப்பா கொஞ்சம் பணக்காரர்.. அந்த காலத்திலையே நூல்மில் வெச்சு பெருசா நடத்திகிட்டு இருந்தாங்க.. அதன் மூலமா தான் நானும் கல்லூரி படிக்க முடிந்தது.. அந்த சமயத்துல தான் எனக்கு கல்யாணம் பன்னி வைக்கரத பத்தி வீட்டுல பேச்சு வந்தது..

என்ன அப்பவே கல்யாணமாப்பா..

மனும்மா.. எங்க காலத்துல இது ரொம்ப லேட்.. என்கூட ஐந்தாவது வரைக்கும் படிச்ச பசங்க எல்லாருக்கும் அப்போ.. ரெண்டு மூணு பிள்ளைகள் இருந்தது... நான் மட்டும் தான் இன்னும் கல்யாணம் பன்னிக்காம இருந்த ஒரே ஆள்..

என்னை இதுக்கு மேலவிட்டா பிடிக்க முடியாதுன்னு... எனக்கும் கல்யாணம் பன்ன முடிவு செய்து.. ஒரு பெரிய இடமா பாத்து முடிவு எடுத்தாங்க.. ஒருநாள் பொண்ணு பார்க்க போனோம்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "யானும் நீயும் எவ்வழி அறிதும் " - காதல் கலந்த Sci-fi தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

வாவ்.. அப்பா.. தாத்தா இப்படி எல்லாம் பன்னாங்கலா..

என்னுடைய அப்பா எப்பவும் எதார்தவாதி.. அவர் ரொம்ப வித்திசமானவர்.. எனக்கு சில நேரங்கல்ல உன்னை பார்க்கும் போது அவர் தான் என் நினைவுக்கு வருவார்..

நான் தாத்தா மாதிரியாப்பா..

ஆமான்டா..

அப்பரம் சொல்லுங்க என்ன ஆச்சுன்னு..

நாங்க எல்லாம் கார்ல பெரிய சீர்வரிசையோட பெண்ணை பார்க்க போனோம்.. அங்க ஊர்ல இருந்த எல்லாரும் வந்து இருந்தாங்க..

அங்க எல்லாரும் பேசிகிட்டே இருக்க.. எங்க அப்பா தான் பொண்ண வந்து என் பையனை பார்க்க சொல்லுங்க.. பிடிச்சிருகான்னு கேட்கனும்ன்னு சொன்னார்.. எல்லாரும்..

இதுல பொண்ண கேக்க என்ன இருக்கு.. நம்மலா பாத்து என்ன சொன்னாலும் அதை என் பொண்ணு தட்டாம செய்வான்னு சொன்னாங்க..

வாழ போரது நீங்களோ.. நானோ இல்ல.. அந்த பொண்ணும் என்னோட பையனும் தான்.. எனக்கு அவங்க சம்மதம் தான் ரொம்ப முக்கியம்.. ஒருவேள பொண்ணுக்கு என் பையனை பிடிக்கலைன்னா இந்த கல்யாணத்தை நிறுத்தவும் நான் தயங்கமாட்டேன்னு.. அவர் அவ்வளவு உறுதியா சொன்னார்.. அவர எதிர்த்து பேச அங்க யாருக்கும் தைரியம் வர்ல.. என்ன பொறுத்த வரைக்கும் என்னோட அப்பா தான் எனக்கு எல்லாத்துக்கும் முன்உதாரணம்.. நான் அவர போல தான் இருக்கனும்ன்னு நினைச்சேன்.. இப்போ வரை முயற்சி செய்யரேன்..

தாத்தா சூப்பர் இல்ல.. சரி இன்னும் லவ்ஸ்டோரிக்கு வர்லையே..

சொல்லரேன்.. என் அப்பா அப்படி சொல்லவும்.. பொண்ண அழைச்சிட்டு வர போனாங்க.. கொஞ்ச நேரம் போகவும்.. இதோ இந்த மகாராணி தலையகுனிஞ்சுகிட்டே.. வந்து எல்லாரையும் பார்த்து மொத்தமா வணக்கம் சொன்னங்க..

எனக்கு பொண்ண சுத்தமா பிடிக்கல..

பொண்ண பிடிக்கலையா... என்ன ஆச்சு அப்பா..

ஹாஹா.. எப்படி பிடிக்கும் ஐய்யாவுக்கு.. நான் தான் அவர பாக்கவே இல்லையே.. வந்ததுல இருந்து இவரும் என்ன வச்சுகண்ணு வாங்காம பாத்துகிட்டு தான் இருந்தார்.. என்னால அவர நிமிர்ந்து பாக்க முடியல்ல ரொம்ப வெட்கமா இருந்தது.. அதான் கோவம்.. ஆனா நான் பிடிச்சு இருக்குன்னு சொன்னதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு..

இன்னொரு காரணமா... ஒன்னு உங்களுக்கு அப்பாவ பிடிச்சு இருக்கு இன்னொன்னு என்ன காரணம் அம்மா..

உங்க தாத்தா..

தாத்தாவா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.